Tuesday, December 8, 2020

 #மே15இல் #முள்ளிவாய்க்கால்

#உக்கிரமான #கொடுமைகளின்_கோரங்கள் #தொடங்கியது.....
———————————————-




கடந்த 2009 இதே மே 15 இல் முள்ளிவாய்க்கால் உக்கிரமான கொடுமைகளின் கோரங்கள் தொடங்கியது.....

ஈழமக்களின் தியாகம் ஒரு நாளும் வீண்போகாது என்பது நம்பிக்கை.ஈழத்தில் தமிழர்களின் போரட்டம் 1838 இல் பிரிட்டிஷ் ஆட்சியில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் காலம் தொடங்கி இலங்கை விடுதலை பின் சிங்கள் ஆட்சியில் வட்டுக்கோட்டை தீர்மானம், முள்ளிவாய்க்கால் என தொடர்கிறது.

1976 இல் திருப்புமுனையான வட்டுக்கோட்டைத்தீர்மானம்

ஈழத்தமிழினம் இந்த மண்ணிலே தனக்கேயுரிய வரலாற்று மாண்புகளுடனும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழவேண்டுமெனின் நாம் எமக்கேயான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டுமென பிரகடணம் செய்த தமிழ்த்தேசிய நாள்.

வட்டுக்கோட்டை பிரகடணம் நிறைவேற்றப்பட்டு அந்தப் பிரகடணத்தை அடியொற்றிய தாயக விடுதலைக்கான பாரிய அர்ப்பணிப்புக்களுடன், கேள்விக்குரியதான 44 ஆண்டுகளை ஈழத்தமிழினம் கடந்து வந்திருக்கின்றது.

தமிழர்கள் இலங்கைத்தீவில் தன் பண்பாட்டு அம்சங்களுடன் கூடிய கௌரவமான வாழ்வொன்றை சகோதர சிங்கள இனத்துடன் சேர்ந்து வாழலாம் என்று தீர்க்கமாக நம்பியது.

ஆங்கிலேயரிடமிருந்து இலங்கையின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இயக்கம் ,ஒரு தேசியம் தனக்கான இருப்பை பேணுவதற்கான மறுதலிக்க முடியா உரிமைக்கு உரித்துடையவர்கள்" என்று இலங்கையின் விடுதலைக்கான சுயநிர்ணய கோசத்தை 1932 ம் ஆண்டு வெளிக்கொண்டது முதல் தொடர்ந்து 44 வருடங்களாக நாம் ஒருமித்த நாடொன்றுக்குள்ளான அடிப்படை ஜனநாயக உரிமைகளையே வேண்டிநின்றோம்.

ஜனநாயக ஏதுநிலைகள் தகர்ந்து போனதொருசூழலில் ஓர் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனஅழிப்புப் பொறிமுறையை எதிர்கொள்ள ஏந்தப்பட்ட ஆயுதங்கள் ஓர் தேசிய இன விடுதலைப் போராட்டமாக வியாபித்தது.

Pic-Opposition Tamil parties boycotting the Lanka Parliament in 1956. The Sinhala Only Act, formally the Official Language Act No. 33 of 1956.

#முள்ளிவாய்க்கால்
#ஈழம்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
15-05-2020.

No comments:

Post a Comment

இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...