Thursday, December 10, 2020

 #இந்திய_படகுகள்_இலங்கையில்அழிப்பு

———————————————————



இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் பல கோடி மதிப்பிலான மீன்பிடி படகுகள் அழிக்கப்பட விருப்ப
தாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவை வரையறுத்து அந்தப் பகுதிக்கு பட்டா வழங்கும் நடைமுறை முந்தையைக் காலங்களில் இருந்துள்ளது என்ற சான்றுகள் மீனவ சமுதாயத்துக்கு கடலில் உள்ள தொழில் உரிமையை உணர்த்துகின்றன.
இன்று அடையாளம் இல்லாத எல்லையை வகுத்து, கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தது குற்றம் என்றுக் கூறி இலங்கை கடற்படையினரை தமிழக மீனவர்களை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரவதை செய்து வருகின்றன.
1983 ஆண்டிலிருந்து தற்போதுவரை சுமார் 600க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், கைதுகள், பல உடைமைகள் இழப்பு என பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர் மீனவர்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் எல்லைத் தாண்டி வந்ததற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1300 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 300 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக, இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் 2018ல் விடுவிக்கப்பட்டனர். 173 படகுகளும் விடுவிக்கப்பட்டன. பிறகு, 35 படகுகள் மீட்கப்பட்டன. மீதமுள்ள படகுகளை மீட்பதில் ஏற்பட்ட தொய்வு காரணமாக தற்போது 121 படகுகளை அழிக்க உள்ளதாக தகவல்.
சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகள், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் துறைமுகங்களில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் என இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதையடுத்து, சிறை பிடிக்கப்பட்டுள்ள படகுகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யலாம் அல்லது உடைத்து அப்புறப்படுத்தலாம் என சமீபத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினால் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகள் விரைவில் அழிக்கப்படவுள்ளன அல்லது விற்பனை செய்யப்படவுள்ளன.
இதில், 25 படகுகள் நாகை மாவட்டத்தையும், 4 படகுகள் காரைக்கால் மாவட்ட மீனவர்களுக்கு சொந்தமானவை. 60க்கும் மேற்பட்ட படகுகள் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கும், மீதமுள்ளவை ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டமீனவர்களுக்கும் சொந்தமானவை.
யாழ்ப்பாணம் நீதிமன்ற தீர்ப்பினால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் படகுகளை மீட்க வேண்டும் அல்லது அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இந்தியாவின் சொத்தை அழிக்கும் உரிமை இலங்கைக்கு உள்ளதா? இதை மத்திய அரசு அனுமதிக்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
படகுகளை மீட்க இயலாது என மத்திய மாநில அரசுகள் தங்கள் இயலாமையை ஏற்றுக் கொண்டால், மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய படகை முழு மானியத்தில் அரசு வழங்க வேண்டும் என்று கூறினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படகும் ரூ.40 லட்சம் முதல் ரூ.90 லட்சம் மதிப்புடையது. இந்திய படகுகளை மீட்க வேண்டும் அல்லது அதற்கான இழப்பீட்டை மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சினைகளுக்கு மத்திய மாநில அரசுகள் தீர்வு கொண்டு வர வேண்டும் என்பதுதான் மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-12-2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...