Tuesday, December 8, 2020

 #காவேரி

—————-



காவேரி டெல்டா பகுதியில் குறுவை நாற்று என்றாலும், நடவு என்றாலும் காவிரிப் படுகை விவசாயிகள் இப்போதெல்லாம் மேட்டூரை நம்புவதில்லை. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் மேட்டூர் அணை திறந்தது. மேட்டூர் நீரை எதிர்பார்க்காமலேயே அப்போது 2.90 லட்சம் ஏக்கரில் குறுவை பயிரானது. சென்ற ஆண்டைவிட இரண்டு மாதங்கள் முன்கூட்டியே இந்த ஆண்டில் அணை திறக்கும்போது மூன்றேகால் லட்சம் ஏக்கர் குறுவை பயிராகும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. வெறும் முப்பதையாயிரம் ஏக்கர் மட்டுமே குறுவை பயிரிடும் பரப்பு அதிகமாகிறது. மேட்டூர் திறப்பதால்தான் மூன்றேகால் லட்சம் ஏக்கரில் குறுவை பயிராகுமா என்பதை இப்போது நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.இப்பொழது
வேறு விவகாரங்களும் இதில் எழுந்துள்ளன.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக காவேரி பிரச்சனையில் பலவற்றை இழந்த தமிழ்நாட்டுக்கு, இந்தத் தீர்ப்பாவது செயல்படுத்தப்பட்டால் போதும் என்ற நிலையில் தீர்ப்பைச் செயல்படுத்த காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவில் ‘வாரியம்’ என்ற வார்த்தையை ஏற்காமல், மத்திய அரசு பிடிவாதம் பிடித்தது. கடைசியில்தான், காவேரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவானது.

காவேரி ஆணையம் எப்படி இயங்க வேண்டும் என்பதை இறுதித் தீர்ப்பில் வரையறுத்த உச்ச நீதிமன்றம், அதில், ‘நீர்ப் பாசனத்தில் அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற ஓர் உயர் அதிகாரியைத் தலைவராக மத்திய அமைச்சரவை தேர்ந்தெடுத்து, உச்ச நீதிமன்ற அனுமதியோடு பணியமர்த்த வேண்டும். மத்திய அரசின் பிரதிநிதி என்ற அடிப்படையில் நீர்சக்தித் துறைச் செயலாளர், ஆணையத்தில் நிரந்தர உறுப்பினராக இருப்பார். எந்த வகையிலும் நீர்சக்தித் துறையின் அலுவலக நிர்வாகத்துக்குள் ஆணையத்தின் செயல்பாடு இடம்பெறாது. ஆணையம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றத் தேவையான உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசோ, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ கட்டுப்பட மறுத்தால், ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுத் தீர்வு காணலாம்’ - இப்படி காவேரி ஆணையத்தைத் தன்னாட்சியோடு இயங்கச் சொன்ன உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரே உத்தரவின் மூலம் இல்லாததாக்கி இருக்கிறது மத்திய அரசு.

காவேரி சிக்கலில் ஆரம்பத்திலிருந்தே யார் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அவர்களின் நிலைப்பாடு தமிழகத்துக்கு சாதகமாக இருந்ததில்லை. வி.பி.சிங் ஒருவரைத் தவிர, இதுவரை எந்தப் பிரதமரும் காவேரி விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை. காங்கிரஸ், பாஜக இரண்டுமே கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கிற சக்தி கொண்ட கட்சிகள் என்பதால், இவர்களில் யார் மத்தியில் ஆட்சி செய்தாலும் அதன் செயல்பாடுகள் எப்போதுமே கர்நாடகாவுக்கு ஆதரவாகவே இருந்திருக்கின்றன.

1970-ல் தமிழகம் அமைக்கக் கோரிய நடுவர் மன்றத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பின்னரே அமைத்த மத்திய அரசு, 2007-ல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட்டால் நடைமுறைக்கு வந்துவிடும் என்று அதைச் செய்யாமல், கர்நாடகாவுக்கு ஆதரவாக 6 ஆண்டுகள் இழுத்தடித்தது. 2012-ல் மத்திய அரசிதழில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்ட உடனேயே,அதில்குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் விட்டது மட்டுமல்ல, 2016-ல் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அதை நிராகரித்து நீதிமன்றத்தில் கருத்துத் சொன்னது.

தமிழகத்தில் அதிக தூரம் ஓடும் ஒரே நதி காவேரி நீர் சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையிலும், திருப்பூரிலிருந்து வேலூர் வரையிலும், ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரையிலும் தற்போது கடைசியாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறையையும் சேர்த்து 31 மாவட்டங்கள் குடிநீருக்கோ விவசாயத்துக்கோ டெல்டா விவசாயிகளின் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது. இது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் பிரச்சினை. டெல்டா விவசாயிகளின் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது. இது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் பிரச்சினை. காவேரியை நம்பியிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 25 லட்சம் ஏக்கர் விவசாய
நிலங்களுக்குக் காவேரித் தண்ணீரை விட்டால் பாசனத்துக்கு வேறு வழியில்லை. தமிழ்நாட்டின் நெல் உற்பத்திக்குக் இந்த பொன்னிஆறு மூல காரணம். தமிழக மக்களில் ஏறத்தாழ 5 கோடி மக்களுக்குக் காவேரி தண்ணீரே குடிநீர்.இதில் நீர்வரத்து இல்லையெனில் நிலத்தடி நீர் எட்டாத ஆழத்திற்கு போய்விடும்.

இதற்க்கு வழி தெரியல. காவிரி ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் உண்டா என்பது
கேள்வி.....

#காவேரி

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.05.2020

No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...