#கோமல்_சுவாமிநாதனின்_தண்ணீர் #தண்ணீர்
———————————————-கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் திரைப்படம் எடுத்த ஏரி இது. கோவில்பட்டியில் இருந்து தம்பி சத்திய பாரதி அனுப்பினார் இந்த படத்தை அனுப்பினார். மகாகவி பாரதி பிறந்த எட்டையபுரத்திற்கும் தூத்துக்குடிக்கு இடையே ஏழுப்பட்டி என்ற எத்திலப்பநாயக்கன்பட்டி, மஞ்சநாயகன்பட்டி என்று ஏழு சின்ன சின்ன கிராமங்களாக இருக்கும். தண்ணீர் தண்ணீர் திரைப்படம் வெளி வந்த பின், கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டு இந்த பகுதியில் வாக்குகள் கேட்டு சென்ற போதும் அதே போல் தண்ணீர் பஞ்சம்.
"தண்ணீர் தண்ணீர்" படத்தின் இயக்குநர் கே.பாலசந்தரின் பார்வை கோவில்பட்டியின் மீது பட்டது கோவில்பட்டியின் அருகில் குருமலை அய்யனார் கோவில் நீர்தடாகம் மலையிலிருந்து புறப்பட்டும் நீர்கசிவு கோவில் அருகில் நீர் சுனையில் தேங்கும்...1995 வரை மலையின் அடிவார நீர்தடாகம் கோடையிலும் வற்றாது இருந்தது...ஆனால் இப்போது அங்கு நீர் கசிவு சுனை இல்லை....
தண்ணீர் தண்ணீர் திரைபடம் அந்த நீர்தடாகத்திலிருந்து தொலைதூர கிராமத்திற்கு தண்ணீருக்காய் அலையும் மக்களை பற்றியது ஒரு வெளியூர் மனிதன் அருகிலுள்ள இந்த நீர்தடாகத்திலிருந்து கிராம மக்களுக்காக தண்ணீர் கொண்டுவர ஓடை வெட்ட,முயற்சிக்கும் போது அதுவரை வராத அரசியல்வாதியும், காவல்துறையும் வந்து தடை போடும் பிரச்சினை நீண்டு கொண்டே சமூகத்தின் அடித்தளத்தை ஆழமாக ஆராயும்......#தண்ணீர் #தண்ணீர் அன்றைய சூழலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய திரைபடம்.
பார்க்க இந்த வீடியோ
http://ksradhakrishnan.in/?p=16139
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
K. S. Radhakrishnan
04.05.2020
No comments:
Post a Comment