Thursday, December 10, 2020

 #லோகியா_விகேகிருஷ்ணமேனன்_ஹரால்ட்_லாஸ்கி

———————————————————-


டாக்டர் லோகியா அவரை நினைக்கும்போதெல்லாம், தலைசிறந்த ஒரு அறிவாளி, தியாகி, இறுதிமூச்சு விடுகின்ற காலம் வரை முக்கிய எந்தப் பொறுப்பிலும் இல்லாமலேயே காலமானார் என்பதுதான்.
அதேபோன்றுதான், அரசியலுக்கு இலக்கணம் வகுத்த, சோஷலிச சித்தாந்தத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பேராசிரியர் ஹரால்ட் லாஸ்கி(Harold Laski) திறமையிருந்தும், ஆற்றலிருந்தும், அறிவிருந்தும், கூரான சிந்தனையிருந்தும், எந்தப் பொறுப்பிலும் அவரால் வரமுடியவில்லை.
ஒருவேளை, இது ஜனநாயகத்தின் பலவீனமோ அல்லது மக்கள் மந்தைக் கூட்டம் என்பதற்கு ஏற்ற எடுத்துக்காட்டா- விளங்கி கொள்ள முடியவில்லை.
இந்தியாவின் விடுதலைக்காகத் தியாகம் செய்த அந்த வீரத் தலைவனை நினைவுகூர்ந்து பார்க்கின்ற அளவுக்கு இன்றைய இளந்தலைமுறை இல்லை.
இங்கிலாந்து நாட்டுக்குப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் செல்லும்போதெல்லாம், தான் உருவாக்கிய “இந்தியா லீக்”(India League) என்ற ஸ்தாபனத்தின் மூலம், வெள்ளையனை எதிர்த்து, அவனது ஆதிக்கத்திற்கு அறைகூவல் விடுகின்ற வாய்ப்பினைப் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு உருவாக்கித் தந்த வி.கே.கிருஷ்ணமேனனைப் பற்றி இந்த தலைமுறை முழுமையாக மறந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.
டாக்டர் லோகியா யாவைச் சிலபேர்கள் மறந்தாலும், அவரது தூய தொண்டும் தியாகமும் காஷ்மீரிலியிருந்து கன்னியாகுமரிவரை நிலைத்து நிற்கும். அந்தச் சூழ்நிலைகளை உருவாக்குகின்ற வகையில் இளந்தலைமுறையைச் சார்ந்த துடிப்புள்ள இளைஞர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது ஆசை!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
8-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...