Tuesday, December 1, 2020

 




#ஊர்ச்சாவடி_அரசமர_நிழலில்#தோட்டப்_பாதையின்_புழுதிப்_படலம்#அமைதியான_நடை,காற்றுக்கு நிறம்பூசிக் கண்களை உறுத்தும் பொங்கல் திருநாட்களில்.. ஊரெல்லாம் சவளம் சவளாமாகக் கரும்பு தின்கிறபோது, சில முதிர்ச்சி பெற்ற ரசிகர்கள் மட்டும் அவைகளைத் துண்டம் துண்டமாக நறுக்கி வைத்துச் சுவைக்கும் காட்சி என் நினைவிற்கு வருகிறது.

அம்மாவின் சுவையான சைவ,அசைவ சமையலில்(வத்தக்குழம்பு,மோர்க்குழம்பு,அசைவத்தில் நாட்டுக் கோழி குழம்பு, குளத்து மீன் -கருவாடு வகைகள் )என கருவடகம், கூழ் வத்தல் ஊறுகாய்க்குப் பதிலாக மிளகாய்ப் பொடியிலும் உப்புத் தூளிலும் துவட்டப் பட்ட பச்சை மாங்காய்த்துண்டுகள்இடம்பெறுமே.அந்த அபூர்வ வேளைக்கு நன் மனதில் ஒரு சித்திரம் வரைகிறேன். துண்டு, துண்டாக இருக்கும் கிராம நாட்களின் டைரியைப் படிக்கும்போது நானே ஒரு சந்தோஷ சிதறலாகி.எனக்குள் உதிர்கிறேன்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
11.07.2020.
#ksrposts 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்