#அரசியலில்_பெளதிக_தத்துவங்கள்:
---------------------------------பொதுவாழ்வு அரசியலில் என்றாலும் பெளதிகம் என சொல்லப்படும் கோட்பாடுகளை பின்பற்றி தான் அதன் நடவடிக்கைகளில் உள்ளன.
மைய விலக்கு விசை , மைய நோக்கு விசை, நியுட்டன் தத்துவம் போன்ற பல கோட்பாடுகளே செயல்வடிவம் பெறுகின்றன.
#Centrifugal_force(மைய நோக்கு விசை): வட்டப்பாதையில் செல்லும் துகள் மீது வட்ட மையத்தை நோக்கி செயல்படும் விசை.
#Centripols( மையப்புரி)
#Centripetal_force(மைய விலக்கு விசை): வட்டப்பாதையில் செல்லும் துகளிலிருந்து வட்ட மையத்தை விட்டு விலக்கும் விசை..
#நியுட்டன் முதல் விதி:
இவ்விதியின்படி "ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாத வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது.
நியுட்டன் 2வது விதி : ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்விவிகித சமனாக (proportional) இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்
நியுட்டன் 3 வது விதி : ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.
——
மக்கள் குருட்டுத்தனமாக தகுதியற்றவர்களை ஆதரிப்பதாலே சிலர் தலைவர் ஆகிவிடுகிறார்கள். அந்த ஞான சூனியங்களாலும், தறுதலைகளாலும், எப்படி நேர்மையான ஆட்சியை அளித்து நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்? களப்பணியில்லாத, தியாகமற்ற நேர்மையற்ற இப்படிப்பட்டவர்களையும் கொண்டாடுகிறோம்,
புகழ்கிறோம்.
நாடு சீரழிகிறது........
#centripetalforce
#centrifugalforce
#newtonslaw
#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
4-05-2020
No comments:
Post a Comment