ஜெர்மனியின் தலைசிறந்த தத்துவமேதை ஆஸ்வால்டு ஸ்பெங்லர்(Oswald Spengler) தன்னை நாசிசத்தின் விளக்கவுரையாக மாற்றிக் கொண்டு எழுதிய கருத்துக்கள்.......
“Ideals are Cowardice"
"இலட்சியங்கள் கோழைத்தனமானவை!”.
"Man should be like a Lion never tolerating an equal in his den, and not like a meak Cow living in herds and driven hither and thither. For such a man war is ofcourse the supreme occupation and joy".
”மனிதன், சிங்கத்தைப் போல தனக்கு சமமானவனை தனது கூடாரத்தில் அனுமதிக்கக் கூடாது. மந்தைக் கூட்டங்களின் நடுவே அங்குமிங்கும் துரத்தப்படுகின்ற பணிவான பசுவாக இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட மனிதனுக்குப் போர் ஒரு உன்னதமான உயர்ந்த தொழில்: இன்பம்”.
ஜீரணிக்க முடிகிறதா? ஆஸ்வால்டு ஸ்பெங்லர் ஒரு தத்துவமேதை. இவரே இப்படியெனில் மற்றவர்கள்!.
••••••••
மக்கள் உணர்ச்சிக்குக் கண் இமைப்பொழுதிற்குள் பலியாகக் கூடியவர்கள்! அவர்களின் தன்மான உணர்ச்சிக்கு சவால் கிளம்பும்போது, ஆக்ரோஷமாகவோ, அனுதாபமாகவோ கிளம்பும்போது அவர்கள் பெற்ற படுகாயங்களை, இழப்புகளைப் பற்றிக் கவலைப்பட மறுக்கிறார்கள்!.
இங்கிலாந்து நாட்டின் ஒரு மேஜர் துப்பாக்கி தூக்கிப் பழக்கப்பட்ட இராணுவத்தலைவன். முதல் உலகப் போராட்டம் முடிந்த பிறகு நாட்டிற்கு “கவிதை” ஒன்றை வடித்துத் தந்தான். படிக்கும்போது....கண்ணீர், படித்து முடித்தால் உள்ள கொதிப்பு வரும்!.
இதுதான் அந்தக் கவிதை! கவிதையின் தலைப்பு- “இறந்தவர்களின் அழைப்பு”
“We are the dead - short
Days ago we lived
Felt dawn, saw sunset glow
Loved, were loved and now
We live in Flander's Fields
Take up our quarrel with the foe
To you from failing hands we throw
The torch be yours tohold it high
If you break faith with us who die
We shall not sleep, though poppies grow in flander's Fields”.
இதயத்தில் இரத்தத்தை வரவழைக்கும் இந்தக் கவிதைகளை எழுதியவர், இராணுவ அதிகாரி, மேஜர் மேக்ரே(Major Mccrae).
கவிதையின் மொழிபெயர்ப்பை இங்கே,
“நாங்கள் இறந்து பட்டவர்கள்
கொஞ்ச நாட்களுக்கு முன்பு வாழ்வாங்கு வாழ்ந்தவார்கள்
உதயத்தை உணர்ந்தவர்கள்
கனல் பிழம்பு உருமாறிய கதிரவனைக் கண்டவர்கள்
நேசித்தவர்கள் - நேசிக்கப்பட்டவர்கள்.
ஆனால்,
இப்போது, பிளாண்டர்ஸ் வயல்வெளியில் புதையுண்டு கிடக்கிறோம்.
எங்களது சண்டையை எதிரியிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
எங்களது தளர்ந்துவிட்ட கரங்கள்தரும் தீப்பந்தத்தை உயரத்தில் ஏந்திப் பிடியுங்கள்.
செத்துவிட்ட எங்களின் நம்பிக்கையை நீங்கள் சுக்கல் சுக்கலாக உடைப்பீர்களாயின்,
நாங்கள் தூங்கமாட்டோம்!
எங்களது புதைகுழியின்மேலே வண்ணவண்ண மலர்கள் பூத்துக்குலுங்கட்டும்,
செடிகொடிகள் முளைக்கட்டும், பரவாயில்லை”.
4-12-2020.
No comments:
Post a Comment