Tuesday, December 8, 2020

 #கரோனா

#சொந்த_ஊருக்கு_திரும்ப....
#அப்படியும்_இப்படியும்
———————————————-


தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப பல சிரமங்கள்;அப்படி நடையை
கட்டி திரும்ப பல நாட்கள். குடிக்க தண்ணீர் இல்லை. உணவும் இல்லை.இதில் சில மரணங்கள். இப்படியான துயரங்கள்....
ஆனால் சிலருக்கு....

மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட சோம் டிஸ்டிலரீஸ் நிறுவன உரிமையாளர் ஜெகதீஷ் அரோரா (மதுபான ஆலை உரிமையாளர்) டெல்லியில் வசிக்கிறார். அவருடைய மகள் இரண்டு பேரப்பிள்ளைகள் ஊரடங்கால் போபாலில் சிக்கி தவித்தனர். அவர்களில் டெல்லி அழைத்து வருவதற்காக 180 இருக்கைகள் கொண்ட தனி விமானத்தை அந்த தொழிலதிபர் முன்பதிவு செய்தார்.
கடந்த 25ஆம் தேதி காலை 9.05 மணிக்கு தனி விமானம் டெல்லியில் இருந்து போபால் சென்றது. அதில் விமானிகளும் ஊழியர்களும் மட்டுமே இருந்தனர். காலை பத்து முப்பது மணிக்கு விமானம் போபால் சென்றடைந்தது. அங்கு தொழில் அதிபரின் மகள் இரண்டு பேரப் பிள்ளைகள் மற்றும் பணிப் பெண் ஆகிய 4 பேர் மட்டும் விமானத்தில் ஏறினர். காலை 11.30 மணிக்கு போபாலில் இருந்து புறப்பட்ட தனி விமானம் நண்பகல் 12.55 மணிக்கு டெல்லி சென்றடைந்தது.

இதுகுறித்து போபால் விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:
குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட விடக்கூடாது என்பதற்காக 180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் ஏ.320 விமானத்தை தொழிலதிபர் முன்பதிவு செய்தார். இதற்காக அவர் ரூபாய் 20 லட்சம் வரை கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.
இதற்கு முன்பு கடந்த 21ஆம் தேதி ஐரோப்பாவிலிருந்து 3 பேர் கொண்ட குடும்பத்தினர் தனி விமானம் மூலம் இந்தியா வந்தனர். இதற்காக அந்த குடும்பத்தினர் ரூபாய் 80 லட்சத்தை கட்டணமாக செலுத்தினர். இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
29.05.2020

No comments:

Post a Comment

Reached me today…