*#புதிய_பொருளாதாரக் #கொள்கையினால் (92ல் வந்த)
#நாம்_எங்கே_செல்கின்றோம்_என்று #தெரியவில்லை*————————————————
நரசிம்மராவ் பிரதமராக இருந்த் 1992 காலகட்டஙகளில் புதிய பொருளாதார கொள்கைகளை அன்றைக்கு நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் வகுத்து நடைமுறைக்கு கொண்டு வந்தார். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், டங்கல் திட்டம், உருகுவே தீர்மானங்கள் என்ற நிலையில் இந்தியா அன்றைக்கு புதிய பொருளாதார மாற்றங்களோடு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்தது. India for Sale என்று கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்தியா முழுவதும் போராடின. இந்திரஜித் குப்தா, சோம்நாத் சாட்டர்ஜி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திலே இது குறித்து அப்போது கடுமையாக எதிர்த்து சாடினர்.
இந்தியப் பொருளாதாரச் சிக்கல், ராஜீவ் பிரதமராக இருக்கும் பொழுதே 1989 காலகட்டங்களிலேயே இந்தியாவின் பொருளாதார சிக்கல் ஆரம்பித்து விட்டது. சில காலம் சந்திரசேகர் பிரதமராக இருந்த போது, பெரும் நெருக்கடியில் நம்முடைய இருப்புத் தங்கங்களை எல்லாம் வெளிநாட்டிற்கு விமானங்களில் அனுப்பி அடமானம் வைத்து டாலர்களைப் பெற்றார். அப்போது சுப்ரமணியசுவாமி நிதியமைச்சராக இருந்தார்.
நரசிம்மராவ் ஆட்சிக்காலம் 28 ஆண்டுகளுக்கு முன் புதிய பொருளாதாரக் கொள்கையினால் படிப்படியாக தீப்பெட்டி உற்பத்தி, பீடித் தொழில், பூட்டு செய்தல் போன்ற பல சிறு குறு தொழிலெல்லாம் பாதிக்க
பட்டது.தொலைந்தும்விட்டது.
அன்றாடம் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவிற்குள் வந்து பெரும் இயந்திரங்களை கொண்டு உற்பத்தியை துவங்கியதால் வேலைவாய்ப்புகள் குறைந்தது. இந்த தனியார்மயமாக்கல் லாப வெறியை மட்டுமே குறியாக கொண்டு செயல்படும், சிறுநிறுவனங்கள், சிறு கடைகள மூட வேண்டிய நிலைக்குதள்ளப்படும்,
மனிதர்களுக்குள்ளான உறவுகளை அது சிதைக்கும் என நினைத்தார்கள் .
இந்த இரக்கமற்ற பொருளுற்பத்திமுறை நிலவுகிற சமூகத்தில் மனித உறவுகளும் இரக்கமற்றதாகவே இருக்கும். இன்றைக்கு கூட விகடன் நிறுவனம் 176 பேரை அவரை வேலையை விட்டு அனுப்புகிறது. இது தொடக்கம் தான், இனி மற்ற நிறுவனங்களிலும் இது நடக்கும். இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற நிறுவனங்கள் பாழடிக்கப்பட்டன. இன்றைக்கு பாஜக,நவரத்தினங்கள் என்று சொல்கின்ற சில பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க முடிவெடுத்துவிட்டது. ஜனநாயகமா? சோஷலிஸமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் கார்ப்பரேட் ஆட்சியாக படிப்படியாக இந்தியா மாறத் துவங்கியுள்ளது.
லைசன்ஸ் கோட்டா ராஜ்ஜியத்தை மூதறிஞர் இராஜாஜி போன்றவர்களெல்லாம் பேசியதற்கு பின் அந்த அமைப்பு ரீதியான நிலையை 1960 களில் ஒழித்தோம். கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியா விடுதலைப் பெற்றது. ஆனால் இன்றைக்கு இந்தியாவினுடைய ஆட்சியை மறைமுகமாக கார்ப்பரேட் நிறுவனங்களும் உலக வங்கியும் பரிபாலனம் செய்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இதைப் பற்றியான விஷய ஞானங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது பற்றிய புரிதலோ அறிதலோ கிடையாது. அப்படி இருந்தால் தானே அதைப் பற்றி பேச முடியும். ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயித்தவர்கள் எதையும் படிப்பதில்லை. இப்படியான சீரழிவில் இருக்கின்றொம். எங்கே போகின்றோம் என்று அறிந்துக் கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் தவறான பாதையிலும் மோசமான நிலையை நோக்கி பயணிக்கின்றோம்.
இதைக் குறித்து 1992 இறுதியில் நான் தினமணியில் எழுதிய கட்டுரையில் சிறு குறு தொழில்கள் பாதிக்கும், வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று எழுதியிருந்தேன், அது அத்தனையும் 28 ஆண்டுகள் கழித்து நடக்கிறது. காலச்சக்கரம் ஓடிவிட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் பொதுத் துறை நிறுவனத்தை வித்தது!
1998-99ல் ₹17,000 கோடி
2004க்குப் பிறகு ₹3961 கோடி
2007-08ல் ₹9302கோடி
2009-10ல் ₹41948 கோடி
2011ல் ₹36029 கோடி
மொத்தம் ₹3,47,000 கோடி
இப்பொழுது பாஜக ஆட்சியும் அதை செய்கிறது
AIR INDIA ஆண்டாண்டுக்கு நஷ்டம் என
அரசுவிற்று விட்டது
LIC ₹31,00,000 கோடி சொத்து மதிப்புள்ள நிறுவனம் ஈட்டும் இலாபம், அது மக்களை காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கும் வேகமும்குறைக்கப்பட்டது.
இப்படி பல நிறுவனங்களின் இன்றைய கவலையான நிலை....
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23.05.2020
#ksprosts
No comments:
Post a Comment