Thursday, December 10, 2020

 #திருவாடுதுறை_ஆதீனமும்_1947இல்_இந்திய_விடுதலையும்.....

———————————————————




திருவாடுதுறை ஆதீனத்தோடு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக 2011 வரை தொடர்பு கொண்டு, இந்த ஆதீனம் வழக்குகள் தொடர்பாகவும், நிலக் குத்தகை பிரச்சனைகளிலும் மற்றும் நிர்வாக விடயங்களிலும் மறைந்த ஆதீனகர்த்தரை கும்பகோணத்தில் தங்கி அடிக்கடி சென்று சந்திப்பதும் உண்டு.
ஆதீனத்த்தில் பெரிய நூல் நிலையம், ஏட்டுச்சுவடிகள் எல்லாம் உண்டு. நூல் நிலையத்தில் அருமையான, பழைய நூல்கள் கண்ணில் பட்டால் அதை மேலோட்டமாக வாசிப்பதிலும் ஆர்வம் ஏற்படும். இச்சூழலில் அங்கேயுள்ள ஒரு நூலில் இந்தியா விடுதலை பெற்றபோது, திருவாடுதுறை ஆதீனத்தின் செங்கோல் மெளன்ட்பேட்டனிடம் வழங்கப்பட்டு அதை நேருவிடம் ஒப்படைத்ததாக ஒரு செய்தி இருந்தது.
மௌண்ட்பேட்டன் இந்தியாவிற்கு விடுதலையை தரவிருக்கிறோம். ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள் என்று நேருவிடம் கூறினார். இங்கிலாந்திலிருந்து இந்தியா சுதந்திரத்தை எப்படி பெறுவது? என்று நேருவுக்கு ஒரே குழப்பம். உடனே இராஜாஜியின் உதவியை நாடினார். இராஜாஜியும், எங்கள் தமிழ் மன்னர்கள் அரசுரிமையை மற்றவர்களுக்குத் தரும்போது அரச குருமார்கள் நாட்டின் செங்கோலை அடுத்து வரும் மன்னணிடம் தந்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி கூறுவார்கள்.
அதுபோலவே செய்துவிடலாம் என்றார் நேரு.உடனே இராஜாஜி திருவாடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார். ஒரு செங்கோல் செய்யப்பட்டது. அதற்கு தங்க முலாம் பூசப்பட்டது. அதனை இளைய ஆதீனம் தம்பிராண் பண்டார சுவாமிகளிடம் ஒப்படைத்து கூடவே ஓதுவார்களையும் அனுப்பி தேவாரத்தில் இருந்து கோளளறு பதிகம் பதினோரு பாடல்கள் பாடப்பட வேண்டும் என்று அறிவுரை கூறி டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இவர்கள் அனைவரும் இராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் பயணமானார்கள். ஆயிரம் அண்டுகள் அடிமைத்தளையில் இருந்து பாரதம் விடுதலை பெரும் விழாவிற்காக எல்லாரும் காத்திருந்தார்கள்.
அன்றைய தினம் அந்தச் செங்கோல் மௌண்ட்பேட்டனிடம் வழங்கப்பட்து. அவர்களது அதை தம்பிராண் பண்டார சுவாமிகளிடம் வழங்கினார். செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கபட்டது. ஓதுவார் மூர்த்திகள் வேயுறு தோளி பங்கன் என்று தொடங்கும் தேவார திருப்பதிகங்களை பாடத் தொடங்கினார். பதினோராவது பாடலின் கடைசிவரி, அடியார்கள் வானில் அரசாள்வார் ஆணை நமதே என்று பாடி முடிக்கும்போது சுவாமிகள் செங்கோலை நேருவிடம் கொடுத்தார். அதுமட்டுமல்ல, செங்கோலை நேருவிடம் வழங்கும்போது ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் இசைத்தார். சீனா போரின் போது முதலவர் காமராஜர், அமைச்சர் நேரில் ஆதீனத்திற்கு சென்று
ஆதீனம் அள்ளி தந்த போர் நிதியை பெற்றுக்கொண்டனர்.

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...