Thursday, December 10, 2020

*#விளாத்திகுளம்_சாத்தூர்

#வைப்பாறு

——————————————







சாத்தூர்,விளாத்திகுளம் கரிசல் பூமி மக்களின் கரிசல் மண் வைப்பாறு ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதியாக இருந்த ஆறு சுமார் 300 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் எக்கர் தோட்டப்பாசனமாகவும் விளங்கியது. இறுக்கன்குடிஅணையும்அமைந்தது.
மாட்டுச் சந்தைகள் அக்காலத்தில் எட்டையபுரம், கன்னிசேரி, கழுகுமலை , மேலப்பாளையம், என பல ஊர்களில் செயல்பட்டாலும் முத்துலாபுரம் சந்தையில் வாங்கக் கூடிய மாடுகள் மட்டுமே உழவுக்கும், பாரம் சுமப்பதற்கும் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் அக்காலகட்டத்தில் கூறுவார்கள். ஏனென்றால் விலைக்கு வாங்குவதற்கு முன் மாடுகளை சந்தையின் வடபுறத்தில் உள்ள வைப் பாற்றில் வண்டி பூட்டி ஓட்டுவார்கள். அதில் மாடுகள் சண்டி செய்யாமல் இழுத்துவிட்டால் அதையே தேர்வு செய்வார்கள். இடையில் சுமார் 25 ஆண்டுகள் அதன் பொலிவை இழந்து, அழகு இழந்து, பெருமை இழந்து பார்க்க பார்க்க அழகாக இருந்த மணல் மேடுகள் இவையனைத்தும் களவாடப்பட்டு இன்று கட்டான் தரையாக, மயானம் போல் காட்சியளிக்கும் வைப்பாறு ஆற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்று கனத்து போனது இதயம். கேரள அச்சன்கோவில்,பம்பை-வைப்பாற்றுடன் இணைப்பு திட்டம். தேசிய நதிகள் இணைப்பு குறித்து 30 ஆண்டுகள் போராடி உச்ச நீதி மன்றத்தில் இது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவுவிடப்பட்டது. மற்றும் தாமிரபரணி ஆற்றை வைப்பாற்றுடன் இணைக்கும் திட்டத்தை அறிவிக்க இருக்கிறார்கள். முத்துலாபுரம் வைப்பாற்றில்இணைக்கும்
திட்டம்.
வேம்பாரில் உயரம் குறைவான புதிய தடுப்பணையில், மழை நீரை சேமிக்க முடியாத நிலையில், கடலுக்கு வீணாகச் செல்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேம்பார் பகுதியில் வேம்பார் ஆற்றுப்படுகையில் மழைக் காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆற்றில் தேங்காமல் வீணாக கடலில் கலப்பதால் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வந்தது. அப்பகுதி மக்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக தடுப்புகளும் வெள்ளத்தால் உடைப்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது.
வேம்பார் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை வேம்பாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது. இதற்கான முயற்சிகளை பலரும் மேற்கொண்டாலும் ஓய்வு பெற்ற பொறியாளர் ஐயா மாதவராஜ் கணேசனின் முயற்ச்சி முக்கியமானது.
முதலமைச்சர் தடுப்பணை கட்டும் திட்டத்தை தூத்துக்குடியில் வைத்து அறிவித்த போதும் அதிகாரிகள் இதனை செயல்படுத்த பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். அவற்றையெல்லாம் கடந்து இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
கடந்த மழைக்காலத்தில் தான் இதற்கான வேலைகளை ஆரம்பித்தனர். வெள்ளம் வந்து அதனை அடித்துச் சென்றுவிட்டது. பின்னர் மழைக்காலம் முடிந்த பின் மீண்டும் ஆரம்பித்து கட்டி முடித்து விட்டனர். சுமார் 6 அடி உயரம் தண்ணீர் தேங்கும். அதற்கு அதிகமாக வெள்ளம் வரும்போது நிரம்பி வழிந்து அந்நீர் கடலில் கலக்கும். 6 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கும் போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாய் உயர்வது உறுதி.
வேம்பாரின் கிழக்கே இங்கும், வேம்பாரின் மேற்கே அய்யனார் கோவில் அருகேயும் என இரு தடுப்பணைகள் ₹18 கோடி ( ₹179820260 இலட்சங்கள்) செலவில் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்வது உறுதி.
கடந்தாண்டு வேம்பாறு படுகையில் முகத்துவாரத்திற்கு முன்பாகவே தடுப்பணை கட்டுவதற்கு ரூ.18 கோடியில் திட்டம் தயாரித்து டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. பணி விரைவாக நடைபெறாததால், கடந்தாண்டு பருவமழையில் பணிகள் பாதிப்புக்குள்ளாகி நிறுத்தப்பட்டது.
ஒருவழியாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடுப்பணை பணிகள் முடிவடைந்தன. ஆனால், வேம்பாரில் குறைவான உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பணையால், மழையால் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதிகள் கூறுகையில், வேம்பார் ஆற்றுப்படுகையில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு நபார்டு வங்கி உதவித்திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கப்பட்டபோதும், ஆற்றுப்படுகையை தூர்வாராததோடு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தடுப்பணை என்ற பெயரில், குறைவான உயரத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் மழைநீர் நிரம்பி தண்ணீர் வழிவதோடு வீணாக கடலுக்கும் செல்கிறது.
அதனால், இந்த தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்தவும், ஆற்றுப்படுக்கையை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...