————————————————
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் ஏறத்தாழ 50 வரை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து பெற்ற உரிமை சுதந்திரம் கட்டணமில்லா (இலவச) மின்சாரம் 1989இல் தலைவர் கலைஞர் ஆட்சியில்
கிடைத்தது.
அநேகமாக ஒழிப்பதற்கு நாள் குறித்தாகிவிட்டதோஏழை விவசாயிகளுக்கு இது ஒன்று தான் சிறிய ஆதாயமாக இருந்தது.ஏற்கனவே உர மானியம் ஒழிக்கப்பட்டது. விளைவிப்
பதை விட இறக்குமதி செய்வதே லாபம் என நினைத்து விட்டது அரசு.
தற்போது,மத்திய அரசு விரைவில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைவு மாநில உரிமைகளுக்கு எதிரானது, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.
2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. 21 நாட்களுக்குள் இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. மின்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவே இந்தத் திருத்தங்களைக் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தச் சட்டத்தில் சொல்லப்படும் பல திருத்தங்கள் சர்ச்சைக்குரியவை என்கிறார்கள் இந்தத் துறையைக் கவனிக்கும் மின்துறை ஆர்வலர்கள்.
புதிய திருத்தச் சட்டத்தில் முன்வைக்கப்படும் சில திருத்தங்கள்
முதலாவதாக, மின் கட்டணம் என்பது அதன் உற்பத்திச் செலவுக்கு இணையானதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் விநியோக நிறுவனங்களைச் சிறப்பாக நடத்த முடியும் என்கிறது இந்தச் சட்டம்.
இலவச மின்சாரத்திற்கு தடை போடுகிறதா புதிய மின்சார சட்டம்?
மேலும், மாநிலங்களில் உள்ள மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள் அரசு அளிக்கும் மானியங்களைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். அந்த மானியங்களை அரசு நேரடியாக நுகர்வோருக்குத் தந்துவிடலாம்.
அடுத்ததாக, மின்சார ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் ஆணையம் ஒன்றை அமைக்க உத்தேசிக்கிறது இந்தப் புதிய திருத்தச் சட்டம். அதன்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய அமலாக்க ஆணையம் ஒன்று அமைக்கப்படும். இதற்கு ஒரு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரம் இருக்கும். மின்சாரத்தை வாங்குவது, விற்பது, கடத்துவது (transmission) தொடர்பாக உற்பத்தி நிறுவனம், விநியோக நிறுவனம், டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களுக்கு இடையில் போடப்படும் ஒப்பந்தங்களை இந்த ஆணையம் செயல்படுத்தும்.
இதற்கு அடுத்தபடியாக, மேல் முறையீட்டுத் தீர்ப்பாணையத்தில் தலைவர் தவிர, மேலும் ஏழு உறுப்பினர்களைச் சேர்க்க இந்தத் திருத்தச் சட்டம் வழிவகுக்கிறது. இதன் மூலம் பல அமர்வுகளை நடத்தி, வழக்குகளைச் சீக்கிரம் தீர்க்க முடியும். தான் அளிக்கும் தீர்ப்புகளைச் செயல்படுத்துமளவுக்கு அதிகாரம் வழங்கவும் பரிசீலிக்கப்படுகிறது.
இலவச மின்சாரத்திற்கு தடை போடுகிறதா புதிய மின்சார சட்டம்?
மேலும், மத்திய, மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களுக்கு தலைவரையும் உறுப்பினரையும் தேர்வுசெய்ய தனித்தனியான தேர்வுக் குழுக்களை அமைக்காமல் ஒரே தேர்வுக்குழுவை உருவாக்க இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது. அதேபோல, மத்திய, மாநில ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்களுக்கு ஒரே மாதிரியான தகுதிகளையும் பரிந்துரைக்கவும் இந்தச் சட்டம் வழிவகுக்கும்.
மின்சாரச் சட்டத்தின் விதிகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் ஆணையங்களின் ஆணைகளைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவும் அபராதங்களை உயர்த்துவது இந்தச் சட்டம் முன்மொழிகிறது.
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க கொள்கை ஆவணம் ஒன்றை உருவாக்க இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
எந்த அளவுக்கு நீர் மின் திட்டங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டுமென்பதை இந்த ஆணையம் வலியுறுத்தும். புதுப்பிக்கத்தக்க அல்லது நீர் மின்திட்டங்களிலிருந்து சொன்ன அளவுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தாவிட்டால், அபராதம் விதிக்க முடியும்.
சரியும் நிலக்கரி மின்சார உற்பத்தி - இதன் பின் உள்ள அரசியல் என்ன?
"கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்லை" - உலக அணுசக்தி தொழில் அமைப்பு
மின்துறை சட்டத் திருத்தங்களின் பின்னணி
ஏற்கனவே 2014லும் 2018லும் இதேபோன்ற திருத்தங்களை சட்டம் மூலமாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மாநில அரசுகளும் மின் வாரியங்களின் உறுப்பினர்களும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்ததால், அந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
இலவச மின்சாரத்திற்கு தடை போடுகிறதா புதிய மின்சார சட்டம்?
2003ஆம் ஆண்டில் புதிய மின்சாரச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, இப்போது போலவே மின்சாரத் துறையின் வளர்ச்சி, போட்டியை ஊக்குவித்தல், மின்சாரச் சந்தையை உருவாக்குதல், மின்துறையில் திறனையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்கள்தான் முன்னிறுத்தப்பட்டன.
அந்தச் சட்டப்படிதான் மாநில மின்வாரியங்கள் உற்பத்தி, விநியோகம் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. மேலும் ஒழுங்கு முறை ஆணையங்கள், மேல் முறையீட்டு தீர்ப்பாயங்கள் ஆகியவையும் உருவாக்கப்பட்டன. அனல் மின் நிலையங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப, பொருளாதார அனுமதி தேவையில்லை என்று ஆக்கப்பட்டது.
அந்த 2003ஆம் ஆண்டின் சட்டப்படிதான், மாநில மின் வாரியங்கள் மின்சார உற்பத்தியிலிருந்து விலகியிருக்க வேண்டுமெனக் கூறப்பட்டு 2007ஆம் ஆண்டிலிருந்து பெரும் மின் தட்டுப்பாட்டை இந்தியா எதிர்கொள்ள நேர்ந்தது. இதன் விளைவுகள் 2012-13வரை நீடித்தது.
அந்த காலகட்டத்தில் பல தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தியில் ஈடுபட முன்வந்தன. கிட்டத்தட்ட 40,000 மெகாவாட்டிற்கான மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அப்படி உருவாக்கப்பட்ட மின் நிலையங்களை செயல்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. அந்தச் சிக்கல்களைச் சரிசெய்யவே இந்தப் புதிய திருத்தச் சட்டம் முன்மொழியப்படுவதாக பலர் கருதுகிறார்கள்.
2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் வந்த பிறகு, தனியார் நிறுவனங்கள் மின் நிலையங்களைத் துவங்கின. அப்போது பெரும் மின் தடை இருந்ததால் பல மாநில அரசுகள் இந்த மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்க ஒப்பந்தங்களைச் செய்துகொண்டன. அந்தத் தருணத்தில் மின் உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் விற்கும் மின்சாரத்திற்கு அதீதமான விலை நிர்ணயித்தன.
இலவச மின்சாரத்திற்கு தடை போடுகிறதா புதிய மின்சார சட்டம்?
இது தவிர, பல ஒப்பந்தங்களிலிருந்த ஒரு முக்கியமான அம்சம், மின்சாரத்தை வாங்காவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை உற்பத்தி நிறுவனத்திற்கு விநியோக நிறுவனங்கள் கொடுக்கவேண்டும் என்பது. இதனால், மாநில அரசுகளுக்குச் சொந்தமான பல மின்சார விநியோக நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்தைக்கூட வாங்காமல் பல ஆயிரம் கோடி ரூபாய்களை இம்மாதிரி நிலைக் கட்டணமாகச் செலுத்தின. இதனால், இந்த ஒப்பந்தங்களை சில மாநில அரசுகள் மீற ஆரம்பித்தன. வேறு சில மாநில அரசுகள், இவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்கின்றன. இந்த நிலையில்தான் புதிதாக ஒப்பந்த செயலாக்க ஆணையத்தை அமைக்க இந்த திருத்தச் சட்டம் வழிமொழிகிறது.
குறிப்பாக, பல மாநில அரசுகள் சூரியமின் சக்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளன. சந்தை மாறுபாடுகளையோ, தொழில்நுட்ப மேம்பாடுகளையோ கணக்கில் கொள்ளாமல் 25 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. ஒரு யூனிட் மின்சாரம் ஏழு ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் தற்போது மிகக் குறைந்த விலையில் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆகவே, மின்வாரியங்கள் விலையைக் குறைக்க முயல்கின்றன. ஆனால், சூரிய மின்சக்தி நிறுவனங்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
"இந்தச் சட்டமே ஒரு சில தனியார் நிறுவனங்களுக்காக, குறிப்பாக சூரியசக்தி மின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் சில நிறுவனங்களுக்காகக் கொண்டுவரப்படுகிறது. எல்லா மாநில மின்வாரியங்களுமே இதனை எதிர்க்கும். அதை மீறி இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மின் வாரியங்கள் கடுமையான இழப்பைச் சந்திக்கும்" என்கிறார் ஹரியானா மாநில மின்வாரியத்தின் முன்னாள் தலைவரான தேவசகாயம்.
2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்திற்குப் பிறகு, இந்தியா முழுவதும் 34 அனல் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான கருவிகள் அனைத்தும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இவற்றில் பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் செயல்பட முடியவில்லை.
இதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவதாக, ஒவ்வொரு அனல் மின்நிலையமும் துவங்கும்போதே எங்கிருந்து நிலக்கரி கிடைக்கும் என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஆனால், அவசரகதியில் துவங்கப்பட்ட இந்த நிறுவனங்கள் நிலக்கரி கிடைப்பதை உறுதிசெய்யாமலேயே துவங்கப்பட்டன.
மேலும், கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத் தட்டுப்பாடு 2013க்குப் பிறகு சரியாக ஆரம்பித்ததால், இவற்றிடம் மின்சாரத்தை வாங்க ஆளில்லை. மேலும் ஒப்பந்தம் தொடர்பாகவும் விலை தொடர்பாகவும் பல தகராறுகள் மின்வாரியங்களுக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டது.
சில இடங்களில் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்குத் தாமதமானதால், செலவு அதிகரித்தது. கடன் அளித்த வங்கிகளும் நெருக்கடி கொடுத்தன. இந்தக் கடன்கள் வங்கிகளுக்கான NPAவாக மாறத் துவங்கியன. வங்கிகளுக்குப் பணம் வரவேண்டுமானால், தனியார் மின் நிலையங்கள் லாபத்துடன் இயங்க வேண்டும். அதற்கு மாநில மின்வாரியங்கள் அவற்றிடமிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும். அதனை வலியுறுத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்கிறார்கள் மின்சாரத் துறை சீர்திருத்தங்களைக் கவனித்து வருபவர்கள்.
புதிய மின்சார சட்டம்: இலவச மின்சாரத்திற்கு தடை போடுகிறதா? - விரிவான தகவல்கள்
"இந்த புதிய திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் காலகட்டமே சரியானதல்ல. இந்தத் திருத்தம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட ஏப்ரல் 17ஆம் தேதி இந்தியா முழுக்க ஊரடங்கு இருந்தது. மே 8ஆம் தேதிக்குள் இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். அப்போதும் ஊரடங்கு இருக்கும். நாடு முழுக்க கொரோனா குறித்த விவாதமும் பதற்றமுமே இருக்கும். இதனை யாரும் கவனிக்க மாட்டார்கள்.
இந்த புதிய சட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் புதிதாக மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணையம் உருவாக்கப் பரிந்துரைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டும் தேவசகாயம், இந்தப் புதிய திருத்தச் சட்டம் தனியார் நிறுவனங்களை மீட்பதற்காகவே கொண்டுவரப்படுகிறது என்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி மின்சாரம் பொதுப் பட்டியலில் வருகிறது. 2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு, ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது இந்த ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களையும் நேரடியாக மத்திய அரசே தேர்வுசெய்யும் வகையில் சட்டம் திருத்தப்படுவது கவலைக்குரியது; மாநிலங்களின் நலன்களுக்கு எதிரானது என்கிறார்கள் மின்துறை ஆர்வலர்கள்.
இந்த புதிய சட்டத்திருத்தத்தில் கவலைக்குரிய மற்றொரு விஷயம், மானியங்களைப் பணமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது. இது பெரும் குழப்பத்தை உண்டாக்கும். புதிய மின்சார சட்டம்: இலவச மின்சாரத்திற்கு தடை போடுகிறதா? - விரிவான தகவல்கள்
"அதாவது தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தைத் தயாரிக்க 4.92 ரூபாய் செலவாகிறது. இதனை மின்வாரியம் வீடுகளுக்குக் கொடுக்கும்போது, மாதத்திற்கு முதல் 50 யூனிட் இலவசம் என்பது உட்பட பல்வேறு விலைகளில் விற்கிறது. 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு 6.60 காசு வரை விற்கப்படுகிறது. அதாவது மிகக் குறைவாகப் பயன்படுத்துவோருக்கு, அடக்க விலையான 4.92 ரூபாயைவிட குறைவான விலைக்கு மின்சாரம் கிடைக்கும். இதனால், மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பீட்டை மாநில அரசு கொடுத்துவிடும். ஆனால், இப்போது அதனை நேரடியாக நுகர்வோருக்கே கொடுக்கச் சொல்கிறது இந்தச் சட்டம். அது சாத்தியமே இல்லை" என்கிறார் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவரான எஸ். காந்தி.
ஏனென்றால், ஒரு நுகர்வோர் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. ஒரு மாதம் 50 யூனிட்டிற்குக் குறைவாகப் பயன்படுத்துவார்கள். மற்றொரு மாதம், 800 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவார்கள். ஆகவே, ஒவ்வொரு மாதமும் இந்தத் தொகையைக் கணக்கிட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் எப்படிச் செலுத்த முடியும். சில இடங்களில் நான்கு வீடுகளை ஒரே நபர் வைத்திருப்பார். பணத்தை நேரடியாகக் கொடுத்தால் நான்கு வீடுகளுக்கான மின்சார மானியமும் ஒரே நபருக்கே போய்ச் சேரும். பயன்படுத்துவோருக்கு வராது.
தவிர, தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அவர்களை மின் கட்டணம் செலுத்தச் சொல்லிவிட்டு, பிறகு அவர்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் அளிக்கச் சொன்னால், அது நடக்காது. ஏற்கனவே 2003ஆம் ஆண்டில் இதனை முயன்று பார்த்தார்கள். அப்போது தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் பம்ப்செட்கள் இருந்தன. இவர்களுக்கு மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. அதில் பாதி மணி ஆர்டர்கள் திரும்பிவந்துவிட்டன. மீதமுள்ளவற்றிலும் பல யார் யாருக்கோ போய்ச் சேர்ந்தன. காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய பம்ப் செட்கள் இருக்கின்றன. இணைப்பு யார் பெயரிலோ இருக்கும். இப்போது அவருடைய சந்ததிகள் பயன்படுத்தி வருவார்கள். ஒரே பம்ப்செட்டை இரண்டு மூன்று பேர் பயன்படுத்துவார்கள். மானியத்தை நேரடியாக அளித்தால், யாருக்குக் கொடுப்பார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார் காந்தி.
தமிழக மின்வாரியத்தைப் பொறுத்தவரை இந்தச் சட்டத் திருத்தம் குறித்து இதுவரை வெளிப்படையாக ஏதும் தெரிவிக்கவில்லை. மானியத்தை நேரடியாகக் கொடுக்க முடியாது என்று மட்டும் பதில் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
சுருக்கமாக,
இந்த மின்மசோதா 2020...
பாஜக அரசை பொருத்தவரை இனி இந்தியாவில் மாநிலங்கள் இல்லை. ஒரே நாடு அதில் 900 மாவட்டங்கள் உள்ளன.
மாநில அரசின் உரிமைகள் கல்வி, வரிவசூல், நீர் வளம் பறிபோன நிலையில் இப்போது மின்சாரத்தின் மீதும் மத்திய அரசு கை வைத்து விட்டது
Electricity Contract Enforcement Authority (ECEA) உருவாக்கப்படும். இந்த அமைப்பு மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் & மின்கட்டணத்தை மத்திய அரசு வசூல் செய்யும்
இந்தியா முழுமைக்கும் ஒரே மின் கட்டணம். குஜராத்தில் 1 யூனிட் 7Rs. Slab கிடையாது. தமிழகமும் இதே கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்
தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். இந்த இலவசங்கள் இனி கிடையாது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடையாது.
முதல் கட்டமாக, NTPC அனைத்து மாநில மின் பகிர்மான கழகங்களை கைப்பற்றும். NTPC, மின் கட்டணம் வசூலிக்க தனியார்களுக்கு லைசன்ஸ் கொடுக்கும். இவ்வாறு மின்துறை தனியார் மயமாகும்.
மாநில அரசு புதிய மின் உற்பத்தி நிலையங்களை கட்ட முடியாது. மாநில அரசிடம் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் கைபற்றப்பட்டு NTPC யுடன் இணைக்கப்படும். தனியார்கள் மட்டுமே புதிய மின் திட்டங்களுக்கு முதலீடு செய்யமுடியும்!
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு பதில் மத்திய அரசு பணத்தை வங்கி கணக்கில் வழங்கும்.
கேஸ் சிலிண்டர் மாதிரி.
(தொடரும்.......)
No comments:
Post a Comment