#கிம்_ஜங்_கூறிய_ரகசியமென்ன?
————————————————
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு வேடிக்கை மனிதர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது சீனா மற்றும் ரஷ்யா அதிபர், பற்றி அவர் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர்டிரம்பிடம்,வடகொரிய அதிபர் கிம் ஜங், தன் மாமாவிற்கு மரண தண்டனை விதித்து சுட்டுக் கொன்றது உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்ப டையாககூறியதகவல்,தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பாப் இட்வாட். “ரேஜ்” என்ற புத்தகம் எழுதி யுள்ளார். இதில், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்தித்தபோது, அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை தொகுத்து எழுதியுள்ளார்.
மனம் திறத்தல்அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் அமெரிக்காவில் முதல் முதலாக பரவத் துவங்கியபோதே, அதன் வீரியத்தையும், விபரீத்தையும் டிரம்ப் நன்றாக தெரிந்து வைத்திருந்தார்.
அந்த வைரஸ் காற்றில் பரவக் கூடியது என்பதும், மிகவும் மோசமான அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், வெளியில் பேசும்போது அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை. மிகவும் சாதாரண விஷயம்போல், அதைவெளிப்படுத்தினார்.
கடந்த 2018ல் கிழக்காசிய நாடான வடகொரியாவின் அதிபர் கிம் ஜங் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். முதல் சந்திப்பின்போதே, கிம் ஜங் பற்றிய சில விஷயங்கள், டிரம்பிடம் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாக அவரே தெரிவித்தார். தான் நினைத்ததை விட, பல விஷயங்களில் கிம் ஜங், கில்லாடியாக இருந்ததாக, டிரம்ப் ஆச்சரியத்துடன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி, தன்னிடம் கிம் ஜங் மனம் திறந்து பேசியதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
எனக்கு எதிராக செயல்பட்ட மாமாவுக்கு, மரண தண்டனை கொடுத்து சுட்டுக் கொன்றது எப்படி என்பதை, மிகவும் விளக்கமாக டிரம்பிடம் ஜங் தெரிவித்துள்ளார்.வடகொரியா போன்ற நாடுகளின் சவால்களை முறியடிக்கும் வகையில், அணு ஆயுத அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், இதற்கு முன் அமெரிக்காவிடம் இல்லாத ஒரு ஆயுதமாக இது இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர்,இதற்குமுன்கேள்விப்பட்டிராத ஒரு ஆயுதமாக இது இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இவ்வாறு, அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
13-9-202

No comments:
Post a Comment