Watching the 9th consecutive #UnionBudget presented by #NirmalaSitharaman today.
Notably, this is the first time a Union Budget has been presented on a Sunday. A moment that reflects continuity, decisive leadership, and the BJP’s commitment to reform-led growth and inclusive development. Confident that today’s measures will strengthen India’s economic foundations and create long-term opportunity. இன்று இந்திய நாடாளுமன்றத்தில் மக்கள் அவையில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.. மிகச் சிறந்த தமிழ் பாரம்பரிய நெசவாளிகள் உடையான காஞ்சிவரம் பட்டுச் சேலை அணிந்து அமைச்சர் இந்த பட்ஜெட்டை அறிவிக்கிறார். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இன்று (பிப்ரவரி 1) மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு புதிய மைல்கல்லை எட்டுகிறார். பன்மையில் ஒருமைப் பொருள் (Singular in Plural) இந்தியாவின் காலச்சார பெருமை என்பதைத் தனது தமிழ்க் கலாச்சார அடையாளமான சேலையின் வடிவில் நின்று தன் பன்முக மதிப்பை லெளிப்படுத்தும் தமிழகத் திருமகளாய் இந்த பட்ஜெட்டை நமக்குக்கையளிக்கிறார். அவர் முன் வைத்ததில் ஓர் இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒரு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை நாளில் பட்ஜெட் வெளியிடப்படுவது இதுதான் இந்திய அரசியலில் முதல் முறை! இந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதிநிலை அறிக்கையை அதன் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறைக்கு முன்பாக அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதான் பிப்ரவரி 21ஆம் தேதியை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்! அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசி நாட்களான குறிப்பாக 21ஆம் தேதிகளில் தான் பட்ஜெட்டை நடைமுறைக்குக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. அதன் பிறகு அதை மாற்றி அப்போதைய நிதியமைச்சர் யஸ்வந்த் சின்கா அவர்கள் தான் 1999- 2000 ல் பிப்ரவரி ஒன்னாம் தேதி அன்று இந்த பட்ஜெட்டை வெளியாக்கும் நடைமுறையை வழக்கத்திற்குக் கொண்டு வந்தார். இன்றுவரை அந்த மரபு காப்பாற்றப்பட்டு வருகிறது. சரி இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று என்னைக் கேட்டால் இந்த இந்திய நாட்டின் நிதி அமைச்சர் மதிப்புக்குரிய நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த பட்ஜெட்டை தான் பிறந்த நிலத்தின் நெசவாளர் குடும்பங்களின் சாட்சியாக அவர்கள் கையால் நெய்த பட்டுப்புடவையை அணிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் நமது தமிழ்நாட்டின் பெருமையாக நின்று இந்த பட்ஜெட்டை அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் வைத்த தமிழக தென்னை விவசாயிகள் நலன மற்றும்…. 1. தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், மற்றும் அஸ்தினாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் கலாசார மையங்கள் அமைக்கப்படும்.தமிழ் மொழி சிறப்பை மேம்படுத்தவும்…. 2. நாடு முழுவதும் 7 நகரங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். சென்னை–பெங்களூரு, சென்னை–ஹைதராபாத், பெங்களூரு–ஹைதராபாத், பூனே–ஹைதராபாத், மும்பை–பூனே உள்ளிட்ட வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் இயக்கப்படும். 3. பழவேற்காடு ஏரியில் பறவைகள் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். 4. செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கணினி வழித்தடத் திட்டம் செயல்படுத்தப்படும். 5. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முதலீட்டு வரம்பு 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும். 6. இந்தியாவில் செயல்படும் தரவு (டேட்டா) மையங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி விலக்கு வழங்கப்படும். 7. ‘மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ்’ என்ற பெயரில் காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறைகளுக்கு ஊக்கமளிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்துறைகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 8. மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் விதைகள் மற்றும் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. 9. புற்றுநோய்க்கான 12 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. 10. 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. 11. விமான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது 12. தமிழக அரிய வகை தாது வளங்கள் குறித்தும் திட்டங்கள் இப்படி பல…. இந்திய மாநில சுயப் பெருமைகளை விட எங்களது நிதியமைச்சர் அனைத்து மாநில உரிமைகளையும் உள்ளடக்கிய ஒரு முக்கியமான பட்ஜெட்டை இந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி கொண்டு வந்திருக்கிறார். பொருளாதார நிபுணர்கள் அரசியல் ஆலோசகர்கள் பிறகு இந்திய தேசிய ஒருமைப்பாடு இவற்றில் கரை கண்டவர்கள் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் இந்த பட்ஜெட்டைக் கவனமாக பார்க்க வேண்டும். அந்நிய நாடுகளிடம் கடன் பெற்றுப்பொருளாதார ஆதரவை அடைவதை விட இந்திய தேசிய 1/2
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment