*#நாடாளுமன்றத்தின்_மறு_உருவமான #எச்_வி_காமத்!*
இந்திய நாடாளுமன்ற வரலாற்றை எச்.வி.காமத் பெயர் இல்லாமல் எழுத முடியாது. மங்களூரில் பிறந்த இவர் சென்னை மாநில கல்லூரியில் படித்தார். ஏனெனில், நாடாளுமன்றத்தின் மறு உருவமே அவர்தான். அவருடைய முழு பெயர் ஹரி விஷ்ணு ராம்காமத். அந்த காலத்திலேயே ஐசிஎஸ் பட்டம் பெற்று, தன்னை நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் இணைத்துக் கொண்டார். ஐசிஎஸ் பட்டத்தையும் தூக்கி எறிந்தார்.
படிப்பாளி, அரசியலில் கடுமையான உழைப்பாளி, வாத திறமைக் கொண்டவர். நாடாளுமன்றம் காலையில் துவங்கும்போது அவையில் முதல் நபராக அமர்ந்திருப்பார். அதுபோன்று மாலையில் நாடாளுமன்றத்திலிருந்து கடைசி நபராக வெளியே வருவார். தனக்கென்று தனித்திறமை, தனித்தன்மையை வகுத்துக் கொண்டவர். புத்தகங்கள், இதழ்கள், ஏடுகள்தான் அவருடைய குடும்பம். தனக்கான தேவைகளை அதிகமாக வளர்த்துக் கொள்வதும் இல்லை, ஆர்வம் செலுத்துவதில்லை.
ஒருமுறை ஒரிசா முதல்வராக இருந்த பிஜிபட்நாயக் மீது ஊழல் குறித்தான சிபிஐ ரிப்போர்ட் மற்றும் அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் கேபினெட் சப் கமிட்டி வழங்கிய அறிக்கை, என இரண்டு அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் பக்கம் பக்கமாக வாசித்து பரபரப்பை உண்டு பண்ணியவர் காமத். ரகசிய அறிக்கை எப்படி அவர் கைக்கு சென்றது என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள பெருங்கூச்சல் போட்டனர்.பெறும் சலசலப்பைம் ஏற்பட்டது. அப்போது காமத் அவர்களை பேசவிடாமல் தடுக்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எதைப்பற்றியும் கவலையற்ற காமத் மேலும் படிக்க ஆரம்பிக்க, அன்றைய நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஹூக்கம் சிங் அவர்கள், காமத் அவர்களைப் பார்த்து,
“நீங்கள் அதைப் படிப்பதற்கு நான் அனுமதிக்கிறேன்; ஆனால், விளைவுகளை ஏற்றுக் கொள்கின்ற பொறுப்புக்கு உத்தரவாதம் கடிதம் மூலம் தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். காமத் அவர்கள் அங்கேயே, “பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என்ற கடிதத்தை மக்களவைத் தலைவரிடம் கொடுத்தார்.
காங்கிரஸ் தரப்பில் கூச்சல் அடங்கவில்லை. ஆனால் கேபினெட் அந்தஸ்தைப் பெற்ற அமைச்சர்கள் மட்டும் திடுக்கிட்டுப் போய், திகைத்துப்போய், சிலையாக அமர்ந்திருந்தனர். இரண்டு ரிப்போர்ட்களையும் காமத் படித்து முடித்தவுடன் மக்களவைத் தலைவர் அவர்கள், “இதுபற்றிய தீர்ப்பை இரண்டு நாட்களுக்குள் நான் வழங்குகிறேன்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இந்தச் சம்பவத்தை ஒட்டித்தான் அமெரிக்கத் தூதுவர் விருந்திலே கலந்து கொண்ட காமத் அவர்களை பார்த்து, “இந்த பி.ஐ. ரிப்போர்ட்டை எப்படிப் பெற்றீர்கள்?. பாதுகாப்பாக, பரம ரகசியமாக, உள்துறை அமைச்சகம் வைத்திருந்த இந்த ரிப்போர்ட்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன? நான் யாரிடமும் சொல்லப் போவதில்லை. இரகசியத்தைக் காப்பேன் என்ற உறுதியை வழங்குகிறேன்”என்று திருப்பித் திருப்பிக் கேட்க
அதற்கு காமத் அவர்கள், “ இது எங்களது நாட்டைப் பற்றிய பிரச்சினை, தயவு செய்து, என்னை வற்புறுத்தாதீர்கள்” என்று சொல்ல.
தூதுவர் வற்புறுத்த, கடைசியாக காமத் அவர்கள், “ரகசியத்தை வெளியிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் நான் சொல்கிறேன்” என்றவுடன், வெற்றிக்களிப்பில் அந்தத் தூதுவர், “நிச்சயம் நான் வெளியே சொல்லமாட்டேன்” என்று உறுதி சொல்ல.காமத் அவர்கள் தயக்கம் காட்டுவதுபோல் காட்டி, அந்த தூதுவருக்குச் சொன்னார்.
“இந்த தஸ்தாவேஜூகளை எஃப்.பி.ஐ.யிடமிருந்து பெற்றேன்” (எஃப்.பி.ஐ. என்பது அமெரிக்க உளவு ஸ்தாபனம்) என்று சொல்லிவிட்டு காமத் வாய்விட்டு சிரித்தார்.
விஷயம் கிடைக்கும், ரகசியம் புரியம் என்று கருதிய தூதுவர் முகத்தில் ஏமாற்றத்தின் ரேகை பளிச்சிட்டது. தனக்கேயுரிய தனித்திறமையில் சிரிப்பொலி எழுப்ப, அவர் பேசியதற்கு பிறகு அமெரிக்கத் தூதுவர் அமைதியானார்.
இப்படிப்பட்ட அரிய நாடாளுமன்றவாதியை மக்கள் தோற்கடிக்கவும் செய்தனர். என்ன செய்ய, நான் அடிக்கடி குறிப்பிடுவதுபோல் தகுதியே தடைதான். கைநாட்டுப் பேர்வழிகளை, கையூட்டுப் பெறுகிறவர்களை, கொலைக்காரத்தனம் என்ற இலக்கணத்திற்கு இலக்கியம் வகுப்பவர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசங்களில் அரசியல் வியாபாரிகளை வெற்றி பெற வைப்பவர்களும் மக்களே; இத்தகைய மக்களின் சிந்தனையோட்டங்களில் தெளிவான மாறுதல் ஏற்பட வேண்டும் என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.
எச்.வி.காமத் 1967ல் ஒருமுறை சென்னைக்கு வந்தபோது, அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கின்ற நாட்களில்,நாஞ்சிலாரும் அண்ணன் விருதுநகர் பெ.சீனிவாசனும் இவரை சந்தித்தார்கள். அடிக்கடி தமிழ்நாட்டிற்கு விசா இல்லாமல் உரிமையோடு வருகின்ற நட்பை பெற்றுள்ளீர்கள் என்று காமத்திடம் வேடிக்கையாக பேசின அண்ணன் பெ.சீனிவாசனை காமத் தழுவிக் கொண்டார். பெ.சீனிவாசன் இளைஞராக இருக்கின்றார். நல்ல பொறுப்புகளை தாருங்கள் என்று காமத், அண்ணாவிடம் கூறியதுண்டு. இதைகேட்ட அண்ணன் சீனிவாசன், எதற்கு என் பெயரை பரிந்துரை செய்தீர்கள், தவறாக நினைப்பார்கள் என்று கூறினார். நீங்கள் சொல்லி நான் பேசவில்லையே, நானாகதானே பேசினேன் என்று காமத் பதிலளித்தார். காமத் போன்ற ஆளுமைகளை இன்றைக்கு பார்க்க முடியவில்லை. இதற்கு காரணம் நமது வியாபார அரசியல். அரசியல் கொள்கைதாரர்கள் புறக்கணிக்கப்பட்டு, பொது வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத தகுதியற்ற, சுயநல வியாபாரிகள் உள்ளே புகுந்ததால், காமத்துக்கள், லோகியாக்கள், நாத்பாய்கள் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று பார்க்க முடியவில்லை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
8-12-2020.
••••••••••••••••
Hari Vishnu Kamath born in Mangalore in 1907, studied at the Canara High School, Government College, Mangalore, Presidency College, Madras. Thereafter, he went on to obtain degrees from the London School of Economics, University College London, and the School of Oriental Studies.
Kamath kicked off his career as a social worker and freelance journalist until he qualified for the Indian Civil Service (ICS) in 1938. During his time as a civil servant, he held several judicial positions including District Magistrate, Additional District Magistrate, 1937—38, Sub-Judge First Class, 1933-34, and the Additional District Judge, 1934-35.
In 1938, he left his lucrative job with the British Government to participate in the Indian independence movement. He joined the Forward Bloc, a newly-established political party founded by Subhash Chandra Bose. His involvement in the freedom movement led him to be imprisoned twice in the 1940s.
Contribution to Constitution Making:
Kamath was elected to the Constituent Assembly from Central Provinces and Berar. He actively participated in the debates and intervened on issues including protection of fundamental rights during an emergency, preamble and welfare of socially and educationally backward classes.
Post-independence, Kamath had a very active political profile. He was a member of the First Lok Sabha in 1955 and the Third Lok Sabha in 1962. His first election was momentous because he lost by a narrow margin of 174 votes. He moved the Supreme Court to request a fresh election; the Court allowed this, and Kamath won the re-election.
During his time as a parliamentarian, he attempted to remove benefits to ministers including free electricity, water and furniture and provide for reservation in the Parliament for members from Pakistan-Occupied-Kashmir.
Apart from his parliamentary duties, he was also given international assignments. He represented India in the World Government Conference, London, 1952 and United Nations General Assembly Session, 1977.
No comments:
Post a Comment