சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் நினைவு நாள் இன்று.இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராக போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், ஒரு சிறந்த பேச்சாளரும், வழக்கறிஞரும் ஆவார்.ஆற்றல்மிக்க சிந்தனையாளர்.அதுமட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடியவரும் ஆவார். தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கிய ஆர். கே. சண்முகம் செட்டியார் தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக்குண்டு.காங்கிரஸ் கட்சியைச் சேராதவர் என்றாலும் காந்தியின் பரிந்துரையால் முதல் நிதியமைச்சராக நேருவால் நியமிக்கப்பட்ட ஒரே தமிழர் என்ற சிறப்புகளையெல்லாம் கொண்டவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்.
சண்முகம் செட்டியார் அவர்கள், 1892 இல்,ஆர். கந்தசாமி செட்டியாருக்கும், ஸ்ரீரங்கம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தார். இவருடன் ஒரு சகோதரனும், இரண்டு சகோதிரிகளும் ஆவர். கோயமுத்தூரில் இவருக்கு சொந்தமாக தொழிற்சாலைகள் இருந்தன. கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்த இவர் பிறகு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார்.திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்களின் திவானாக இருந்தார்.
நீதிக் கட்சியில் இருந்த சண்முகம் செட்டியார், 1920-ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார். பிறகு, சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார். 1924-ல் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டு மத்திய சட்டசபை என்றுஅழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரானார். மத்திய சட்ட சபையின் துணைத் தலைவர், தலைவர் ஆகிய இரு பதவிகளையும் இவர் வகித்திருக்கிறார். முதல் நிதியமைச்சராக 1947-க்கு பிறகு சுதந்திர இந்தியாவில் பதவியேற்ற அந்த காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்சிக்காக பல திட்டங்களை கொண்டுவந்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த பெரும்பங்காற்றினார்.அவருடைய நிதித் துறை நிர்வாகத்தை காங்கிரஸ் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டி
னார்கள்.காந்தி, தாகூர், அன்னி பெசன்ட், சித்தரஞ்சன் தாஸ், அவ்வை டி.கே. சண்முகம் என்று பலதுறைகளைச் சேர்ந்தவர்களுடனும் சண்முகம் செட்டியார் நட்பு கொண்டிருந்தார்.
1952 ஆம் ஆண்டு, சென்னை சட்டமன்ற மேலவைஉறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லி தமிழ்ச் சங்கம், லண்டன் தமிழ்ச் சங்கம்போன்றவற்றைத்தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர். சிதம்பரம் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் தமிழிசை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து தமிழில் பாடல்களை பாடுவதற்காக இராஜா அண்ணாமலை மன்றத்தை சென்னையில் உருவாக்கியபோது அவருடன் இருந்தார். கோவையில் பஞ்சாலைகள் உருவாகவும் கோவை மாபெரும் தொழில் நகரமாகவும் அவருடைய பங்களிப்புகள் ஏராளம்.
இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராகவும், சிறந்த பேச்சாளராகவும், தமிழ் இலக்கிய எழுத்தாளராகவும் போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள், மே மாதம் 5 ஆம் நாள் 1953 ஆம் ஆண்டு, தனது 61-வது வயதில் காலமானார். தன்னுடைய பொதுவாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்த இவர் உலகளாவிய பெருமைப் பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ‘தென்னாட்டுத் தாகூர்’ என்றும், ‘திராவிட மணி’ என்றும் அறிஞர் அண்ணா அவர்களால் மகுடம் சூட்டப்பட்டார். ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள், தமிழர்களால் என்றென்றைக்கும்பெருமைப்படத்தக்கவராக விளங்குகிறார்.ஆர் கே சண்முகம் செட்டியார். இளம் வயதிலேயே, பல மொழிகளைக் கற்றறிந்தார். சட்டம் பயின்றவர், கோவை நகர்மன்ற துணைத்தலைவர், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக திறம்பட பணியாற்றினார். பாராட்டி
பயன் பெற்றவர்கள் இவரை பிற்காலத்தில் புறக்கனித்தனர். அன்றும் #தகுதி #தடையாக இருந்தது.
அன்னிபெசன்ட் அம்மையாருடன் இங்கிலாந்துசென்றுபலபொதுக்கூட்டங்களில் இந்திய சுதந்திரம் குறித்து உரையாற்றினார். 1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். உலக நாணய மாநாட்டில் பங்கேற்றார். 1945இல் மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராக பணியாற்றினார். இந்தியாவில் உள்ள மிகப் பெரிய வீட்டு நூலகங்களில் இவருடையதும் ஒன்று. இங்கிலாந்திடம் சிக்கியிருந்த, பலகோடி ரூபாய் அன்னியச் செலாவணியையும் தங்க இருப்பையும் சுதந்திரத்திற்கு பின் தன் வாதத் திறமையால் மீட்டெடுத்தார். கடந்த 1953 மே 5 ஆம் தேதி காலமானார்.
#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
K. S. Radhakrishnan
5-5-2020.
No comments:
Post a Comment