Tuesday, December 15, 2020

 

எங்கள் பகுதியான, சங்கரன்கோவில் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில், மேலநீலிதநல்லூரில் உள்ள தேவர் கல்லூரியில் பிரச்சினை என்று செய்திகள் வந்தன. பசும்பொன் தேவர் பெயரில் கடந்த 1971ல் திரு.ஏ.ஆர்.பொன்னையா இந்த கல்லூரியை ஆரம்பித்தார்.

இந்த கல்லூரி Thevar Educational Trust என்ற அமைப்பின் கீழ் துவங்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன் இதன் தலைவராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில், 1969ல் மூக்கையாத் தேவர், பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், உசிலம்பட்டி, கமுதி, மேலநீலிதநல்லூர் போன்ற இடங்களில் பசும்பொன் தேவர் பெயரில் கல்லூரிகள் துவங்க அரசிடம் அனுமதியும் பெற்றார்.
இந்நிலையில், ஏ.ஆர். பொன்னையா மேலலீதநல்லூர் பகுதியைச் சார்ந்தவர். எம்.ஏ படித்து விட்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். அவர் இந்த கல்லூரியை ஆரம்பிக்க முயற்சிகள் எடுத்தபோது, 1970 என்று நினைக்கிறேன், பழைய ஜீப்பில் எங்களுடைய வீட்டிற்கு பலமுறை வருவார். சுற்றிலும் காடா துணியால் கட்டப்பட்ட ஜீப்பில்தான் வருவார்.
கல்லூரி அமையும் இடத்தில் எங்களுக்கு நிலங்கள் இருந்ததால், அந்த நிலத்தை கேட்பதற்காக என் தந்தையை சந்திக்க பலமுறை வந்ததுண்டு.கல்லூரிஆரம்பிக்கபோவ
தால், என் தந்தை அந்த இடத்தை இலவசமாக வழங்கியது துண்டு. இன்றைக்கு அந்த கல்லூரி சம்பந்தமில்லாதவர்கள் கையில் மாட்டிவிட்டதாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். வானம் பார்த்த இந்த பகுதி மாணவர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்லூரியில், இன்றைக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழைந்து, கல்லூரியை பாழ்படுத்துவது நியாயமற்ற செயலாகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-12-2020.

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...