Wednesday, December 9, 2020

 #முள்ளிவாய்க்கால்_ரணங்கள்.....

————————————————-







சில நண்பர்கள் முள்ளிவாய்க்கால் துயரம் நடக்கும் போது திமுகவில் இருந்த நீங்கள் கலைஞர் அவர்களிடம் தடுக்க சொல்லி ஏன் முயற்சிக்கவில்லை என்று இன்றல்ல, நீண்ட நாளாக கேட்டு வருவதோடு, கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்த கேள்வி எழுந்த வண்னம் இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் 2009 மே மாதம் நடக்கும்பொழுது கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காலம். முள்ளிவாய்க்கால் சோகங்கள் நடந்து முடிந்த காலத்திற்கு பின் தான் திமுகவில் இணைந்தேன். இணைந்த சில நாட்களுக்குப் பின் கலைஞரிடம் முள்ளிவாய்க்கால் துயரத்தைக் குறித்தெல்லாம் எடுத்துச் சொன்னேன். அந்த ஓலக்குரலை எல்லாம் கேட்கும் குறுந்தகடுகளை அரை மணி நேரம் பார்த்த பின் என்னிடம் “இப்படியெல்லா நடந்திருக்கா, டெலியிலிருந்து மத்திய சர்க்கார்ல இருந்தவங்க என்கிட்ட சரியா சொல்லலியேப்பா!” என்றார். அதற்குப் பின் தான் டெசோ பணிகளை என்னைப் பொறுப்பெடுத்து நடத்திட தலைவர் கலைஞர் கூறினார். இந்த நிகழ்வுகள் எல்லாம் என்னுடைய நினைவு நூலில் விரிவாக பதிவுசெய்து வருகிறேன். முள்ளிவாய்க்கால் சம்பவத்தின்போது என்னால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் தான் அரசியல் பணியிலிருந்து விடுபட்ட காலம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். இந்த விளக்கத்தைச் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
18.05.2020.
Pic1) இன்று முள்ளிவாய்க்கால்.
2) பிராபாகரன் வீட்டின் அருகே அவர் நின்று பேசும் மரம்.

No comments:

Post a Comment