தர்மம் செய்... விரும்பிச் செய்
என்கிறார் ராஜாஜி-
டிசம்பர் 10, அவரின் பிறந்த நாள்
• நீ விரும்பி செய்யும் சிறு தர்மம்கூட, பல மடங்கு பெருகி பயன்தரும்.
• விரும்பிய வடிவில் கடவுளை வழிபாடு செய்யலாம். அதிலும் தாயாக கருதுவது சிறப்பு.
• உடலின் சக்தி குறைந்தாலும், ஆசைக்கு மட்டும் இறப்பே இல்லை.
• துறவு என்பது வெளிவேஷங்களில் இருப்பதல்ல. மாறாக ஆசைகளை துறப்பதே துறவு.
• சிறிய செயல் செய்பவரைப் பார்த்து நீ சிரித்தால், உன்னைப் பார்த்து கடவுள் சிரிப்பார்.
• நீ நடந்து கொண்ட விதத்தை உன் மனதிடம் கேள். அது உனக்கு சொல்லும்.
• அழுக்கு கீழ்படிந்தால் நீர் தெளிவடையும். அதுபோல் ஆசைகள் ஒழிந்தால் அறிவு தெளிவடையும்.
• முந்தி செய்ய வேண்டியதை செய்தால், பிந்தி வருவது தானாக வரும்.
• மலையில் இருந்து செதுக்கி எடுத்த துண்டுகளுக்கும் மலையின் குணம் இருக்கும்.
• ஆசை அறுந்த மனநிலையே ஞானம் நிறைந்த தவநிலை.
• நம்முடைய மனம் கடவுளின் கோயில். அதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
• முகத்தின் அழகை கோபம் கெடுத்துவிடும். சாந்தமே முகத்திற்கு அழகு தரும்
• உன்னுடைய உயர்வும், தாழ்வும் உன் கையில்தான் உள்ளது. எனவே பிறரைக் குறை கூறாதே.
• எதை சிறந்தது என அறிந்து கொண்டாயோ அதை உறுதியாக கடைப்பிடி.
No comments:
Post a Comment