Wednesday, December 9, 2020

 #விவசாயிகளின்_துயரம்_4

———————————







உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்கள் தலைமையில் விவசாயிகளின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடைபெற்ற போராட்ட களங்களில் பல விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து பெற்ற உரிமை. தலைவர்கலைஞர் விவசாயிகளுக்கு அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கினார்."கட்டணமில்லா (இலவச) மின்சாரம் " ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய அரசின் புதிய மின்சார சட்டம் 2020 மூலம் தற்பொழுது ஆபத்தான சூழ்நிலை...........
தொடர்ந்து அடுத்த பேரிடியாக கூடுதலாக விவசாயிகள் பயன்படுத்தும் 1 எச்பி- HP க்கு ரூ.20.000 கட்ட வேண்டும் என மின்சார வாரியம் TNEB - ( வழங்குதல்) ஆனை, .........
தமிழக விவசாயிகளின் மீது "வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது " போல உள்ளது.
விவசாயிகளே விழிப்புடன் இல்லாவிட்டால் பெற்ற உரிமை பறிபோகும்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்கள் விவசாயத்திற்கு ,விவசாயிகளுக்கு "இலவச மின்சாரம் - வழங்க வேண்டும் , இல்லை எனில் -"கட்டை எடுத்தால் பட்டையை எடுப்போம்" - எணவும், இந்த விவசாய போராட்ட களத்தில் ஒரு வேளை........
ஒரு நாராயணசாமி நாயுடு மறைந்தால் ஒரு கோடி நாராயணசாமி நாயுடு உருவாகுவார்கள்" என உணர்சிமிகு உரையினை திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி,கோவை,கோவில்பட்டி உட்பட தமிழகம் முழுவதும் பல விவசாய மாநாடுகளில் உணர்சிமிகுந்து பேசினார்கள்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஜப்தி , கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு சலுகைகளை பெற்று தந்தார்
அதற்கும் - ஆபத்து; "இலவச மின்சாரம் - ( மத்திய அரசின் புதிய மின்சார சட்டம் 2020 மூலம் ) ரத்து செய்யும் சூழல் ஆபத்து?
1 எச்பிHP க்கு ரூ.20.000 கட்ட வேண்டும்என்ற மின்சார வாரியம் ஆனை மூலம் பேராபத்து?
இந்த தகவலை சக விவசாயிகளுக்கும் பரப்புங்கள் விவரம் அறியட்டும் விஷயம் புரியட்டும்
என்ன செய்ய போகிறோம்?
எம் விவசாயிகளே....!
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
15.05.2020.

No comments:

Post a Comment