Monday, December 14, 2020

 #நாபா

—————-





கடந்த 1970 களிலிருந்து நா.பார்த்தசாரதி அவர்களுடன் நெருக்கமான பயணம். அவரின் நினைவு தினம் இன்று.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நதிக்குடி கிராமத்தில், 1932 டிசம்பர் 18ல் பிறந்தவர், நா.பார்த்தசாரதி. மதுரை தமிழ்ச் சங்கத்தில், பண்டிதர் பட்டம் பெற்றார். மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, விமர்சனம் என எழுத்தின் பல்வேறு துறைகளில் இயங்கி வந்தார். 'தீரன், பொன்முடி, கடலழகன், இளம்பூரணன்' உட்பட, பல்வேறு புனைப் பெயர்களில் எழுதி வந்தார். மொத்தம், 93 நூல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமியின் உறுப்பினராக பணியாற்றினார். 'தீபம்' என்ற இலக்கிய மாத இதழை துவக்கினார். பல்வேறு இதழ்களில், ஆசிரியராகப் பணிபுரிந்தார். சாகித்ய அகாடமி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 45 வயதுக்குப் பின், பச்சையப்பன் கல்லுாரியில், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் காமராஜருக்கு நெருக்கம். ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரச்சாரம்
செய்தார்.
1987 டிசம்பர் , 13ஆம் தேதி, தன் 55வது வயதில் இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...