———————————
தமிழ் படைப்புலகத்தின் பிதாமகர். ‘‘கதை சொல்லி’’, ‘‘கி.ரா.’’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்களின் பெயரால், கோவை விஜயா பதிப்பகத்தின், ‘‘விஜயா வாசகர் வட்டம்’’ சார்பில், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களுக்கு ‘‘கி.ரா.’’ விருதும், ரூ. ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. அதை ‘‘கி.ரா.’’வே வழங்குகினார். தொழில் மூலம், சமூக மாற்றத்திற்கும் வித்திடும், ஈரோடு ‘‘சக்தி மசாலா’’ குழுமம், இந்த விருதுத்தொகையை வழங்கவதோடு ஆண்டுதோறும் வழங்கவிருப்பது இலக்கியத்திற்கும் எழுத்துலகிற்கும் கிடைத்த கௌரவம்.
இன்று,செப்டம்பர் 16 ஆம் தேதி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு, புதுச்சேரியில் உள்ள ‘‘கி.ரா’’ அவர்களின் இல்லத்தில்( Q-13, லாசுப்பேட்டைஅரசுக்குடியிருப்பு,புதுச்சேரி-8 ), அவரது கரங்களால், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்கள் விருதினை பெற்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் ஆர் மகாதேவன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். நடிகர் சிவக்குமார், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், முனைவர் பஞ்சாங்கம், எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், சக்தி மசாலா குழும நிறுவனர் சாந்தி துரைசாமி, துரைசாமி மற்றும் அடியேன ஆகியோர் வாழ்த்துரை வழங்கினேம்.
கி.ராவும் உரை,. கண்மணி குணசேகரன் ஏற்புரை. வரவேற்புரை மு.வேலாயுதம். பேராசிரியர் கந்த சுப்ரமணியன் நிகழ்ச்சிகளை ஜூம் செயலி வாயிலாக, தொகுத்து வழங்கி நிகழ்வு நடக்கிறது...
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-09-2020




No comments:
Post a Comment