———————————————————
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15ஆம் தேதியை உலக குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது. குடியரசு அல்லது ஜனநாயகம் என்கிற சிந்தனை மனித குலத்தில் தோன்றி 2600 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. கி.மு.5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோவின் நூலின் பெயரே ‘குடியரசு’ தான்.
‘ஜனநாயகம்’ எனும் தத்துவம் உருவெடுத்தது கிரேக்கத்தில் . ஏதென்ஸ் நகர அரசுகளால் ஜனநாயகம் அடிப்படை தத்துவமானது.
‘குடியரசு’ என்ற வார்த்தை இத்தாலியில் உருபெற்று, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியரசு தலைவர் ஆட்சி நடக்கின்றது.
ஜனநாயகம் , குடியரசு ஆகிய இரண்டுமே மக்களின் பிரதிநிதித்துவம் என்றாலும், இக்கோட்பாடுகளில் அடிப்படையில் சிலசில மாறுபாடுகள் இதன் செயல்பாட்டில் உள்ளன.
போன நூற்றாண்டின் பாதிக்குப் பிறகு தற்போதைய குடியரசுகளில் 80% உருவாகின. அதில் நமது இந்தியக் குடியரசும் ஒன்று.
மக்களாட்சி, குடியரசு, ஜனநாயகம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் Democracy என்ற சொல்லுக்கு மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வது என்பது பொருள். இதைத்தான் ஆபிரகாம் லிங்கன், 1863ஆம் ஆண்டு நிகழ்த்திய தனது கெட்டிபெர்க் பேருரையில் ‘மக்களுக்காக மக்களை மக்களே ஆள்வதுதான் மக்களாட்சி’ என்றார். பிரெஞ்சுப் புரட்சியின் ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற உயர்வான விழுமியங்களே ஜனநாயக அரசுகளின் தாரக மந்திரம்.
இன்று உலகம் முழுவதும் 90% நாடுகளில் பல்வேறு வகையான ஜனநாயகங்கள் அமுலில் உள்ளன. சவுதி அரேபியா, ஓமம், அரபு நாடுகள், கத்தார், புருனே மற்றும் வாட்டிகன் ஆகியவை மட்டுமே இன்னமும் மன்னராட்சி தொடரும் நாடுகள். மற்ற நாடுகளில்
ஏதேனும் ஒருவகை ஜனநாயகமே அமுலில் உள்ளது.
இரண்டு வகை ஜனநாயகம்!
——————————————————
பொதுவாக இருவகை ஜனநாயகங்கள் உலகில் உள்ளன. ஒன்று நேரடி மக்கள் அதிகார பங்கேற்பு. இன்னொன்று பிரதிநிதிகள் மூலமான அதிகாரப் பங்கேற்பு. இதில் இரண்டாம் வகையே உலகில் அதிகமாக நடைமுறையில் இருக்கின்றன. இதில்தான் பார்லிமெண்ட் ஜனநாயகம், அதிபர் ஜனநாயகம் மற்றும் இரண்டும் கலந்த நீர்ம ஜனநாயகம் ஆகிய வகைகள் உள்ளன. நாம் பிரதமர், ஜனாதிபதி என இரு அதிகாரத் தலைவர்களால் நிர்வகிக்கப்படும் நீர்ம ஜனநாயக வகைமையைச் சார்ந்தவர்கள். மக்கள் நேரடி ஜனநாயகம் அல்லது பரிசுத்த ஜனநாயகமும் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளன. இதில் மக்கள் நேரடியாக நிர்வாகத்தில் ஈடுபடுவார்கள். மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு இது சாத்தியம்.
•••
உலகளவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது?
1)ஜனநாயக வகை
நாடுகளின் எண்ணிக்கை
2)நாடுகளின் சதவீதம்
3)மக்கள்தொகை
சதவீதம்
முழுமையான ஜனநாயகம்
19
11.4
45
பாதி ஜனநாயகம்
57
34.1
44.8
பராமரிப்பு நாடுகள்
39
16.7
23.4
சர்வாதிகார ஜனநாயகம்
52
31.1
34
இந்தியாவில் ஜனநாயகம்!
———————————————————
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாமே சொல்லிக் கொண்டாலும், உலக அளவிலான தரவரிசைப் பட்டியலில் நாம் 42வது இடத்தில்தான் இருக்கிறோம். முழுமையான ஜனநாயகப் பட்டியலுக்கு இன்னமும் முன்னேறவில்லை. குறிப்பாக இந்தியா, கருத்து சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாகக் கருதப்படுகிறது. தேர்தல் நடத்தை, அரசுகளின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் நாகரிகம், குடிமையியல் உரிமை என பல்வேறு அம்சங்களில் நாம் சராசரிதான். ஒட்டுமொத்த ஜனநாயக செயல்பாட்டிலும்சந்திக்கும் சவால்கள்:
• வாக்களிப்பு பங்கேற்பில் உருவாகிவரும் சரிவு.
• சரியான தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாது.
• பொதுவாழ்வில் சுயம்நலம் கொண்ட அரசியல் வியாபாரிகள், காசு கொடுத்து ஓட்டை பெற்று மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெறுவது.
•சிறையில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் நாடாளுமன்றம், சட்டமன்றம் அதற்கும் மேலாக, அமைச்சர்களாக பொறுப்பில் இருப்பது.
• தகுதியான, பொருத்தமானவர்களை, உழைத்தவர்களை அரசியல் கட்சிகள் புறகணித்துவிட்டு, தகுதியற்றவர்களை அங்கீகரித்தல்.
• ஜனநாயகம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான சுயநல எண்ணத்தோடு பெருகிவரும் அரசியல் கட்சிகள்.
• லோக் பால் மசோதா, சரியாக நிறைவேற்றபடாமல் இருப்பது.
•நாட்டின் முதுகெலும்பான சாதாரண மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்தை அழிப்பது.
•பன்னாட்டு நிறுவனங்கள், அரசியலில் ஊடுருவி தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது.
•பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் பிரச்சினைகள் அல்லாதவைகளை பிரச்சினைகளாக கொண்டு போராடுவது. 'Issues are non-issues here, but non-issues are serious Issues, hate to agitate, that is the negative approach in everywhere.'
•அரசு நிர்வாகத்தில் அதிகரிக்கும் ஊழல் மாதிரியான குறைபாடுகள். அரசு தொடர்பான நிறுவனங்கள் மேல் நம்பிக்கைத்தன்மை குறைந்து வருவது.
• அரசியல் கட்சிகள், அமைப்புகள் போன்ற மைய நீரோட்ட இயக்கங்களுக்கு ஏற்படும் பின்னடைவு.
• நோட்டா, உதிரிகள், சுயேட்சைகளின் உலக அளவிலான எழுச்சி.
• மக்களுக்கும் ஆளும் தரப்புக்கும் இடையே அதிகரிக்கும் இடைவெளி.
•அரசுகளின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளால் முடக்கப்படும் மக்கள் சுதந்திரம்.
நவீன உலகில் மனிதன் ஒரு அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ்தான் வாழ வேண்டும். அப்படியான ஆட்சி மக்கள் நல ஆட்சியாக அமைய வேண்டும். சில கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் நமக்கு நாமே உருவாக்கி கொள்கின்றோம். அரசியல் தத்துவங்கள், கால சூழ்நிலைக்கு ஏற்றவாறும், சில அவசியங்களுக்கு ஏற்றவாறும் மாறுகின்றன. இன்றைக்கு பொருளாதார ரீதியாக ஒரே உலகம் (Global Village) என்று அழைக்கின்றன.
ஜனநாயகம், குடியரசு என்பது அடிப்படை காரணியாக இருந்தாலும், மக்கள் வாழ கொள்கைகளும் அவசியம். அதற்கேற்றவாறு அறிவியல் ரீதியான அரசியல் சிந்தனைகள் பிறக்கின்றன. அரசியல் விஞ்ஞானம் என்பது விவாதத்திற்கும், அதை செயல்படுத்தும்போது ஏற்படுகின்ற விளைவின் தன்மையும் குறித்துதான் இறுதி முடிவு எட்டப்படுகின்றது. உலகம் ஒன்றாக இருக்கலாம், பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும், அதன் தன்மை பாதுகாக்கப்பட்டு ஒருமுகமாக மனிதநேயம் போற்றப்பட வேண்டும்.
இந்த நிலையில்தான் பல்வேறு இனங்களுடைய உரிமைகளுக்காக கூட்டாட்சி முறை வலியுறுத்தப்படு
கின்றது. மனித உரிமைகள், கூட்டாட்சி, ஒரு ஜனநாயக நாட்டின் இறையாண்மை என்பது எல்லாம் அவசியமான காரணிகளாகும். அதற்குதான் மக்களே ஆளுகின்ற பிரதிநிதித்துவ அரசுகள் அமைய வேண்டுமென்று நமக்கு நாமே வகுத்துக் கொண்ட அரசியல் கோட்பாடாகும். சொந்த குடும்பம், சொந்த பணி என்று இருந்தாலும், ஒவ்வொரு மனிதனிடமும் தனக்கான அரசியல் பார்வை இல்லையென்றால் அவர்கள் முழுமையான மனிதனோ, மனுஷியோ இல்லை என்றுதான் அர்த்தம். நம் குடும்பம் ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டை விட்டு வெளியே சென்றால், ஒரு விசாலமான பார்வை இருக்க வேண்டும். அந்த விசாலமான பார்வையில் நம்முடைய கட்டமைப்பு தென்படும். அதிலிருந்துதான் நமக்கான அரசியல் முடிவுகள் என்ன என்பதை நாம் நாமே யூகித்து தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் இல்லாமல் எந்த பிரஜையும் இல்லை, எந்த சமூகமும் இல்லை என்பதை உணர்வது முக்கியமான போக்காகும்.
எழுதபடாத அரசியல் சாசனம் என்ற வகையில் மரபுகள், நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்தில் ஆட்சிகள் நடக்கின்றன. இங்கே எழுதப்பட்ட அரசியல் சாசனம் இல்லை.
With the foregoing reservations, the following ideologies will be identified and used:
1. Liberal Democracy
2. Emergent Democracy
3. Communism
4. Nationalistic Socialism
5. Authoritarian Nationalism
6. Military Authoritarianism
7. Absolutism
South Africa is one state whose political system cannot be fitted into any one of these seven categories with confidence. It contains elements of several of them but, since any interpretation would be based on racial origins, and particularly on skin pigmentation, it must fall into a unique category of racism, because this ideology overwhelms and supplants any other beliefs or attitudes which may exist.......................(தொடரும்)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-12-2020.
No comments:
Post a Comment