Thursday, December 10, 2020

 #தீதும்_நன்றும்_பிறர்_தரவாரா

———————————————————



மேலானதொன்றை அடையவேண்டும் என்றால் முயற்சி கடுமையாக இருக்க வேண்டும். இடைக்காலப் பயன்களில் திருப்தி அடைந்து விடக் கூடாது. எப்பாடுபட்டாவது நினைத்ததை முழுமையாக அடைந்துவிட வேண்டும் என்கிற கடின முயற்சி ஒரு அறம்.
இடையூறுகளுக்குப் பிறர் மட்டுமல்ல தாமும் காரணமாவோம் என்பதை விஸ்வாமித்திரர் உணர்ந்து கொண்டார். அதனால்தான் இடறிவிழுந்தபோதும் எழுந்து நின்றார். விடாமல் தவம் புரிந்தார். வேண்டியதைப் பெற்றார். இடையில் நிறுத்திவிடாத முயற்சியே கடும் முயற்சி என்ற பெருமைக்குரியது. அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.
சக மனிதர்களின் குறுக்கீடு, தம்மை விட மேலானவர்கள் தந்த தொல்லைகள் என்று எவை வந்தபோதிலும் கொண்ட குறிக்கோளிலேயே உறுதியாக இருப்பது அறம். அதுவே “தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்பது.
ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்.
எடுத்த காரியத்தைச் சோர்வின்றி தொடர்பவர் எதிர்ப்படும் விதியையும் வெற்றி கொள்வார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
7-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...