நான் விரும்பி படிக்கின்ற கவியோகி சுத்தானந்த பாரதி சிவகங்கையில், 1897 மே, 11ம் தேதி பிறந்தவர், வேங்கட சுப்பிரமணியன். 8 வயதிலேயே, கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டு இமயமலைக்கு சென்று, அங்கு வாழ்ந்த சித்தர் ஒருவரால், ‘சுத்தானந்தம்’ என பெயரிடப்பட்டார்.சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். மொழிபெயர்ப்பு, கவிதை, உரைநடை, பயணம், இலக்கணம், கீர்த்தனை, நாடகம், சிறுகதை, அறிவியல் உட்பட, பல்வேறு பிரிவுகளில் எழுதி குவித்தார்.
திருக்குறளை, அதே ஈரடிகளில், நடை, சந்தத்தில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலையின், முதல், ‘ராஜராஜன்’ விருது, இவரது, ‘பாரத சக்தி’ நூலுக்கு கிடைத்தது. ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான், அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று, ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். ‘சுத்தானந்த யோக சமாஜம்’ எனும் அமைப்பையும், சுத்தானந்த தேசிய வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியையும் நிறுவினார். 1990 மார்ச், 7ம் தேதி இயற்கை எய்தினார். கவியோகி சுத்தானந்த பாரதி பிறந்த தினம் இன்று!
http://ksradhakrishnan.in/?p=5129
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
11.05.2020.
#ksrpost

No comments:
Post a Comment