Thursday, December 10, 2020

 #யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்

———————————————————


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர் “யாதும் ஊரே: யாவரும் கேளிர் “( World is my village all are our kith and kin)என்றுகனியன்பூங்குன்றனா
ரின் கவிதை வரிகளை நினைவூட்டினார்.
இதே கருத்தை கிரேக்க நாட்டு வித்தகன், ஒருவர் குறிப்பிடும்போது,
“I am neither a Greak nor an Athenian, I am the citizen of the world."
”நான் கிரேக்கனோ, ஏதன்ஸ்காரனோ அல்ல: உலக பிரஜை” என்று குறிப்பிட்டார்.
தனித்தன்மையை காத்திட்ட நிலைமையில் நம் பாரம்பரியங்களின் கற்பாறையில் நின்றுகொண்டு கம்பீரமாக பார். பெருமை கொள்.இது அவசியம்.தழுவிய கருத்தினைக் கூறிய சுய பாங்கினை மறந்து விடக் கூடாது.
காவிரி நதிக்கரையில் உட்கார்ந்து, புனலாடி, கங்கை நதியில் மூழ்கி எழுந்து, சிந்து,வால்கா ஆற்றின் பக்கத்திலிருந்து பரவசப்பட்டு, நைல் நதிக்கரையின் முன்னால் நின்றுகொண்டு கடந்தகால கிளுகிளுப்பூட்டும் வரலாற்றை நினைவிற்கு கொண்டுவந்து, ரைன் நதியில் பயணம் மேற்கொண்டு, தேம்ஸ் நதியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு அவரவர் தங்களை மறந்து நின்ற நிலைமைகளை தடைச் சுவர்களைத் தாண்டி, எல்லைகளையும், வேலிகளையும் கடந்து பரந்து விரிந்துபட்ட எண்ணங்களை வழங்கிட கலைஞர்களுக்கு, கவிஞர்களுக்கு, ஆற்றல்மிக்க எழுத்தாளர்களுக்கு உள்ளுணர்வை வழங்கியிருக்கின்றன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-12-2020.
--
K. S. Radhakrishnan,

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...