#மதுரை சித்திரைத்_திருவிழா
#அழகர்_வைகைஆற்றில்_இறங்குவது#கள்ளழகர்
—————————————
முன்பு. சைவர்களுக்கும் வைணவர்
களுக்கும் கலகங்கள் நடந்தகாலம்.
மதுரை மன்னன் திருமலை நாயக்கர் தான் அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு என்று சைவத்தையும் வைணவத்தையும் சித்திரைத் திருவிழா மூலம் சமரசம் செய்து
இணைத்துவைத்தார்.
அழகர்மலைக்கள்ளர்கள் அந்தக்
காலத்தில் பிரபலமானவர்கள். மலையைச்சுற்றி ஆடு மாட்டிடையர்கள் வாழ்ந்தனர். திருடர்கள் யாரும் ஆடுமாடுகளைத் திருடாமல் தலைவர் அழகர் பார்த்துக்கொண்டார். அவரை திருமாலாக்கி மீனாட்சியை அவரது தங்கையாக்கி பிராமணக்கதை புனைந்து வைகையாற்றில் அழகர் இறங்கி வருமுன் தங்கையின் திருமணத்தை முடித்ததால் அழகர் கோபித்துக்கொண்டு மதுரை ஊருக்குள் வராமல் அவுட்டரிலேயே சுற்றிவிட்டு மலை திரும்பியதாய் உருவாக்கப்பட்டத்து
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக துலுக்கநாச்சியாரும் உருவானார். அழகரை அக்காலமுதல் யாதவர்கள் என்ற கோனார்கள்தான் இதில் முன்னணியில் நின்றனர். அவர்கள் வைகையில் ஆட்டுக்குடலில் நீரும் பெரியதிரியில் நெருப்பும் தங்கள் மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்வார்கள்.
அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முதல்நாள் மாலையேவந்து வேடமிட்டு ஆடுதலும் மண்டகப்படிகளில் யாதவப்பாடகர்கள் அழகர் வர்ணிப்புகளை விடிய விடியப்பாடுவார்கள்.நான் இருமுறை இதைபாடல்களை விடியவிடிய வாலிபத்தில் கேட்டிருக்கிறேன்.அழகர் கோவில் பற்றி தோழர் தொ.பரமசிவம் ஆய்வு செய்துதான் முனைவரானார்.அப்போது அவர் எங்கள் மாவட்ட இளையான்குடி கல்லூரியில் பேராசிரியராய் பணியாற்றினார்
அழகர்மலையில் பLட்டரின்
ஆணையால் நம்கருப்பணன்கள் 18 சித்தர்களின் தலையை வெட்டிய கதையை யாதவர்கள் பதினெட்டாம்படி அலங்காரவர்ணிப்பு என்று பாடுவார்கள். ஒருகாலத்தில அதை நானும் பாடுவேன். இப்போது அவை மறந்துவிட்டது.
கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
நன்றி,அண்ணன்
Sap Marx
#மதுரை
#ksrpost
4-5-2020
No comments:
Post a Comment