*#இன்றைக்கு_பிரசாந்த்_பூஷன்; #உத்தமர்_காந்தியின்_நிலைப்பாடு
அன்றைக்கு தமிழகத்தில் பி.எச். பாண்டியன்
————————————————-
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிராக நடந்து வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் தரப்பில் , “நீதிமன்றத்தை அவமதிப்பது எனது நோக்கமில்லை. நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்கவே நான் பேசினேன். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. அப்படியும் இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதுவீர்கள் ஆனால் நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கிறதோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார். நாளை இந்த வழக்கில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
இதே போல சற்று மங்கலான நினைவுகள்.
டி. என். சிங்காரவேலு உயர்நீதிமன்ற நீதிபதி 1984 ஆம் ஆண்டு ஒரு விடுமுறை நாளில் ஒரு மார்வாடியின் மீது நடந்துக் கொண்டிருந்த கிரிமினல் வழக்கிற்கு தன் சேம்பரில் வைத்து அவசரமாக அவசரமாக தீர்ப்பளித்ததும் ஏன் என்று?, அந்த தீர்ப்பின் மீது சந்தேகம் உள்ளது என்று பி.எச். பாண்டியன் அதனை சட்டமன்றத்தில் ரத்து செய்தார். அப்போது என்னுடைய சீனியரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்த ஆர். காந்தி அவர்களிடம் இந்த வழக்கு எப்படி நடந்தது என்பது குறித்து கடிதம் ஒன்றை வாங்கி நிறுத்தி வைக்க, அதற்கு மறுநாள் அது பெரிய விவாதங்களை உண்டாக்கியது. இந்த கடிதத்தை பி.எச். பாண்டியனிடம் தலைமை செயலகத்தில் நான்தான் கொடுத்தேன். பி.எச்.பாண்டியன் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவும் முடிவும் எடுக்கப்பட்டது.
அப்போது பி.எச்.பாண்டியன் நீதித்துறை சரியில்லை என்றால் சட்டமன்றமோ நாடாளுமன்றமோ அதை திருத்தலாம். இதை ஜனநாயத்தின் பரிணாமத்தில் ஒரு போக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். யாரும் கேட்கவில்லை. மறுநாள் சட்டமன்றம் கூடியதும், அன்றைக்கு முதலமைச்சராக இருந்தது
எம்.ஜி.ஆர்;அமைச்சர் நாவலர், திமுக
வின் சட்டமன்ற எதிர் கட்சி துணைத்தலைவராக இருந்த பேராசிரியரும் அமர்ந்து பேசி அந்த தீர்ப்பினால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று முடிவு செய்து அந்த தீர்ப்பினை மீது சட்டமன்றம் தீர்மானத்தை திரும்ப பெறப்பட்டது.அந்த காலத்தில் சட்டமன்றத்தில் பி.எச். பாண்டியன் “The sky is my limit - என் அதிகாரத்திற்கு வானமே எல்லை" என்று சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
இதேபோல தமிழகத்தைச் சார்ந்த நீதிபதி கர்ணன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடத்தப்பட்டு அவர் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்.
நாத்திகம் ராமசாமி, சந்திரசூட் CJI ஆக இருந்த போது நீதி மன்ற அவமதிப்பு வழக்கிற்காக தண்டிக்கப்பட்டார். வழக்கு நடக்கும் போது அவருக்கு ஆதர்வாக அறிக்கைகள் எழுதிக் கொடுத்தது வலம்புரி ஜானும் மாலனும்.
When Gandhi Refused To Apologize And Faced Contempt Proceedings.
The statement made by Advocate Prashant Bhushan before the Supreme Court bench which found him guilty of contempt has caught wide attention. The said statement made by him is paraphrased from a statement made by Mahatma Gandhi in the contempt proceedings initiated against him by the Bombay High Court in 1919
#contempt_proceedings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.08.2020
#ksrposts

No comments:
Post a Comment