கடந்த (26-07-2015) ஞாயிற்றுக்கிழமையன்று, பிரதமர் மோடியின் நண்பரான பேராசிரியர். பரத்குமார் திருபாய் டேங்கர் அவர்களின் அழைப்பின் பேரில், குஜராத் கிராமப்புறங்களை நானும், சகோதரரும். நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.ச.தங்கவேலுவும் நல்ல மழைப் பொழிவுக்கிடையில் பார்வையிடச் சென்றிருந்தோம்.
பருத்தி, வாழை, கரும்பு, நிலக்கடலை போன்ற கரிசல் மண்ணில் விளையும் பயிர்களை அங்கு காண முடிந்தது. இதனைப் பார்த்தபொழுது வானம் பார்த்த விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகாசி சாத்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, ஓட்டபிடாரம், விளாத்திகுளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர், சங்கரன் கோவில் போன்ற பகுதியில் காணப்படுவதைப் போலவே குஜராத்தில் பார்வையிட்ட இடங்களில் உள்ள மண்வகையும் கரிசல்மண் வகையைச் சார்ந்திருந்தது.
எப்படி இங்கே, கருவேல மரங்களும், பனை மரங்களும் இருக்கின்றதோ, அப்படியிருந்த நிலத்தில் அவற்றையெல்லாம் அழித்து, கடுமையாக உழைத்து குஜராத் விவசாயிகள் விவசாயத்தில் வெற்றி பெற்று வருகின்றனர்.
இதற்கு காரணம், செழிப்பான நீர்வளமும், அரசுத்தருகின்ற திட்டங்களும், வங்கிக்கடன் உதவுகளும் சரியான விதத்தில் தங்குதடையின்றி விவசாயிகளுக்குக் கிடைப்பதும் தான். இந்த சூழல் இங்குள்ள கரிசல் மண் விவசாயிகளுக்கு இல்லையே என்ற வேதனையும் மனத்தில் எழுந்தது.
குஜராத் வேளாண்மைக்கு அடிப்படைக் காரணம் நர்மதா நதி மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை தான். இந்த அணை கட்டிய பிறகு வாய்க்கால்களில் தண்ணீர் செழிப்பாக வந்து, பாசன வசதிகள் கிடைத்ததுதான் அங்குள்ள விவசாயிகளுக்கு ஒரு தைரியத்தைக் கொடுத்தது.
துவக்க காலத்தில் நர்மதா அணையைக் கட்டும்போது, மேதா பட்கரின் போராட்டத்தை ஆதரித்தவன் என்றாலும், தொடர்ந்து நதிநீர் இணைக்கப்பட வேண்டுமென்று முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உச்சநீதி மன்றம் வரை சென்று போராடியவன் என்ற காரணத்தால் இந்தத் திட்டம் சரிதான் என்று மனதில் படுகின்றது. ஆனாலும் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்ட மக்களின் துயரமும் ஒரு பக்கம் மனதை வாட்டுகிறது.
நர்மதா நதி மத்திய பிரதேசத்தில் உற்பத்தியாகி 1312 கிலோமீட்டர் பயணம் செய்து குஜராத்தில் கடலில் கலக்கிறது. பண்டிதர் நேருவின் கனவான பரந்த, புதிய இந்தியா கொள்கையால் சர்தார் வல்லபாய் படேல் தான் பிறந்த மண்ணில் இந்த அணையைக் கட்டவேண்டும் என்று விரும்பினர் என்ற கருத்து தெரியவந்தது.
அதனாலே சர்தார் வல்லபாய் படேலின் பெயர் இந்த அணைக்குச் சூட்டப்பட்டு, அவருடைய முழு உருவச் சிலையும் இங்கு அமைக்கப் பட்டுள்ளது. சற்று தொலைவில், மோடி அரசு பிரம்மாண்டமாக சர்தார் சிலை அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டோம்.
1965ம் ஆண்டு க்ஹோச்லா கமிட்டி 530 அடி அணை ஒன்றை நவகம் (இன்றைய சர்தார் சரோவர் அணை) அமைக்கப் பரிந்துரைத்தது. சொல்லி, அதில் கிடைக்கும் நீரை மத்திய பிரதேசத்திற்கும், குஜராத்தும் பிரித்து கொள்ள திட்டம் வரையறுக்கபட்டது. ஆனால், மத்திய பிரதேஷம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்குள் திட்டத்துக்கான செலவுகளைப் பிரித்து கொள்வதில் பிரச்சனை எழுந்தது.
1969ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நர்மதா நதி நீர் ஆணையம் (NWDT) ஒன்றை அமைத்து இந்த பிரச்னையை தீர்க்கச் செய்தார். இதன் மூலம் மத்திய பிரதேஷம் அணையின் உயரம் 210 அடியாக இருக்க வேண்டும் என்று சொல்ல, குஜராத் மாநிலமோ அணையின் உயரம் 530 அடி உயரம் இருந்தால்தான் குஜராத் பயனடையும் என்று வாதிட்டது. முடிவில், 1979ம் ஆண்டு இந்த ஆணையம் 453 அடிக்கு ஒப்புதல் அளித்தது. இறுதியாக 455 அடி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்தார் சரோவர் அணை கட்டும்போது வழியில் இருக்கும் கிராமங்கள், காடுகள் அழிக்கப்படும், அது மட்டும் இல்லாமல், பெறபடுவதாக கூறப்படும் மின்சாரமும் குறைவாக இருக்கும் என்பது இந்த அணையை எதிர்த்துப் போராடிய மேதாபட்கரின் வாதம். அணைகட்டுவதற்காக அப்புறப்படுத்தப் பட்ட மக்களின் வீடுகளுக்கும், நிலங்களுக்கும் இன்றும் பணமோ, மாற்று ஆதாரமோ கொடுக்கவில்லை என்பது வேதனையான விசயம்.
சர்தார் சரோவர் அணையின் மூலம், 1450மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஜப்பான் தொழில் நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கட்டமைப்பாக இது இருக்கின்றது. ஆறு டர்பன்கள் அமைத்து, 1200மெகாவாட் மின்சாரம் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஐந்து இடங்களில் சிறிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து தலா ஐம்பது மெகாவாட் என 250 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது.
1200மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் ஆறு டர்பன்கள் அமைந்துள்ள இடம் கிட்டத்தட்ட 1.5கி.மீ மலையைக் குடைந்து அதன் உட்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை சர்தார் சர்வோயர் ஹைட்ரோ எலக்ட்ரிக் பிராஜக்ட் என்று அழைக்கின்றார்கள்.
இங்கு உற்பத்தி செய்யபடும் மின்சாரத்தில், மகாராஷ்ட்ரத்திற்கு 27சதவிகிதமும், குஜராத்திற்கு 16 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்திற்கு 57சதவிகிதமும் பகிர்ந்தளிக்கப் படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்திற்கு கால்வாய் வழியாக பாகிஸ்தான் எல்லை வரை இந்த அணையின் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு பாசனவசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக, மத்திய பிரதேசம், மகராஷ்ட்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்கள் மின்சரமும், தண்ணீரும், ராஜஸ்தானுக்கு பாசனத்திற்கு தண்ணீரும் இந்த அணையின் மூலம் வழங்கப் படுகிறது. கூட்டுறவு சமஸ்டி அமைப்பில் உள்ள இந்த மாநிலங்களுக்கு இடையிலான பகிர்தல் வரவேற்கத்தக்கது.
இதுபோல தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய நீர் ஆதாரங்களில் கேரளாவும், கர்நாடகமும், ஆந்திரமும் தடுக்கின்றதே என்ற வேதனைதான் அந்த அணையைப் பற்றி விவரங்கள் கேட்டறிந்தபோது மனதில் பட்டது.
Benefits of Sardar Sarovar Narmada Dam Project.
IRRIGATION
The Sardar Sarovar Project will provide irrigation facilities to 18.45 lac ha. of land, covering 3112 villages of 73 talukas in 15 districts of Gujarat. It will also irrigate 2,46,000 ha. of land in the strategic desert districts of Barmer and Jallore in Rajasthan and 37,500 ha. in the tribal hilly tract of Maharashtra through lift. About 75% of the command area in Gujarat is drought prone while entire command in Rajasthan is drought prone. Assured water supply will soon make this area drought proof.
DRINKING WATER SUPPLY
A special allocation of 0.86 MAF of water has been made to provide drinking water to 131 urban centres and 9633 villages (53% of total 18144 villages of Gujarat) within and out-side command in Gujarat for present population of 28 million and prospective population of over 40 million by the year 2021. All the villages and urban centres of arid region of Saurashtra and Kachchh and all "no source" villages and the villages affected by salinity and fluoride in North Gujarat will be benefited. Water supply requirement of several industries will also be met from the project giving a boost to all-round production.
POWER
There are two power houses viz. River Bed Power House and Canal Head Power House with an installed capacity of 1200 MW and 250 MW respectively. The power would be shared by three states - Madhya Pradesh - 57%, Maharashtra - 27% and Gujarat 16%. This will provide a useful peaking power to western grid of the country which has very limited hydel power production at present. A series of micro hydel power stations are also planned on the branch canals where convenient falls are available.
FLOOD PROTECTION
It will also provide flood protection to riverine reaches measuring 30,000 ha. covering 210 villages and Bharuch city and a population of 4.0 lac in Gujarat.
WILD LIFE
Wild life sanctuaries viz. "Shoolpaneshewar wild life sanctuary" on left Bank, Wild Ass Sanctuary in little Rann of Kachchh, Black Buck National Park at Velavadar, Great Indian Bustard Sanctuary in Kachchh, Nal Sarovar Bird Sanctuary and Alia Bet at the mouth of River will be benefited.
ADDITIONAL PRODUCTION
SSP would generate electricity. On completion, annual additional agricultural production would be Rs. 1600 crores, power generation and water supply Rs. 175 crores, aggregating about Rs. 2175 crores every year equivalent to about Rs. 6.0 crores a day.
Benefits to small and marginal Scheduled Caste/ Scheduled Tribe farmers would be as under :
OTHER BENEFITS
Marginal farmers (< 1 ha.) 28.0 %
Small farmers (1 to 2 ha.) 24.4%
Scheduled Tribe 8.7%
Scheduled Caste 9.1%
Source : Sardar Sarovardam Website
குஜராத் கிராமப்புறங்களை நாங்கள் பார்வையிட்டுவிட்டு, படத்தில் இருக்கும் ஏர் உழவுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்த விவசாயியிடம் அரைகுறை இந்தியில் பேச்சுக் கொடுத்தோம். அதை அவருக்கு ஆங்கிலத்தில் பரத்குமார் மொழிப்பெயர்த்துச் சென்னார்.
நவீன வேளாண்மைக்கு ட்ராக்டர்கள் வந்துவிட்ட பிறகும், உழவு மாடுகளை வைத்து ஏர் உழவு செய்வது பற்றிக் கேட்டதற்கு, “விவசாயம் எங்கள் பாரம்பரியம். இந்த ஏரையும், மாடுகளையும் நாங்கள் எங்கள் அடையாளமாகப் பார்க்கிறோம். இதைத் தவிர்த்துவிட்டு எங்களால் விவசாயம் செய்வது நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது.
மேலும் படத்தில் இருக்கும் ஆடுமேய்க்கும் பெண்களிடம் விசாரித்தபோதும், தமிழகத்தில் வசிக்கும் எளிய மக்களின் மனவெளிப்பாட்டைப் போலவே அவர்களுடைய வெளிப்பாடும் இருந்தது. மழை நாளின் ஈரத்தில் கிராமங்களைப் பார்வையிட்டு முடித்து பரோடா நகரில் அமைந்துள்ள MS பல்கலைக் கழகத்திற்குச் (Maharaja Sayajirao University of Baroda) செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அகன்ற பரப்பில் பழமையின் சின்னங்களாய் எழுந்து நிற்கும். அக்காலத்தில் பரோடா அரசர் கட்டிய கம்பீர கட்டிடங்களைப் பார்க்கும் போது, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் போன்ற பழைய பல்கலைக்கழகக் கட்டிட அமைப்புகள் நினைவில் வந்து சென்றது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்யா பல்கலைக்கழகம் போன்று விரிந்த பரப்புகளில் பிரம்மாண்டமாக நிற்கும் மகாராஜா சாயாஜிராவ் பழைய கட்டிடங்கள் நம்முடைய கண்களுக்கு காட்சியாக அமைந்துள்ளன.
அதேப்போல பரோடா மன்னர் பிரதாப் சிங் கெய்க்வாட் மன்னர் கட்டிய அரண்மனைக்குச் செல்லும் பொழுது பழைய வரலாற்றுச் செய்திகளோடு, பல தரவுகளும் கிடைத்தது. அவற்றையெல்லாம் எழுதவேண்டும் என்றால் தனிப் பத்தியாக எழுதவேண்டும்.
மன்னர் கெயிக்வாட் அரசர் வம்சத்தைச் சேர்ந்தவர் அல்ல. குழந்தைகள் இல்லாத பரோடா அரசர் குதிரையில் செல்லும் வழியில் எதிர்பட்ட ஆடுமேய்க்கும் சிறுவனின் அறிவுத் திறன் கண்டு வியக்கிறார். அச்சிறுவனைத் தத்தெடுத்து, வளர்த்து பரோடாவிற்கு மன்னராக முடி சூட்டுகிறார். எளிய குடும்பத்திலிருந்து மன்னரான பிரதாப் சிங் கெய்க்வாட் ஏழை எளிய மக்களின் துயர்களை அறிந்து பல நன்மைகளை பரோடாவிற்குச் செய்கின்றார்.
இப்படியாக பல செய்திகளை இந்த பயணத்தில் அனுபவித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-08-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #sardarsarovardam, #Paroda,

No comments:
Post a Comment