Wednesday, December 9, 2020

 #நண்பர்களுக்கு.....

—————————


கரானாவினால் பாதிப்படைந்தவர்களுக்கு ஏதேனும் உதவி பங்களிப்பு செய்கிறீர்களா? அது குறித்து எந்த பதிவும் இல்லையே என்று தொடர்ந்து நண்பர்கள் சிலர் கேட்டார்கள்.

நெல்லை,விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட பகுதிகளிலும் சென்னை மாநகரிலும் நண்பர்கள், என்ஜிஓக்கள் மூலமாக தேவையானவற்றை கொடுத்து உதவிகளை செய்யச் சொல்லியுள்ளேன். எப்போதும் நான் இப்படியான நல்லது செய்வதை புகைப்படமாக போட்டுக் கொள்வதில்லை. அதே போல என்னுடன் கடந்த 49 ஆண்டுகளாக பயணிக்கும் நண்பர்களுக்கு எல்லாம் தெரியும். ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் நேரடியாக அந்த இடத்திற்கே சென்று எங்களால் இயன்றதை செய்து விட்டு வருவோம். அதையெல்லாம் சொல்லிக் கொள்ளும் வாடிக்கை என்றுமே எனக்கு இல்லை. என்னுடைய அரசியல் வாழ்க்கையில் சுய முயற்சியிலேயே வாழ்கின்றேன். நான் நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் இன்னாள் உறுப்பினர் கிடையாது. இப்பொழுதும் என்னால் இயன்றதை செய்துக் கொண்டு வருகின்றேன். எவ்வளவு செய்தேன் என்பது சொல்வது கூட நியாயம் கிடையாது. என் சக்திக்கு மீறி செய்கிறேன். நண்பர்கள் மூலமாகதிரட்டிஒழுங்குப்படுத்தி
யுள்ளேன். அவ்வளவு தான். சோதனை கட்டங்களில் உதவுவது என்பதை விட கடமையாற்றுகிறோம் என்பது தான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. இந்த விளக்கம் கூட நண்பர்கள் தொடர்ந்து கேட்டதால் மட்டுமே சொல்கின்றேன். இதுதான்
என்னுடைய போக்கு......

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
K S Radhakrishnan
01.05.2020
#ksrpost

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...