Tuesday, December 8, 2020

 #இந்தியா-#அண்டை_நாடுகள்

——————————————-


இந்துமகா சமுத்திரத்தில் சீனாவும் அமெரிக்கா போன்றவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. இலங்கையும் இதற்கு துணை போகின்றது.நம்மோடு
சீனா,பாகிஸ்தான்,மியாமனர், நேப்பளம்,
பங்களாதேஷ், இலங்கை ஆகிய அண்டை நாடுகளின் உறவுகள் சரியாக இல்லை

*#இஸ்லாமிய_நாடுகள்_கூட்டமைப்பில் #பாகிஸ்தான்_புகாரை_மறுத்து #இந்தியாவுக்கு_மாலத்தீவு_ஆதரவு*
இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைஇருப்பதாக, இஸ்லாமிய நாடுகள்கூட்டமைப்பில் (ஓஐசி) பாகிஸ்தான் புகார் தெரிவித்தது. இதை மறுத்து இந்தியாவுக்கு ஆதரவாக மாலத்தீவு குரல் கொடுத்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ்பரவல் அதிகமானதற்குக் காரணம் இஸ்லாமியர்கள் தான். டெல்லியில்நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களால் வைரஸ் பரவல்அதிகமானது என்று சமூக வலைதளங்களில் பொய் செய்திகள் பரப்பப்பட்டன. அரசியல் உள்நோக்கத்துடனும் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்திலும் சமூக விரோத சக்திகள் இதுபோல் வதந்திகளைப் பரப்பின.

இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்கியது குறித்தும், ஐ.நா. ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், ‘இஸ்லாமோபோபியா’ என்ற முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு இந்தியாவில் நிலவுகிறது. இதற்கு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியது.

இந்தக் குற்றச்சாட்டை அந்த மாநாட்டிலேயே மாலத்தீவு திட்டவட்டமாக மறுத்தது. இதுகுறித்து மாநாட்டில் ஓஐசி.யின் மாலத்தீவு நிரந்தர உறுப்பினர் தில்மீஸா உசைன் பேசியதாவது:

தெற்காசியாவில் மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதில் மாலத்தீவு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் இஸ்லாமோபோபியா என்ற குற்றச்சாட்டு உண்மையானதல்ல. உண்மை என்னவென்பதே தெரியாமல், ஒரு குறிப்பிட்ட நாட்டின்மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியானதல்ல. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்த நாடு. 200 மில்லியன் முஸ்லிம்கள் வாழும் நாடு. எனவே, இந்தியாவுக்கு எதிராக ஓஐசி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் மாலத்தீவு ஆதரிக்காது.

இனவெறி அல்லது மதவெறி எதுவாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அல்லது வேறு எந்த வகையில் இருந்தாலும் அதை மாலத்தீவு கடுமையாக எதிர்க்கிறது. அதேநேரத்தில், இந்தியாவில் இஸ்லாம் மதம் பல நூற்றாண்டுகளாக உள்ளது. இந்தியாவில் 2-வது மிகப்பெரிய மதமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர்.

எனவே, இந்தியாவுக்கு எதிராக உள்நோக்கத்துடன், தவறான செய்திகளைப் பரப்புவதை மாலத்தீவு ஏற்றுக் கொள்ளாது. சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகள், இந்தியாவின் 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் மாலத்தீவு ஆதரிக்காது.

இவ்வாறு மாலத்தீவு பிரதிநிதி உசைன் திட்டவட்டமாகக் கூறினார்.

அத்துடன், 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவுக்கு ஆதரவாக மேலும் சில நாடுகள் குரல் கொடுத்துள்ளன. இதனால் பாகிஸ்தான், துருக்கி உட்பட ஓஐசி.யில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

. *#இந்தியாவிடம்_கடனுதவி_கேட்கிறது #இலங்கை*

இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ.8,357.44 கோடி கடனாக அளிக்கும்படி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச கோரியுள்ளார்.
கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் எழுந்துள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக, அந்நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவிட்டபடியால் இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியுள்ளது.

இதுதொடாரபாக அதிபர்அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஏற்கெனவே, இந்தியாவிடம் 400 மில்லியன் டாலர் நிதியுதவியை இலங்கை கடந்த மாதம் கோரியது. இப்போது அதனுடன் கூடுதலாக 1.1 பில்லியன் டாலர்கள் கோரப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தொலைபேசி மூலம் சனிக்கிழமை பேசினார். அப்போது, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. நெருங்கிய அண்டை நாடான இலங்கைக்கு இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா உதவ வேண்டும் என்று மோடியிடம் அதிபா் கோத்தபய கேட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கெனவே பணப் புழக்கத்தை அதிகரிக்க கரன்சி நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதற்கு அங்கு கடும் எதிர்ப்பு. இந்நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க அந்நாடு இறக்குமதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்நாட்டின் சுற்றுலா வருவாய் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதால் நிதி நெருக்கடி நிலவி வருகிறது.

இலங்கையில் கரோனாவால் 1,000-க்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டுக்கு 25 டன் அளவிலான மருந்து உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை இந்தியா ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ளது.ஏற்கனவே நான்கு மாததிற்க்கு முன் கோடி கணக்கில் டாலர்கள் இந்தியா இலங்கைக்கு உதவியது,

#இந்தியா-#அண்டை_நாடுகள்

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.05.2020

No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...