Thursday, April 2, 2026

தேசப்பணியில் அடுத்த கட்டம் – சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் சந்திப்புப் பயணம்! 🚩

 தேசப்பணியில் அடுத்த கட்டம் – சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் சந்திப்புப் பயணம்! 🚩

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொடர் சுற்றுப் பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புதிய பொறுப்பை வழங்கிய தலைமைக்கும், என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தச் சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக, கீழ்க்கண்ட தொகுதிகளில் தொண்டர்களைச் சந்திக்கவும், மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் வருகை தருகிறேன்: 📍 204 – சாத்தூர் 📍 206 – விருதுநகர் 📍 214 – தூத்துக்குடி 📍 218 – கோவில்பட்டி நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (Viksit Bharat) கனவை நனவாக்கவும், தமிழகத்தில் தாமரை மலரச் செய்யவும் நாம் இணைந்து பயணிப்போம். இந்த நல்வாய்ப்பினை வழங்கிய: 🪷 மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் , 🪷 மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கும், 🪷 மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், 🪷 தேசியத் தலைவர் திரு. நிதின் நபின் அவர்களுக்கும், 🪷 தமிழக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் குரலாய்... மாற்றத்தின் தொடக்கமாய்... தொகுதிகளில் சந்திப்போம்! #BJP #TamilNaduBJP #ModiKiGuarantee #ViksitBharat #Virudhunagar #Sattur #Kovilpatti #Thoothukudi #NainarNagendran #BJPIndia #KSRadhakrishnan #KSR

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…