Wednesday, December 9, 2020

 *#விவசாயிகள்_போராட்டமும்_இலவச #மின்சாரமும்_8*

————————————————







எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பல கோரிக்கைகள்யோடு விவசாயிகள் அன்று நாராயணசாமி நாயுடு தலைமியில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் போராடினார்கள். இதனுடைய தாக்கம் நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்திலும் மட்டுமல்லாமல் உத்திரபிரதேசம், மகாராஷ்டிரம் வரை பிரதிபலித்ததால் அந்த மாநில விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினார்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், சாகுபடிப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை, விலை உயர்வு இல்லாத விவசாய இடுபொருட்கள், கடன் ஜப்தி நடவடிக்கைகள் கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு நாராயணசாமி நாயுடு தலைமையில் தமிழக விவசாயிகள் போராடினார்கள்.40க்கு
மேற்பட்டோர் துப்பாக்கி சூட்டில்
மறைந்தனர்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கான உயர்மட்டக் குழு, 26.12.1977 விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது.
———————————————-
திரு. எம்.ஜி. பாலசுப்ரமணியன், ஐ. ஏ. எஸ்.,
திரு. கே. திரவியம், ஐ. ஏ. எஸ்.,
திரு. அ. வெங்கட்ராமன், ஐ. ஏ. எஸ்.,
திரு. அர்ச்சுனன் ஞானஒளிவு, ஐ. ஏ. எஸ்.,
திரு. சி. ஏ. சீனிவாசன், பி.இ.,
திரு. டி. ஏ. எஸ். பிரகாசம், ஐ. ஏ. எஸ்.,
டாக்டர் திரு. வி. இராசகோபால்
திரு. விஸ்வநாதன், பி.இ.,
டாக்டர் திரு. எம். ராமச்சந்திரன்
திரு. என். நாராயணன் ஐ. ஏ. எஸ்.,
திரு. எஸ். ஏ. சுப்பிரமணி ஐ. ஏ. எஸ்.,
————————————-
திரு. சி. நாராயன சாமி நாயுடு
திரு. ஆர். கிருஷ்ணசாமி கவுண்டர்ex MLA
திரு. பி. பாலசுப்ரமணியம்
திரு. பி. வேலுசாமி
திரு. சி. வையாபுரி
திரு. பி. என். பரமசிவ,
திரு. தென்கோவன்
திரு. முகுந்த கோவிந்தராஜன்
திரு. ஜி. வீரய்யன் (சிபிஎம்)
திரு. எம். ஆதிமூலம்(சிபிஐ)
திரு. முத்துமல்லா ரெட்டியார்
அந்தக் குழு தன்னுடைய அறிக்கையினை மே 1979 தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை 23. 02. 1980ல் சட்டமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் விளைவாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சிறு,குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்ற நாராயணசாமி நாயுடுவின் கோரிக்கை எம்.ஜி.ஆரால் நிறைவேற்றப்படவில்லை. பிறகு தலைவர் கலைஞர் 1989ல் ஆட்சிக்கு வந்தவுடன் நாராயணசாமி நாயுடு மறைவுக்குப் பின் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத்தை அறிவித்தார். கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் மற்றும் துக்ளக் போன்ற வார இதழ்கள் மட்டுமே வெளிவந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல்கியில் ப்ரியன் எடுத்த நாராயணசாமி நாயுடுவின் பேட்டி அப்பொழுது வெளிவந்தது மிக முக்கியமாக கருதப்பட்டது. விவசாயிகளின் நலன்கருதி பல விஷயங்களை அவர் பேசியுள்ளார்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.05.2020

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...