#இன்று_திருவிக_பிறந்ததினம்
————————————-
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகஸ்ட் 26, 1883 -செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
இவர் எழுதிய நூல்கள்
வாழ்க்கை வரலாறுகள்
யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
நாயன்மார் வரலாறு - 1937
முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
உள்ளொளி - 1942
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944
உரை நூல்கள்
பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941
அரசியல் நூல்கள் தொகு
தேசபக்தாமிர்தம் - 1919
என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930.
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
இந்தியாவும் விடுதலையும் - 1940
தமிழ்க்கலை - 1953
சமய நூல்கள் தொகு
சைவசமய சாரம் - 1921
நாயன்மார் திறம் - 1922
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
சைவத்தின் சமசரசம் - 1925
முருகன் அல்லது அழகு - 1925
கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
சைவத் திறவு - 1929
நினைப்பவர் மனம் - 1930
இமயமலை (அல்லது) தியானம் - 1931
சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
சமரச தீபம் - 1934
சித்தமார்கக்ம - 1935
ஆலமும் அமுதமும் - 1944
பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949
இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்)
தமிழ்த்தென்றல் தமிழுக்கு பெருமை தந்தவர்...!
சென்னையில் மகாசன சங்கம் தோன்றியது. அதன் தஞ்சை மாநாட்டில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொணர்ந்தார். இந்த மொழிப் புரட்சி காரணமாக அவரைப் புரட்சி வீரர் எனப் புகழ்ந்தனர். அம்மாநாடு ஈரோட்டில் கூடியபோது பெரியார் ஈ.வே.ரா தொடர்பு ஏற்பட்டது. சாது அச்சுக்கூடம் நிறுவி நவசக்தி வார இதழை 20-10-1920-இல் தொடங்கினார். தேசபக்திக் கனலை மூட்டினார். தமிழார்வத்தைப் பொங்கச் செய்தார். 1940வரை 20 ஆண்டுகள் அப்பத்திரிகையை நடத்தினார்.
இந்தியாவிலேயே முதன்முதல் 1918-இல் சென்னையில்தான் தொழிற்சங்கம் ஏற்பட்டது. அதில் சுந்தரனாரின் பங்கு பெரிது. போலீஸ் சங்கம், அச்சகத் தொழிலாளர் சங்கம், இரயில்வே தொழிலாளர் சங்கம் தோன்றக் காரணமானார். அரசியலிலும் தொழிலாளரியக்கத்திலும் இவரது பெரும் பகுதி வாழ்க்கை கழிந்தது. 9-7-1926-இல் அரசியலைத் துறந்தார். இவரது அரசியல் ஆசான் திலகர்.
வாழ்வையே பேச்சும் எழுத்துமாக ஆக்கிக் கொண்டவர்
புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார். ‘ தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்’ என்று இவரைப் பாராட்டியுள்ளார் கல்கி.
தமிழகத்தில் ஒரு பக்கம் மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு அன்பழகன், இலக்கியா என அழகிய தமிழ் பெயர்கள் வலம் வருகின்றன. மறுபுறம் விமலேஷ், நரேஷ், அஸ்வின் என்று வடமொழி கலப்புடன் பெயர்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகிலேயே பேசும் மொழியை தங்களது பெயரில் எழுதி பெருமையை பறைசாற்றியவர்கள் தமிழர்களே. ஆம்... தமிழ்க்கனல், தமிழருவி, தமிழ்வாணன் என தாய்மொழியை தங்கள் பெயரோடு இணைத்துக்கொண்டு, ‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’ என முழக்கமிடும் கூட்டம் நம்மிடம் உண்டு. இதற்கு வித்திட்ட பலருள் திருவிக, தேவநேய பாவாணர், மறைமலையடிகள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இதில் திருவிகவை பற்றி பார்ப்போம்!திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பாக்கம் ஊராட்சியில் துள்ளம் (தற்போது தண்டலம்) என்ற ஊரில் 1883, ஆக.26 அன்று பிறந்தார். பெற்றோர் விருத்தாச்சனார் - சின்னம்மையார்.
அரசியல், சமுதாயம், சமயம் என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதியவர். சிறந்த தமிழறிஞர், மேடை பேச்சாளர். ‘தமிழ்த்தென்றல்’ என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டவர். பள்ளி, கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவர், பத்திரிகையிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
கடவுள் வழிபாட்டில் ஈடுபாடுடைய திருவிக ஒரு முறை, பெரியாரை சந்தித்து திருநீறு கொடுத்தார். அதை வாங்கிய பெரியார் நெற்றியில் பூசிக் கொண்டார். அங்கிருந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, ஆச்சரியமும் பட்டனர். திருவிக சென்ற பின், பெரியாருடன் இருந்தவர்கள் திருநீற்றை அழிக்குமாறு கூறினர். இதற்கு மறுத்த பெரியார், ‘இதை நான் அழித்தால் திருவிக மனம் வருந்துவார். இதை நான் அழிக்க மாட்டேன். அது தானாகவே அழியட்டும். இதுவே நான் திருவிகவிற்கு காட்டும் மரியாதை’ என்றார்.
அந்தளவுக்கு பெருமை பெற்று விளங்கியவர் திருவிக.
,திரு.வி.க வாழ்க்கை குறிப்பு 1, திரு.வி.க வாழ்க்கைக் குறிப்பு 2. அவசியம் வாசிக்க
வேண்டும்,

No comments:
Post a Comment