Saturday, December 12, 2020


 நான் விளையாடும் வயதிற்கு சொந்தக்காரன். ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என பேசுவது எனக்கு அப்போது மிக சாதாரணமான ஒன்று. வளைவதென்றால் எனக்கு வராத ஒன்று. தலை நிமிர்ந்து, மனத்திலே பட்ட கருத்துக்களைப் பளிச்சென எடுத்துச் சொல்பவன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறும் பொல்லாங்கிற்கு அப்பாற்பட்டவன். கொள்கையிலே காதல் அல்ல, அக்கறை ஆர்வமும் கொண்டவன். என்னை ஓட்டுகள் கேட்பதற்காகத் தெருத்தெருவாக அழைத்து செல்லும்போது கழக நண்பர்கள் கரம் கூப்பி கேட்க சொல்வார்கள். அப்போது எனக்கு அது வராத ஒன்று! ஓட்டு கேட்க செல்கின்ற இடத்தில், வாக்காளர் ஏதாவது கோபமாக பேசிவிட்டால் அதை தாளுகின்ற பக்குவத்தை நான் பெறாத காலம். ஆனாலும், அந்தத் தேர்தல்தான் எனது அரசியல் வாழ்க்கையை செம்மைப்படுத்தி உருவாக்கியத் தேர்தல்! அந்த கால சக்கரங்கள் ஓடி விட்டது.

பல நேரங்களில், தோற்பவர்களே வெற்றியாளர்கள்.
••
பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்
துயரிலாது எனைச் செய்துவிட்டாள்
துன்பம் என்பதைக் கொய்து விட்டாள்
-மகாகவி பாரதி
11-12-2020.
பாரதி பிறந்த நாள்.

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ