Thursday, December 10, 2020

 #தொழி_உழுவு

————————-






நன்செய் நிலங்களில் நெல் பயிரிடுவதற்கு முன் நீர் பாய்ச்சி பசுந்தழை, தொழுஉரம் ஆகியன இடப்பட்டு சேறு கலந்த நிலையில் இரும்பு கலப்பை கொண்டோ மரக்கலப்பை கொண்டோ அல்லது தொழி கலக்கும் கலப்பை கொண்டோ நன்கு மடக்கி உழுதல், தொழிஉழவு செய்தல் எனப்படும்.
இதனால் மண்ணின் கனபரிமாணம் குறைக்கப்பட்டு மண் மிருதுவாக்கப்படுகிறது. மண்கட்டிகள் மண் துகள்களாக உடைக்கப்படுகின்றன. தொழி உழவிற்குப்பின் காய்ந்த மண் ஈரமாக்கப்படும் போது அதனுடன் தங்கியிருக்கும் காற்று வெளியேற்றப்பட்டு மண்கட்டிகள் உடையும் தன்மை பெறுகின்றன. தொழி உழவிற்கு சாதாரண கலப்பையை விட சுழலக்கூடிய அமைப்புள்ள உழவு கருவிகள் (ரோட்டோவேட்டர்) மிகவும் ஏற்றதாகும். நஞ்சையில் தொழி உழவு செய்யும் பொழுது அதனுடைய சேறு கலக்கும் திசை அடிக்கடி மாறுபடுவதால் மண் கட்டிகளில் ஏற்படும் நுண்ணிய கீறல்கள் தான் சிதற வழிவகுக்கின்றது. எனினும் நாட்டுக்கலப்பை, மண்கட்டி உடைக்கும் கலப்பை போன்ற கருவிகளும் தொழி உழவுக்கு ஏற்றதாக இருப்பது ஒவ்வொரு மண்வகைகளின் தன்மையைப் பொறுத்தே அமைகின்றன.
சுழலும் அமைப்புள்ள ஷிஃப் ட்ரோலர் தொழி உழவுக் கருவி நஞ்சைக்கு ஏற்றதாகும். தொழி உழவு செய்யப்பட்ட நன்செய்நிலத்தில் மண் மிருதுத்தன்மை பெற்று நீர் புகும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. நாற்று நடுதல் எளிது. சிக்கனமுறையில் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அளித்தல் ஏதுவாகிறது. தொழி உழவின் மூலம் நெற்பயிருக்கேற்ற மண்ணின் பௌதீக, ரசாயன மற்றும் நுண்ணுரிய தன்மைகள் உருவாக்கப்படுகிறது. அதனால் நெற்பயிரின் வளர்ச்சி அதிகரிக்கப்பட்டு உயர் விளைச்சலுக்கு வழிகோலுகிறது. தொழி உழவு செய்த நிலத்தில் கீழ்நோக்கி விரயமாகும் நீர் தடுக்கப்பட்டு அளிக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களின் கரையும் திறன் அதிகமாகிநெற்பயிருக்கு விரைவில் கிடைக்கிறது.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-12-2020.
--
K. S. Radhakrishnan,

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...