Thursday, April 2, 2026
#முதல்வர்ஸ்டாலினிடம்ஒருகேள்வி⁉️
திமுகவிற்கெனக் கடுமையாக உழைத்துப் பாடுபட்டு இறுதியில் எதுவும் இல்லாமல் போன தகுதியில் இருந்து இக்கேள்வி!
#முதல்வர்அவர்களே!
மதுரை மாவட்ட திமுக செயலாளர் கோ தளபதி உங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரசை துவைத்து நாறடித்து இருக்கிறார். மிகக் கடுமையான விமர்சனம்! பூத்துக்கே ஆளில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு சீட்டா? என்றும் கேட்கிறார். பிறகு உங்கள் அமைச்சர் கண்ணப்பன் காங்கிரஸ் காரர்களுக்கு இடம் கொடுத்தால் தோளில் ஏறிஉட்கார்ந்து கொண்டு பார்ப்பார்கள் என்று விமர்சிக்கிறார்.
இப்படி உங்களிடமிருந்து கொண்டே காங்கிரசை நீண்ட நாட்களாக மிக மோசமான முறையில் பலர் விமர்சிப்பவர்கள் காங்கிரஸ் அதிருப்தியாளர்களாக இருந்து வருகிறார்கள்.
ஆனால் நான் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களின் படத்தை போட்டு ஈழத்தமிழர் விவகாரத்தில் சோனியா காந்தி ஈழததமிழர்களைக் கொன்று குவிக்க மன்மோகன் சிங் எடுத்த மோசமான நடவடிக்கை போன்று சோனியா குடும்ப அடிமையாக இவரும் எடுப்பார்.இவரும் ஒரு மன்மோகன் சிங் மட்டுமல்ல சோனியா காந்தியின் பொம்மைத் தலைவராகவும் இருக்கிறார் என்று நியாமாக விமர்சனம் செய்தேன். இதோ கருத்தை நான படுபட்டு அமைத்த திமுக டெசோ -2 காலத்தில் கலைஞர் சொன்ன கருத்தைதான் நானும் சொன்னேன்.அதற்கு நீங்கள் என்னைக் கட்சியில் இருந்து நீக்கம் செய்தீர்கள்!
சரி இருக்கட்டும்!உங்கள் மந்திரி சபையில் என் அளவுக்கு திமுகவிற்கென உழைத்தவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா? கலைஞர் காலத்தில் இருந்து இன்று வரை என்பதை நீங்கள் மனம் திறந்து சொல்ல வேண்டும்.
என்னை நீங்கள் நீக்கி இருக்கலாம் நீங்கள் என்னை நீக்கியதைக் குறித்து நான் ஒன்றும் கவலைப்படவில்லை. என்னை திரும்ப சேர்த்துக் கொள்ளுங்கள் என்று உங்கள் காலைப் பிடித்து மன்றாடவும் இல்லை ! மிகுந்த மன அமைதியோடு சாதாரணமாக உங்களிடமிருந்து விலகிக் கொண்டேன். என்னை நீக்கியதற்காக உங்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். அங்கு எல்லாரையும் போல் நான் அடிமையாக உட்கார்ந்து இருக்க முடியாது.
ஆனால் கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸைக் கேலிபேசிக்கொண்டிருக்கிறார்களே அவர்களை எல்லாம் நீக்காமல் என்னை மட்டும் நீக்கியதற்கு என்ன காரணம்? நீங்கள் இதற்கு பொது வெளியில் பதில் சொல்ல வேண்டும்! கால நேரம் பார்க்காமல் உங்களுக்கென உழைத்து எந்த பலனும் பெறாமல் போய்விட்ட என்னுடைய அந்த நீண்டகாலங்கள்.
அரசியலும் சட்டத்திலும் ஏற்பட்ட சிக்கல்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொடுக்க சகல பணிகளுக்கு அலைந்த காலங்கள். பிறகு உங்களின் மதிப்பை உயர்த்துவதற்காக அழைத்துச் சென்ற வெளி நாட்டு பயணங்கள்!ஏற்படுத்திக் கொடுத்த மத்திய மாநில உறவுகள்! ஈழத் தமிழர் உறவுகள்! எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் தானே! அப்படி எல்லாம் உங்களுக்கு உழைத்துக் கொடுத்த மமதையில் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். இவ்வளவுக்குப் பிறகும் ஏன் என் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தீர்கள்? உங்களால் பதில் சொல்ல முடியுமா? என்னை நீக்கியது போல அவர்கள் இருவரையும் நீங்கள் நீக்க முடியுமா பதில் சொல்லுங்கள்.? இப்படியான உங்களது இரு நிலைப்பாடுகளுக்கும் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நான் இப்பொழுது நன்றாகத் தான் இருக்கிறேன் எனக்கு எந்தக் குறையும் இல்லை!ஆனால் உங்களால் ஏற்பட்ட எனது மன உளைச்சலுக்கும் சேர்த்து நீங்கள் பதிலைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
முரட்டு ஆட்பலம், பணபலம், குடும்ப அரசியல்,
அதிகார வெற்றியை உடைத்து எறிவோம்.
#DMKFailsTN
#MKStalin
#திமுக
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment