Tuesday, December 1, 2020

 

#இரண்டாம்_தலைநகர்_என்று_சொல்ல #முடியாது#அப்படி_சொன்னால் #அரசியல்_தளத்தில்_பிழையாகிவிடும்.
————————————————-



மதுரையில் உலகத்தமிழ் நாடு நடந்தபோதே, தமிழகத்திற்கான புதிய தலைநகரம் பற்றிய பேச்சுகள் தொடங்கின. அந்த காலகட்டத்தில் பழ.நெடுமாறன், மதுரை நகரத்தின் கலாச்சார முக்கியத்துவம் பற்றிப் பேசியதாக ஞாபகம். நிர்வாகரீதியாக மதுரையை மையப்படுத்தி மாற்றங்களைச் செய்யலாம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். தமிழக வரலாற்றில் பழைமையான நகரங்களாக மதுரை, நெல்லை,உறையூர், தஞ்சை,காஞ்சிபுரம் போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.


எண்பதுகளில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையை மதுரைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினோம். அதற்காக மத்திய அரசு 1983 ஆம் ஆண்டு வாக்கில் நீதிபதி
ஜஸ்வந்த் சிங் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதற்கு பிறகு 28 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை தொடங்கப்பட்டது. கடந்த 1980 களின் துவகத்தில் திருச்சியை தலைநகராக மாற்றலாம் என்று எம்ஜிஆர் விரும்பினார். ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் அது சாத்தியப்படாமல் முடிந்துவிட்டது.

தொழிலுக்கான ஒரு நகரம், நிர்வாகத்திற்கு ஒரு நகரம், நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு ஒரு நகரம் என்று உருவாக்கலாம். கேரளத்தில் உயர்நீதிமன்றம் எர்ணாகுளத்தில் இருக்கிறது. தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லாம். கடந்த முப்பது ஆண்டுகளாக மதுரையை தலைநகராக்கலாம் என்ற பட்டும் படமல் விவாதம் நடந்துவருகிறது. இப்போது மீண்டும் அதே குரல். இரண்டாவது தலைநகரம் என்பதில் தெளிவு வேண்டும். இரண்டு தலைநகரங்களை உருவாக்கமுடியாது. அதில் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படும்.

காஷ்மீரில் குளிர் காலத்தில் ஜம்முவை தலைநகராகவும் கோடை காலத்தில் ஸ்ரீநகரை தலைநகராகவும் கொண்டுள்ளார்கள். அதே போல் மத்திய பிரதேசத்தில் இந்தூரிலும், மகாராஷ்டிரத்தில் நாக்பூரிலும் முகாம் சட்டமன்றங்கள் மட்டும் நடத்தப்பட்டன. எப்படி அன்றைய சென்னை மாநிலத்தில் 1950களில் கோடை காலத்தில் உதகமணடலத்தில் சட்டமன்றம் நடந்ததோ, ஆந்திரத்தில் இன்றைக்கு அமராவதியில் சட்டமன்றமும், விசாகபட்டினம் தலைமை செயலகம், கர்னூலில் உயர்நீதிமன்றம் நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திர உதயமான போது கர்னூலில்தான் செயல்பட்டது. கேரளத்தில் மாநில தலைநகரம் திருவனந்தபுரத்திலும், உயர்நீதிமன்றம் கொச்சியிலும் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் இப்படியான நிலை உள்ளது.

இப்படியான நடைமுறைகள் இருந்தாலும் கூட ஒரு மாநிலத்திற்கு தலைமை செயலகம் அமைந்த பகுதியே தலைநகராக இருக்க முடியும். இரண்டாம் தலைநகர் என்று சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அரசியல் தளத்தில் பிழையாகிவிடும்.

ஒரு கட்டத்தில் மாநில தலைநகராகக் மதுரையை கொண்டு தென் தமிழகம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது வேறு விஷயம்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
16.08.2020.
#ksrposts 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்