Monday, December 14, 2020

 #குஷ்வந்த்_சிங், கிரா போன்ற பல மூத்த படைப்பாளிகளின் படைப்புகள் முதலில் கவனம் பெறாமல் இருந்தது உண்டு. சில விஷயங்களில் தெளிவு இல்லாதவர்கள், புரிதல்இல்லாதவர்கள்சிலர்அப்படைப்புகளைபுறகணித்தால்,அதுஅவர்களுடைய முட்டாள்தனம்தான்.






எந்ததுறையிலும்புறகணிக்கப்பட்டவர்
களுக்கு எந்த நட்டமும், கவலையும் இல்லை.நல்லவர்களையும்,நல்லவற்றையும் எடுத்து கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணங்கள் தொடர வேண்டும்.
குஷ்வந்த் சிங் முதன் முதலில் தான் எழுதிய ‘மனோ மஜ்ரா’ என்ற நாவலை அவருடைய மனைவி டாட்டி பெல் என்பவர் தட்டச்சு செய்தார். அப்போது, அவர் அதை படித்துவிட்டு, இதை யாரும் பிரசுரிக்கமாட்டார்கள். இது வெளிவராது என்று கூறினார். பின்னர், குரூவ் பிரெஸ் பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் இந்த நாவலுக்கு முதல் பரிசு கிடைத்தது. நாவலின் தலைப்பு ‘Train to Pakistan’ என மாற்றப்பட்ட பிறகு இன்றுவரை அந்நாவல் வெற்றிகரமாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...