Friday, December 11, 2020

 *#இலங்கை_முள்ளிவாய்க்கால்_போரைப்_பற்றி_தீபா_மேத்தாவுக்கு_என்ன_தெரியும்?* #ஃபன்னி_பாய்’ (வேடிக்கையான பையன்)#குறித்த_கண்டனங்கள்

———————————————————



இந்தியா-கனடா இயக்குநர் தீபா மேத்தா ‘ஃபன்னி பாய்’ (வேடிக்கையான பையன்) என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். ஷியாம் செல்வதுரை என்ற இந்திய-கனடா எழுத்தாளரின் படைப்பை ஒன்றை மனதில் கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்துள்ளார்.
இலங்கை இனப்போரில் நடந்த ரணங்களை இன்றும் நம்மால் மறக்க முடியாமல், வேதனையில் இருக்கின்றோம். வீரமான தமிழர்கள் பட்ட ரணங்களை சொல்லாமல், தேவையில்லாமல் அதை சிறுமைபடுத்துகின்ற அளவில் அமைந்துள்ளது இப்படம். இன்னும் ஈழத் தமிழர்கள் நீதி கிடைக்காமல் தவிக்கின்றனர். இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டது. தமிழருடைய அடையாளங்களை முழுவதுமாக அழிப்பதற்கான நடவடிக்கையை சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து செய்து வருகிறது.
இந்த திரைப்படத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு, ஆஸ்கார் விருதுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மக்களின் ஆதரவோடு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன. சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லாமல், தன்பாலின சேர்க்கையாளர்கள் விடயங்களை, முகம் சுளிக்கின்ற வகையில் இந்த படத்தை எடுத்து வெளியிட்டதுமிகவும்கண்டனத்துக்
குரியது. இது தமிழர்களை இழிவுப்படுத்தும் நடவடிக்கையே. தமிழர்களுடைய வேதனையை மேலும் அதிகமாக்கவே இந்த ஃபன்னி பாய் திரைப்படத்தை தீபா மேத்தா திட்டுமிட்டு எடுத்து வெளியிட்டுள்ளார்.
விதைப்பதற்கு எவ்வளோ நல்ல கருத்துகள் இருக்கின்றபோது, அருவருப்பான கருத்துகளை விதைத்து வெளிச்சம் தேடும் தீபா மேத்தாவுக்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டியது கடமை. எதிலும் நேர்மையும், ஆக்கபூர்வமான சிந்தனைகளும் இருக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் ஏற்கனவே வேதனை பட்டவர்
கள், தற்போது இந்த திரைப்படம் வெளிவந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-12-2020.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...