#கூட்டுறவு_இயக்ககர்த்தா_டி_ஏ_ராமலிங்கம்_செட்டியார்.
————————————————திருப்பூரில், 1881 மே, 18ம் தேதி பிறந்தவர், டி. ஏ. ராமலிங்கம் செட்டியார். இவரது தந்தை, அங்கப்ப செட்டியார், செல்வச் செழிப்பு மிக்க, பருத்தி வர்த்தகர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டம் பயின்று உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குழு தலைவராக இருந்தார். 1911ல், சென்னை மாகாணத்தில், கூட்டுறவு இயக்கம் பரவ பாடுபட்டார். தமிழ்நாடு கூட்டுறவு கூட்டமைப்பை நிறுவி, ‘கூட்டுறவு’ என்ற இதழையும் நடத்தினார். முதல் கூட்டுறவு அமைப்பை
திருவள்ளுரில் 100 ஆண்டுகளுக்கு முன்
பிரிட்டிஷ் ஆட்சியில் துவங்கப்பட்டது.
கோவையில், கூட்டுறவுப் பயிற்சிப் பள்ளி, மத்தியக் கூட்டுறவு வங்கி, நகர்ப்புற வங்கி, நில வளர்ச்சி வங்கி, பால் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு அச்சகம் ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில், பெரும் பங்கு வகித்தார்.
கோவை ஜில்லா போர்டு தலைவராகவும், மாநகராட்சியில் தலைவராகவும் பணியாற்றினார். 1921ல், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரானார். 1952 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, கோவையின் முதல் எம்.பி., என்ற பெருமை பெற்றார்.அரசியல் சாசன மூலப்பிரதியில் இவரின் கையெப்பம் உள்ளது.
கடந்த 1952 பிப்ரவரி 12ம் தேதி காலமானார். டி. ஏ. ராமலிங்கம் செட்டியார் பிறந்த தினம் இன்று.
#ksrpost
கே. எஸ்.இராதாகிருஷ்ணன்
18.05.2020

No comments:
Post a Comment