Wednesday, December 2, 2020

 

————-









நெருங்கிய நண்பரும், பத்திரிகையாளருமான மணா-வின் நீண்ட நேர்காணல் ‘நிலவெளி’ இலக்கிய இதழில் வெளிவந்திருக்கிறது.
வாசித்தேன். பத்திரிகை, எழுத்து அனுபவங்களை முன்வைத்திருக்கும் அடர்த்தியும், ஆழமுமான பதிவு.
ஊடகத்துறையில் நீண்டகாலமாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மணா- இதைவிட விரிவாகத் தன்னுடைய அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதன் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகால அரசியல், சமூக, இலக்கியம் சார்ந்த பலவற்றை அவர் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
மணா என்கிற பெயரில் பலருக்கும் அறிமுகமான லெட்சுமணனை எண்பதுகளின் துவக்கத்திலிருந்தே எனக்குத் தெரியும். துக்ளக் பத்திரிகையில் பணியாற்றியதோடு. மதுரையில் ‘அகிலா நியூஸ்’ என்கிற தமிழ்ச் செய்தி நிறுவனத்தையும் அவர் நடத்திவந்தார். பல பத்திரிகைகளிலும் எழுதி வந்தார்.
துக்ளக், கல்கி, குமுதம் போன்ற பல பத்திரிகைகளுக்காகவும் என்னைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் பங்கேற்ற பல இதழ்களில் அவருடைய நட்பு காரணமாக நானும் பங்கேற்றிருக்கிறேன். மதுரையில் அவர் இருந்தபோதிருந்தே அவருடன் எனக்குப் பழக்கம்.
எனக்கு மட்டுமல்ல, கடந்த காலத்தில் நான் சார்ந்திருந்த நெடுமாறன், வைகோ, தலைவர் கலைஞர் என அனைத்துத் தலைவர்களுக்கும் மிகவும் நெருக்கமான பத்திரிகையாளராக இருந்தார்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் பணிகளிலும் நான் மேலும் சிறக்க வேண்டும் என்றும், மேம்பட வேண்டும் என்றும் அக்கறை எடுத்துக் கொள்வார்.
பத்திரிகையாளர் மட்டுமல்லாமல் தன்னுடைய சுய விருப்பங்கள், வெறுப்புகளைத் தாண்டி எதையும் நேர்மையாக எடைபோட்டு தன்னுடைய வாழ்க்கையை நடத்துபவர்.
அவர் பெற்ற நண்பர்கள் ஏராளம். அவருடைய நண்பர்கள், அவர் குடும்பப் பின்னணி, அவர் கடந்து வந்த பத்திரிகை வாழ்க்கை பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள் என்று தொடர்ந்து அவரிடம் சொல்லிக்கொண்டு தான் வருகின்றேன்.
மதுரையின் மண் வாசனையை தனது எழுத்தின் மூலம் பதிவு செய்திருக்கும் வத்தலக்குண்டு செல்லப்பா, ஜி.நாகராஜன் போன்ற எழுத்தாளர்கள் வரிசையில் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ‘மணா’வுக்கும் இடமுண்டு.
நடிகர் சிவகுமாரும் நானும் அவருடைய உடல் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்.
எங்களைப் போன்ற நீண்ட கால நண்பர்கள், அவருடைய நலம் விரும்பிகளாக பலர் உண்டு. மணாவின் எழுத்தை நேசித்த தோழர்களை விட அவருக்கு கிடைத்த தோழிகளும் ரசிகைகளும் அதிகம்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-09-2020.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்