*#இந்து_தமிழ்_திசை_பார்வைக்கு*
———————————————————
திரு.எஸ்.வி.ராஜதுரையின் ‘பேரறிவாளனுக்கு நீதி கிடைக்கட்டும்’ என்ற தலைப்பினுடைய பத்தியை படித்தேன். பேரறிவாளனுக்கு மட்டுமில்ல, மீதியிருக்கும் ஆறு பேருக்குமே நீதி கிடைக்கட்டும் என்று எஸ்.வி.ராஜதுரை வலியுறுத்தி இருக்க வேண்டும். பேரறிவாளனின் தியாகம் ஒப்பற்றதுதான். அதுபோல ராஜீவ் படுகொலையில், சம்பந்தப்பட்ட ஏழு பேருமே தங்களுடைய இளமையை பலியிட்டு தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற உரத்த கோஷம்தான் நியாயமானது. இவர் உட்பட அவர் உட்பட, என்றில்லாமல் ஏழுவர் என்று பொதுவெளியில் பேசுங்கள். அதுதான் நேர்மையான நல்லப்போக்கு.
ராஜீவ் படுகொலை விடயத்தில் சரியான புலனாய்வோ, விசாரணையோ, நடக்கவில்லை என்று இன்றல்ல, 1991களின் இறுதியிலிருந்து தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதுமட்டுமில்லாமல், செய்திதாள்களிலும் உரிய தகவலோடு நீண்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். அது அனைவருக்கும் தெரியும். என் வலைதளப் பக்கத்தில் கூட அந்த கட்டுரைகளை காண முடியும். அது வேறு விடயம்.
நம்மை பொறுத்தவரையில், ஏழு பேருடைய துயரங்களும், பாடுகளும் ஒன்றுதான். எனவே, ராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஏழுவரை விடுதலை செய்யுங்கள் என்ற கோஷத்தை எழுப்புவதுதான் முறையானது.
இந்த பிரச்சனையின் ஆரம்ப கட்டத்திலிருந்து நெடுமாறன், வைகோ வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, என் போன்ற பலர் ஏழுவர் மட்டுமல்ல, ராஜீவ் படுகொலையில் குற்றவாளிகளாக இருந்த அனைவரின் நியாயமான உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளோம் என்ற தகுதியின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். திரும்ப திரும்ப சொல்கிறேன் ஏழுவரை விடுதலை செய்யுங்கள் என்ற கோஷத்தை பொதுவெளியில் வைப்போம். அவர், இவர் என்று பெயர் குறிப்பிட வேண்டாம். இது என்னுடைய கருத்து. இதை எடுத்துக் கொள்வதும், எடுத்துக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
No comments:
Post a Comment