Wednesday, December 23, 2020

 


Brand New Nation: Capitalist Dreams and Nationalist Designs in Twenty-First-Century India (South Asia in Motion) by Ravinder Kaur

The first book that examines India's mega-publicity campaigns to theorize the global transformation of the nation-state into an attractive investment destination.
The early twenty-first century was an optimistic moment of global futures-making. The chief narrative was the emergence of the BRICS nations―leading stars in the great spectacle of capitalist growth stories, branded afresh as resource-rich hubs of untapped talent and potential, and newly opened up for foreign investments. The old third-world nations were rapidly embracing the script of unbridled capitalism in the hope of arriving on the world stage. If the tantalizing promise of economic growth invited entrepreneurs to invest in the nation's exciting futures, it offered utopian visions of "good times," and even restoration of lost national glory, to the nation's citizens. Brand New Nation reaches into the past and, inevitably, the future of this phenomenon as well as the fundamental shifts it has wrought in our understanding of the nation-state. It reveals the on-the-ground experience of the relentless transformation of the nation-state into an "attractive investment destination" for global capital.
As Ravinder Kaur provocatively argues, the brand new nation is not a mere nineteenth century re-run. It has come alive as a unified enclosure of capitalist growth and nationalist desire in the twenty-first century. Today, to be deemed an attractive nation-brand in the global economy is to be affirmed as a proper nation. The infusion of capital not only rejuvenates the nation; it also produces investment-fueled nationalism, a populist energy that can be turned into a powerful instrument of coercion. Grounded in the history of modern India, the book reveals the close kinship among identity economy and identity politics, publicity and populism, and violence and economic growth rapidly rearranging the liberal political order the world over.
Nagarajan Naidu, Siva Kumar and 6 others

 #திருப்பாவை

—————————





“ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து,
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்,
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சாரங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.”
பதவுரை
ஆழி - வட்டம் வட்டமாகச் சுழித்துப் பெய்கிற
மழை - மழைக்கு,
கண்ணா -ஸ்வாமியானவனே,
ஒன்றும் - கொஞ்சம்கூட,
கைகரவேல் - கைவிடாதொழிய வேணும் அல்லது வஞ்சனை செய்யக் கூடாது,
ஆழியுள் - சமுத்திரத்தின் நடுவில்,
புக்கு- பிரவேசித்து,
முகந்துகொடு - ஜலத்தை எடுத்துக் கொண்டு வந்து,
ஆர்த்து - கர்ஜித்துக் கொண்டு
ஏறி - ஆகாயத்தில் ஏறி வ்யாபித்து,
ஊழி முதல்வன் - ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் எல்லாவற்றிற்கும் காரணபூதனான பகவானுடைய,
உருவம்போல - திருமேனியைப் போல்,
மெய்கறுத்து - உடம்பு கருத்தும்,
பாழி - மிகுந்த பலமுள்ள,
அம் - அழகான,
தோளுடை - தோள்களையுடையவனான,
பத்பநாபன் - பத்மத்தை நாபியிலே உடைய பகவானுடைய,
கையில் - திருக்கையிலிருக்கிற,
ஆழிபோல் - சக்கரத்தாழ்வானைப் போல்,
மின்னி - பிரகாசித்துக் கொண்டு,
வலம்புரிபோல் - சங்கம் போல்,
நின்று அதிர்ந்து - சலியாமல் சப்தித்துக் கொண்டும்
தாழாதே - தாமதியாமல்,
சாரங்கம் உதைத்த - சாரங்கம் என்கிற வில்லால் விடப்பட்ட,
சரமழைபோல் - பாண வர்ஷம் போல்,
உலகினில் வாழ - உலகில் எல்லாரும் வாழும்படியாக,
நாங்களும் - நோன்பிலே ஈடுபட்ட நாமெல்லாரும்,
மார்கழி நீராட - மார்கழி மாதத்தில் ஸ்நாநம் பண்ண மார்கழி நீராட்டமாகிற நோன்பை நோற்க,
மகிழ்ந்து - சந்தோஷத்துடன்,
பெய்திடாய் - மழை பெய்ய வேணும்,
ஏல் ஓர் - எம்பாவாய்.
.....................................................
“கடல் போன்ற, கம்பீரமான மழை பகவானே........................
உன்னிடம் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளாமல், கடல் நீரிலிருந்து வானத்தை அடைந்து, அங்கே எம்பெருமான் திருமேனி போல, மேகங்களாக உடல் கறுத்து, அவனது கையில் உள்ள சக்கரம் போல, மின்னலென மின்னி, வலம்புரிசங்கு போல இடியென இடித்து, எம்பெருமானது சாரங்கம் என்ற வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல விடாது மழையாகப் பெய்திடு!
நாங்களும் மார்கழியில் நீராடி, மகிழ்ச்சியுடன் எம்பெருமானை வணங்குவோம் என்று மழைக் கடவுளான வருண பகவானை அழைக்கிறாள் கோதை.......!
................................................................
“வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று”
என்று வான மழையைத் தேனமுதமாய்க் கருதுகின்றார் வள்ளுவப் பெருந்தகை. மண்ணுலகின் வாழ்வும் வளமும் மழையையே நம்பி இருக்கின்றன.
திருப்பாவை நான்காம் திருப்பாட்டு இந்த மாமழையையே வரவேற்றுப் போற்றுகின்றது. மழைக்கு நாயகனாக வருணபகவானை வேண்டி அழைக்கிறார் நாச்சியார். ‘ஆழி மழைக் கண்ணா, ஒன்று நீ கைகரவேல்’ என்று விண்ணப்பிக்கின்றார்.
ஆழம் மிக்கிருப்பதால் கடல் ஆழியெனப்பட்டது. வட்டமாயப் பூமியைச் சூழ்ந்திருப்பதாலும் ஆழி எனப்பட்டதாகலாம். அந்த விரிந்து பரந்த கடல்போல் கம்பீரம் கொண்டவனும் மழைக்குத் தலைவனுமாக இருப்பவன் வருணன். கண்ணனின் நினைவில் திளைத்திருப்பவர்களாதலால் வருணனையும் ‘ஆழி மழைக்கண்ணா’ என அழைத்தார். மழையைக் கண்போல் காத்து வழங்குவதால் ‘கண்ணா’ என்கின்றார்.
எக்காரணம் குறித்தும் வருணன் தன் வள்ளன்மையைக் குறைத்துக் கொள்ளாது பொழிய வேண்டுமென்பதால் ‘ஒன்று நீ கைகரவேல்’ என்று வேண்டுகின்றார்.
மழை முகில்கள் எப்படிப் புறப்பட்டு வர வேண்டுமென்பதையும் வளம் பொழியும் தமிழால் வகுத்துக் காட்டுகின்றார். முகில் என்ற தமிழ்ச்சொல் குறிப்பது போலத் தண்ணீரை முகந்து கொண்டு வரவேண்டும். சிறிய ஏரிகளில், கிணறுகளில் நீரெடுத்து வந்தால் அது எங்கள் தேவைக்கு ‘திங்கள் மும்மாரி’யாக மழை பொழியப் போதாது.
ஆகையினால் ஆழ்கடலின் அடிமணல்வரை உட்புகுந்து உறிஞ்சி வரவேண்டுமென்பார். ‘ஆழி உட்புக்கு முகந்து கொடு’ என்கின்றார்.
நீர் முகந்த மேகங்கள் அணிவகுத்துப் புறப்படுங்கால் வருகையை அறிவிக்கும் பெருமுழக்கத்தோடு வருதல் வேண்டுமென்பதை ‘முகந்து கொடு ஆர்த்தேறி’ என மொழிகின்றார்.
படையெடுத்து, வானமே கருப்புக் குடையெடுத்து வருவது போல கருப்பு மேகங்கள் அடர்ந்து வருங்கோலத்தை நாச்சியார் கண்ணன் என்னும் காதற் கடவுள் கோலமாகவே காணுகின்றார். படைத்து காக்கும் ஊழி முதல்வனான கண்ணனின் திருமேனி உருவம்போல் கருத்தரிக்க வேண்டுமாம் மேகங்கள். கண்ணனைக் காணாத ஆய்ச்சியர் கண்கள் இந்தக் காட்சியையேனும் கண்டு மகிழ வேண்டுமென்றோ?
முகிலைக் கிழித்து மின்னல்கள் மின்னிக் கொண்டே வர வேண்டும். அந்த மின்னல்களும் கண்ணனையே நினைப்பூட்டுகின்றன. ‘பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல்’ மின்னி வருக என்று வேண்டுகின்றார் ஆண்டாள். வானமெங்கும் விரிந்து கிடக்கின்ற கருமேகங்கள் போல் அமைந்துள்ளன, பரந்து விரிந்து அகன்ற வலிமையான பத்மநாபன் தோள்கள். அவனது கரங்களில் சுழலும் சுதர்சனமெனும் சக்கரப்படை போல் மின்னல்களும் சுழல வேண்டுமாம்.
அந்தப் பரந்தாமன் கையிலே கம்பீரமாய்க் கொலுவிருக்கும் பாஞ்சன்யமெனும் வலம்புரி சங்கம். அந்த ஆழி வெண் சங்கத்தின் முழக்கம் கேட்டு வறுமையும் வறட்சியும் அதிர்ந்து போகும்படி மேகங்கள் முழங்கி வரும் காட்சியைக் காண்கிறார் நாச்சியார்.
தடதடவென்று மின்னி இடிமுழக்கத்தோடு வந்து முகில்கள் மழைபொழிய வேண்டும். அந்த மழைப்பொழிவு திருமாலின் கரத்தில் விளங்கும் சாரங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்டு வரும் ஓயாத அம்பு மழை போல் அமைய வேண்டும். இதனைத் ‘தாழாதே சாரங்கம் உதைத்த சரமழைபோல்’ என்று சித்தரித்தார்.
சரமழையான அம்பு மழை தீயோரையேனும் அழிக்கும் மழையாக அல்லவா அமைந்துவிடும்? ஆனால் வான மழையோ யாரையும் அழிக்காது. நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்று வாழ வைக்கும் இயல்புடையதாதலால் ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்று எச்சரிக்கையோடு பேசுகின்றார் கோதை நாயகியார்.
இனிய மழைக்கோலம் இறைவன் திருக்கோலமாய்த் துலங்கும் எழிலை இப்பாசுரத்தில் காணுகின்றோம்.
மழை கண்ணன் திருவுருவமாய்க் கனிகின்றது. அவன் தண்ணருளாய்ப் பொழிகின்றது. வானம் அவனாகின்றது. அவன் அமுதமழையாகி வாழ்வு தருவோன் ஆகிறான்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-12-2020.

 


1.நீ வணங்கினால், உன்னை எட்டி உதைக்கும், நீ எட்டி உதைத்தால், உன் கால்களுக்கு முத்தமிடும். இதுதான் சமுதாயம்.

2.சமுதாயத்தைக் கண்டு சதா தேவையற்ற பிரச்சனைகளுக்கு பயப்படும் ஒருவன் ஒருகாலமும் ஒரு சகாப்தத்தை உண்டு பண்ணவே முடியாது.
3.சமுதாயம் என்பது ஒரு சறுக்குமரம். இதில் வழுக்கி விழத்தான் அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.
4.சமுதாயம் என்பது ஒரு வினோதமான சாலை. அதில் சில இடங்கள் கரடு முரடாகவும், சில இடங்கள் சமமாகவும், சில இடங்கள் வெளிச்சமாகவும், சில இடங்கள் ஒரே இருட்டாகவும் இருக்கும்.
5.பலர் தன்னை வணங்குவதைக் கண்டு எவனொருவன் தான்தான் உயர்ந்தவன் என்று எண்ணிக் கொள்கிறானோ, அப்போதே அவன் வணங்கியவர்களின் கால் தூசுக்குச் சமமாகி விடுகிறான்.
6.மனிதன் வெய்யிலுக்காகவும், மழைக்காகவும் தான் வீட்டைக் கட்டிக் கொள்கிறான். பின் அதில் இருந்து கொண்டே, வெய்யிலுக்காகவும், மழைக்காகவும் ஏங்குகிறான்.
7.பேச்சுவீரன் காரியத்தை மட்டும் விட்டு விடுவான். ஆனால், காரியவாதி பேச்சை மட்டும் விட்டு விடுவான்.
8.உன்னைப் பற்றி நீயே தாழ்வாக நினைக்காதே! தாழ்ந்து போவதற்கு அது வழி வகுத்துவிடும்.
9.மற்றவரின் செயலுக்கு நீ குறை சொல்வது சுலபம். நீ குறையில்லாமல் செய்வது மிகவும் கடினம்.
10.பிறர் படும் துன்பத்தை உற்றுப்பார். உன் துன்பம் குறைவாகத் தோன்றும்.
11.தோல்வியைக் கண்டு சிரி, முயற்சியைக் கை விடாதே. வெற்றி உன் காலடியைத் தேடி வரும்.
12.நீ துணிவோடு முயற்சி செய். வளர்ச்சியின் வித்து தானாக முளைக்கும்.
13.நீ இரக்கம் மிகுந்தவனாக இரு..........ஆனால், என்றும் ஏமாந்தவனாக இருக்காதே..

 ‘’ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்,

கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்,
திருநாரணந்தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’’
-நம்மாழ்வார் (நாலாயிர திவ்யபிரபந்தம்)
நாடு முழுவதிற்கும் அரசனாக எந்தப் போட்டியும் இல்லாமல் வெகுகாலம் ஆண்டவர்கள் ஒரு காலத்தில் அனைத்தையும் இழந்து ஏழைகளாகி விடுகிறார்கள். கரிய நாய்கள் துரத்தித் துரத்திக் கால்களைக் கவ்வ, உடைந்த பிச்சைப்பாத்திரத்தைக் கையில் தாங்கி உலகமெல்லாம் திரண்டு வந்து அந்த பரிதாபக் காட்சியைக் காணும்படியாக இப்பிறவியிலேயே பிச்சைக்காரர்களாகி விடுகிறார்கள். செல்வத்தின் தன்மை இதுதான், அதனால் அந்தத் திருமகளோடு சேர்ந்த திருமாலின் திருவடிகளை விரைவாக சிந்தித்து அதனால் உய்வு பெறுங்கள்...



 #இன்று_சி_சு_செல்லப்பாவின்_நினைவு_தினம்!

———————————————————-




தேனி மாவட்டம், சின்னமனுாரில், 1912 செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார் சி.சு.செல்லப்பா. தந்தை அரசு அதிகாரி. தந்தையின் பணியிட மாற்றலுக்கேற்ப பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்புகளை முடித்தார். மதுரைக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார். ஆங்கிலேய அரசு அதிகாரியான தந்தை ஒரு தேசியவாதி. தந்தையிடமிருந்து தேசிய ஊக்கம் பெற்ற இவர் சிறு வயதிலேயே ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் தேசியப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அப்போது நூறு தேசியப் பாடல்களுக்கு மேல் மனப்பாடம் செய்து வைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மதுரைக் கல்லுாரியில், பி.ஏ., படித்தார். மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். சிறை வாசமும் அனுபவித்தார். 'சுதந்திரச் சங்கு, மார்கழி மலர்' உள்ளிட்ட இதழ்களில், இவர் எழுதிய சிறுகதை தனிக் கவனம் பெற்றது. 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறுகதை, புதினம், நாடகம், திறனாய்வு, கவிதை என மொத்தம் 29 நூல்கள் வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு பற்றிய, அவரது, 'வாடிவாசல்' குறுநாவல் பெரும் வரவேற்பு பெற்றது. இலக்கிய விமர்சனத்திற்காக, 'எழுத்து' என்ற மாதப் பத்திரிகையை துவக்கினார்.
உண்மையான காந்தியவாதியான அவர், இலக்கியத்துறையில் தான் சரி என நம்பிய ஒன்றுக்காக எல்லாவற்றையும் தத்தம்செய்தார். அரசாங்கம் அவருக்கு அறிவித்த `ராஜராஜன் விருதை’க்கூட கொள்கை நிலை நின்று நிராகரித்தார். அதன் காரணமாக, குடும்பத்தாரின் வெறுப்புக்கும் ஆளானார். தானே அச்சிட்ட, விற்பனையாகாமல் தன் சின்னஞ்சிறிய ஒற்றை அறை வீடெங்கும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கு நடுவே, காது கேளாத தன் துணைவியாருடன் தன் முதுமையைத் தனிமையில் கழித்தவர் செல்லப்பா. , தன், 86வது வயதில் 1998 டிசம்பர் 18ஆம் தேதி இயற்கை எய்தினார்.
செல்லப்பாவின் மரணத்துக்குப் பின், அவருடைய ‘சுதந்திர தாகம்’ நாவலுக்காக 2001-க்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவரது நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது.
சுதந்திர தாகம் நாவலில் வரும் சிவராமன் என்ற தலைமைப் பாத்திரம் வேறு யாருமல்ல, செல்லப்பாவே தான். அந்த நாவலுக்கு கதாநாயகன் கதாநாயகி என்றெல்லாம் யாரும் கிடையாது. மறைமுகக் கதாநாயகன் காந்தி என்று சொல்லலாம். அல்லது சுதந்திரப் போரே கதாநாயக அந்தஸ்தைப் பெற்றது.சி.சு. செல்லப்பா தம் கடைசி ஆண்டுகளில் முனைந்து முழுமூச்சாக ஈடுபட்டு எழுதிய பிரம்மாண்டமான மூன்று பாக நாவல் `சுதந்திர தாகம்`. சி.சு. செல்லப்பா என்றால் இலக்கிய அன்பர்கள் மனத்தில் முதலில் தோன்றுவது அந்த நாவலே.
அதை அவர் தம் உணர்ச்சிகள் முழுவதையும் கொட்டி எழுதியுள்ளார் என்று சொல்ல வேண்டும். தம் இறுதிக் காலங்களில் அந்த நாவலை ஒரு வேகத்தோடு அவர் எழுதி முடித்தார்.
தம் மிக நெருங்கிய நண்பரான தீபம் நா. பார்த்தசாரதி, ஐம்பத்து நான்காம் வயதிலேயே மறைந்தது அவரைப் பெரிதும் வாட்டியது.
பி.எஸ். ராமையா, சிதம்பர சுப்பிரமணியன் போன்ற அவரது பிற நண்பர்கள் காலமானபோதும் செல்லப்பா வேதனை பட்டார்,
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-12-2020.

 “If freedom is to survive and prosper, it will require the sacrifice, the effort and the thoughtful attention of every citizen.”



 #திருப்பாவை

————————-





“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெலூடுகயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!”
பதவுரை:
ஓங்கி - வளர்ந்து,
உலகளந்த - உலகங்களைத் திருவடிகளால் அளந்த,
உத்தமன் - புருஷோத்தமனுடைய,
பேர் - திருநாமங்களை,
பாடி - கானம் பண்ணி,
நாங்கள் - கண்ணனையே ஆசைப்படும் நாங்கள்,
நம் பாவைக்கு - நம்முடைய நோன்புக்கு,
சாற்றி - சம்மதித்து,
நீராடினால் - ஸ்நாநம் செய்தால்,
நாடெல்லாம் - நாடு முழுவதும்,
தீங்கின்றி - வெள்ளக்கேடு - வறட்சிகேடு முதலிய தோஷங்களில்லாமல்,
திங்கள் - மாதம் தோறும்,
மும்மாரி - மூன்று மழைகள்,
பெய்து - பெய்வதினால்,
கயல் - மீன்கள்,
ஓங்கு - வளர்ந்திருக்கிற,
பெரும் - பெரியதாயிருக்கிற,
செந்நெல் - சம்பாநெல் பயிர்களுடைய,
ஊடு - நடுவில்,
உகள - துள்ளி ஸஞ்சரிக்க,
பூம் - அழகான,
குவளைப்போதில் - கருநெய்தல் புஷ்பங்களில்,
பொறிவண்டு - உடம்பில் அழகான கோடுகளையுடைய,
கண்படுப்ப - படுத்துத் தூங்க,
பெரும் பசுக்கள் - உயர்ந்த பசுக்களிடத்தில்,
தேங்காதே - தயங்காதே (யோசிக்காமல்)
புக்கு - பிரவேசித்து
இருந்து - ஸ்திரமாக உட்கார்ந்து,
சீர்த்தமுலை -சுரக்கிற மடிகளை,
பற்றி - கைகளால் பிடித்து,
வாங்க - இழுக்க
குடம் - குடங்களை,
நிறைக்கும் - பாலால் நிரம்பும்,
நீங்காத செல்வம் - அழியாத ஐஸ்வர்யம்,
நிறைந்து - நிறைந்திடுவதால் நமது நோன்பு முடிகிறது.
ஏல் ஓர் - எம்பாவாய்.
........
”பாவை நோன்பில் அதிகாலை எழுந்து நீராடிய பின், மூன்று உலகங்களையும் தனது திருப்பாதங்களால் அளந்த உத்தமனான வாமனன் நாமத்தைப் போற்றிப் பாடினோமேயானால், நாடு முழுவதும் மும்மாரி மழை பெய்திடும்.
செழிப்பான நெற்பயிர்களுக்கு இடையே கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும். குவளைப் பூக்களில் வண்டுகள் கண்ணுறங்கும். பஞ்சம் என்ற நிலையே தோன்றாது.
வள்ளல் குணம் படைத்த பசுக்கள் எல்லாம், தன்னிடம் பாலினைச் சிறிதளவும் தேக்கிக் கொள்ளாமல் குடம் நிறைய பால் சுரந்திடும்.
இப்படி அழியாத செல்வம் எங்கும் நிறைந்திட நாராயணனைப் பாடுவோம் வாருங்கள்” என்று அழைக்கிறாள் கோதை..!
...........................................
இந்தத் திருப்பாட்டில் தாங்கள் நோற்கும் நோன்பின் பயன்களைச் சொல்கிறார் திருவாடிப் பூரத்துச் செகத்துதித்த ஆண்டாள்.
முதல்பாட்டில், ‘நாராயணன்’ என்று திருமாலின் பரத்துவ இயல்பும், இரண்டாம் பாட்டில் ‘பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்’ என்று வியூகமாம் தன்மையும் கூறியவர் இப்பாட்டில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ எனும் விபவம் என்கிற அவதாரப் பாங்கை உணர்த்துகின்றார்.
வாமனனாக வந்து திரிவிக்கிரமனாக வளர்ந்த சிறப்பை, ‘ஓங்கி உலகளந்த’ என்கின்றார். பனிபட்டுச் சாய்ந்த மூங்கில் போலப் பாற்கடலில் சாய்ந்து துயின்றவன் சூரிய கிரணம் பட்டு நிமிர்ந்த மூங்கில் போல ஓங்கி வளர்ந்தான் என்று அழகொழுகக் கூறுவார் பெரியவாச்சான் பிள்ளை.
பிறர்நோகத் தான் வாழ எண்ணுவோன் அதமன்; பிறரும் வாழத் தானும் வாழக் கருதுபவன் மத்திமன்; தன்னினும் பிறர் வாழத் தலைப்படுவோன் உத்தமன் என்பர். இவர்களுக்கு உபகாரம் பண்ணுதலே தன் பேறாகக் கருதுபவனாதலால் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்கின்றார்.
‘பேர்பாடி’ என்று பேசுகின்றார் ஆண்டாள். திருமால் சுட்டிப் பொன் என்றால் அவன் திருநாமம் வேலைப்பாடு செய்யப் பெற்ற பொன் என்று செப்புவார்கள். விரும்பாதவர்களுக்கும் இத்திருப்பெயர் நன்மையே செய்யுமாம். - தாயைக் கொன்றவனுக்குக் கைவலித்தாலும் அம்மா என்று சொல்வது போல.
அப்பெயரைச் சொல்லாவிடில் உயிர்தரிக்க மாட்டாதவர்கள் அப்பெண்கள். பாவை நோன்பு என்ற காரணத்தைக் கொண்டு கண்ணன் அன்பில் ஆராது திளைக்கும் பேறு நிறைவேறிவிட்டால் ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து’ செழிக்கும் என்கிறார் ஆண்டாள். ஆய்ப்பாடியார் செய்த நோன்பின் பயன் அந்த நாட்டுக்கே செழிப்பாகிறது என்பதை உணர்த்த ‘நாடெல்லாம்’ என்கின்றார்.
‘ஓங்கு பெருஞ்செந்நெல்’ என்று நெற்பயிர் செழிப்பதை ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ போன்றே வர்ணிக்கிறார். நெற்பயிரும் திரிவிக்கிரமனைப் போன்றே வானம் முட்ட வளர்கின்றதாம். செருக்காலே யானைக் கன்றுகள் போலே வளர்ந்த கயல்களானவை செந்நெல் பயிர்களின் இடை நுழைய மாட்டாமல் துள்ளிப் போய் விடுகின்றன.
இந்தப் பாய்ச்சலில் அசையும் குவளைப் பூம்படுக்கையில் வண்டுகள் இன்துயில் கொள்ளுகின்றன. இது வயல்களில் கொஞ்சும் வளம். இனி திரு ஆய்ப்பாடி என்னும் ஊரின் செழிப்போ கற்பனைக்கு எட்டாத கவின் வாய்ந்தது.
கால்நடைச் செல்வம் அங்கு கனத்துக் கிடக்கிறது. அவை சாதாரணப் பசுக்கள் அல்ல. ‘தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’. எளியவரும், பழக்கமில்லாதவரும் பால் கறக்க இசைந்து கொடுக்கும் பசுக்கள். பால் கறக்கச் சென்று அமர்ந்தால் பால் சுரப்பு மாறினால்தானே. அது சுரந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.
இருவிரலால் பற்றிக் கறக்க ஒண்ணாதபடி பருத்த காம்புகள் எனினும் தொட்டு வாங்கிய மாத்திரத்தில் தானே நிறுத்தாது பால் சொரிந்து கொண்டே இருக்கும் பசுக்கள். குடங்களை மாற்றி மாற்றி வைத்தாலும், அவை நிறைந்து வழிந்து கொண்டே இருக்கும். குடங்கள் தீர்ந்தாலும் பாலின் பெருக்குப் பாய்ந்து கொண்டே இருக்கும்.
பசுக்களை ‘வள்ளல் பெரும்பசுக்கள்’ என்கின்றார். கண்ணனைப் போலவே கேட்டவை கொடுக்கும் இயல்புள்ளவை அப்பசுக்கள். ‘தூது போ’ என்று யாரோ சொன்னால் இவன் உடனே சரி என்கின்ற இயல்புள்ளவன். கேட்டதைக் கொடுக்கும் தேட்டத்தில் அப்படியே அப்பசுக்களும். அவை ‘பெரும் பசுக்கள்’. புல்லும் தண்ணீரும் அருந்தியதால் மட்டும் வளர்ந்தவை அல்ல அப்பசுக்கள். கண்ணனின் திருக்கரங்களால் தடவப் பெற்ற பரவசத்தால் ஆனந்தமாய் வளர்ந்த பசுக்கள் அவை. அதனால் ‘பெரும் பசுக்கள்’ என்றார்.
இங்கு நீங்காத செல்வம் பாவை நோன்பின் பரமானந்தப் பக்குவத்தால் எங்கும் நிறைந்து செழிக்கின்றது.
‘ஓங்கி உலகளந்த’ என்று தொடங்கும் இப்பாடலில் கண்ணனோடு கலந்த காதல் ஓங்குகிறது. வயல்களில் செந்நெல் ஓங்குகிறது. வண்டுகளின் இன்பம் ஓங்குகிறது. பசுக்களின் பால் வளம் ஓங்குகிறது. எங்கும் நீங்காத செல்வம் நிறைந்தோங்குகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-12-2020.

 மார்கழி...

அடுத்து தையை எதிர்பார்த்து!
18-12-2020.





 #அரசியல்_கூறுகள்_3

———————————————————




இந்தக் கேள்விக்கு நாம் அளிக்கும் பதில், ‘இயல்’ ‘விஞ்ஞான ரீதியான’ ஆகிய சொற்களுக்கு நாம் கொடுக்கும் பொருளைப் பொறுத்திருக்கிறது. எல்லாவித கருத்தமைந்த படிப்பும், ‘விஞ்ஞான ரீதி’யில்தான் இருக்க முடியும். அதாவது, கண்டறியக் கூடிய உண்மைகளின் அடிப்படையில் எல்லா முடிவுகளும் செய்யப் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சம் பகுத்தறிவு ஆராய்ச்சியோடும், உய்த்துணர்வோடும், குறைந்தபட்ச ஒருதலையான தன்மையோடும், மனவெழுச்சியோடும் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். ஆனால், பின்னர் நிகழப்போகும் நிகழ்ச்சிகளைக் கணக்கிட்டு அறிந்து கொள்வதை விஞ்ஞானம் என்று நாம் குறிப்பிட்டால், அரசியல் ஒரு விஞ்ஞானம் ஆகாது.
ஏனெனில், இதன் முடிவுகள் பரிசோதனைச் சாலையில் பொருள்களின் மீது பெறும் முடிவுபோன்று இல்லாமல் மனிதர்களைப் பற்றி அறியப்பெறும் முடிவுகள் ஆகும். மனிதர்களை ஒன்றுசேர்த்து வாழச் செய்வனவும், பொது நலங்களுக்குரிய காரியங்களில் ஒத்துழைக்கச் செய்வனவுமாகிய ஒரு கலைதான் அரசியல் ஆகும். மனிதர்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நிச்சயத்தையும், என்ன நிபந்தனைகளின்பேரில் அவர்கள் ஒன்றாக வாழக் கூடும் என்ற முடிவில்லா, நிச்சயமற்ற தன்மைகளையும், ஒருங்கே வேண்டுமென்றே வலிந்து ஏற்றுக் கொள்கின்ற மனிதன்தான் அரசியல்வாதி (பெருமளவிற்கு அரசியல் விஞ்ஞானியுங்கூட). இந்த நிபந்தனைகளை முன் மொழியும் பணிகளையும் தானே மேற்கொள்வதோடு, மனிதக் கூட்டத்தை வெற்றியுள்ளதாக மாற்றும் பணியையும் அவன் மேற்கொள்ளுகின்றான்.’ என்று ஹாக்கிங்( Hocking) கூறுகிறார்.
ஹாக்கிங் சொன்னது நேர்மையான அரசியல் தளத்தில் செயல்படும் மனிதனுக்குதான் இது பொருந்தும். ஆனால், இன்றைக்கோ அரசியல் ஒரு தொழில் வியாபாரமாகிவிட்டது. தன்நலம், தனக்கு ஊடக வெளிச்சம், என்ற நிலையில், இன்றைக்கு அரசியல் களத்தில் பல போலி பாசாங்கு செய்து கொண்டு நடமாடுகிறார்கள். இந்த வியாபார அரசியலும், சுயநல அரசியல் வியாபாரிகளும், அரசியல் என்ற இயலுக்குள் வரமாட்டார்கள். பிறகு எப்படி அவர்களிடம் அரசியல் விஞ்ஞானத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-12-2020.

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...