Thursday, December 10, 2020

 #நாத்பாய்

——————-




நாத்பாய்,தலைசிறந்தநாடாளுமன்றவாதி, சொல்லின் செல்வர் நாத்பாய், பார் அட் லா படித்த அறிஞர். மும்பாய்.நாத்பாய் நாடாளுமன்றத்தில் பேசுகிறார் என்றால், பிரதமர் நேரு வந்து அமர்ந்துவிடுவார். நாடாளுமன்றத்தில் காலியான இடங்களே இல்லாத அளவுக்கு அவருடைய பேச்சை கேட்க கூட்டம் நிறைந்திருக்கும், அமைதியும் நிலவும். நேரு காலத்திலிருந்து இந்திராகாந்தி வரை நாடாளுமன்றத்தில் அவருடைய உரைகளும், பணிகளும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தன.
முன்னாள் காங்கிரஸ் தலைவர், மத்திய முன்னாள் அமைச்சர், தலைசிறந்த பேச்சாளர், நாடாளுமன்றவாதியான தாரகேஸ்வரி சின்ஹா எனக்கு நெருக்கமானவர் என்று பலமுறை பதிவிட்டுள்ளேன். அவர்தான் என்னை முதன் முதலாக 1973 என்று நினைக்கிறேன் நாடாளுமன்றத்திற்குள் அழைத்து சென்றார். 1973ல் பார்த்த நாடாளுமன்றத்திற்குள் உறுப்பினராக செல்ல எனக்கு சிலமுறை வாய்ப்புகள் வந்தும் திட்டமிட்டு மறுக்கப்பட்டது. தாரகேஸ்வரி சின்ஹாவுடன் நாடாளுமன்றம் சென்றபோது, நாத்பாயை பார்த்துள்ளேன். நாத்பாய் சின்ஹாவோடு அன்போடு பேசிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் இருந்துள்ளேன்.
நாத்பாயை பற்றி கடந்த 2001லிருந்து இன்றைய நாடாளுமன்றம் உறுப்பினர்கள் வரை, அதாவது கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றம் உறுப்பினரளாகசென்றவர்கள்,இப்போது செல்பவர்களிடம் நாத்பாய் பற்றி கேட்டால், அப்படியா? அவர் யார் என்று ஒருசிலருக்கு மட்டுமில்லை, பலருக்கும் அவரைப் பற்றியதான அறிமுகமும், கவனமும் இல்லை.
இப்படிதான் இருக்கிறார்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள். இந்த உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும். தேர்தலில்நின்றுவெற்றிபெற்றுவிட்
டோம். நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும், அங்கு பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும். அதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் யார் யார் திறமையாக பேசுவார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா? இந்த மாதிரியான குறைந்தளவு விழிப்புணர்வு கூட இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இன்று speakersஇருக்கிறார்கள்..oraters இல்லை.
இன்றைக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன நினைக்கிறார்கள். ஓட்டுக்கு காசு கொடுத்தோம். தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். டெல்லியில் வலம் வந்தோம் என்றுதான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லபோனால், தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவிட்டார்கள் என்ற கவலைதான் அவர்களுக்கு இருக்கிறதே தவிர நாடாளுமன்ற நூல் நிலையம் எப்படி இருக்கும். நாத்பாய், மதுலிமாயி, பிலுமோடி, கிருஷ்ணமேனன், ஏ.கே.கோபாலன், ராம்மனோகர் லோகியா ,பூபேஷ் குப்தா, மிநு மசானி, பிஜூபட்நாயக், நாத்பாய், மதுலிமாயி, எஸ்.வி.காமத்,வாஜ்பாய்,இரா.செழியன் போன்ற பல நாடாளுமன்ற முன்னாள் ஆளுமைகள் எப்படி பணியாற்றினார்கள் என்பதைக் கூட அறிந்துக் கொள்ள ஆர்வமும், அக்கறையும் அவர்களுக்கு இல்லை.
இப்படி தகுதியவற்றவர்களைதானே கட்சித் தலைமை நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது. இது யார் குற்றம். பிறகு எப்படி நாடாளுமன்ற ஜனநாயகம் செழிக்கும். வாழ்க நமது நாடாளுமன்ற ஜனநாயகம். அவர்களுக்கு வாக்களித்த மக்களும் வளம் பெறட்டும், வாழ்க வையகம். வேற என்ன சொல்ல முடியும்.
இதுவும் ஜனநாயகத்தின் குறைதான்...
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...