*#தமிழக_சட்டப்பேரவை*
*#சென்னை_ராஜதானி_சட்டப்பேரவை*
(*#Madras_Presidency*)
————————————————
கொரோனா வைரஸ் தொடரும் நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரைத் தாற்காலிகமாக கலைவாணர் அரங்கில் நடத்த முடிவா...?
இதே கலைவாணர் அரங்கில் இருக்கும் இடத்தில், பாலர் அரங்கம் என்ற பெயர் மாற்றப்பட்ட அரங்கில்தான் சென்னை ராஜதானி சட்டப்பேரவை (Madras Presidency)1947க்கு பிறகு ஏற்கெனவே கூடியுள்ளது. அப்போது ஆந்திரா, கேரளா, தென் கருநாடகத்தை சார்ந்த 400க்கு மேல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தனர் . நீலம் சஞ்சீவ ரெட்டி, நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர் போன்றோர் இடம் பெற்றனர்.
மவுன்ட் ரோடு அருகே அரசு எஸ்டேட் வளாகத்தில் உள்ள சட்டசபை செனட் ஹவுசில் (senate house) 14 ஜூலை, 1937 - 21 டிசம்பர் 1938 வரையும், ஜனவரி 27, 1938 -26 அக்டோபர் 1939 காலகட்டத்தில் விருந்து மண்டபத்திலும் (பின்னர் ராஜாஜி மண்டபம் என பெயர் மாற்றம் பெற்றது) கூடியது. 1946-52 போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் கூடியது. 1952ல், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆன பின், அரசாங்கத்தின் எஸ்டேட் வளாகத்தில் உள்ள தற்காலிக இடத்திற்கு நகர்த்தப்பட்டது. அப்போதைய சட்டமன்ற கட்டிடம் 260 பேர் மட்டுமே அமரும் படி இருந்ததால் மார்ச் 1952 ல் இந்த நடவடிக்கை செய்யப்பட்டது. பின்னர் 3 மே 1952 அன்று அதே வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்திற்கு நகர்ந்தது. இப்புதியகட்டிடத்தில் (பின்னர் "கலைவாணர் அரங்கம்," எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட கட்டிடம்) 1952-56 இல் செயல்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைப்பு, ஆந்திர மாநில உருவாக்கம் போன்ற நிகழ்வுகளால் சட்டமன்றத்தின் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது. அதனால் இன்றைய சட்டமன்றம் 1956ல் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு திரும்பியது.
1921-1937 கவுன்சில் அறைகள், செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
14 ஜூலை 1937 - 21 டிசம்பர் 1938 செனட் ஹவுஸ், சென்னை
பல்கலைக்கழக வளாகம், சேப்பாக்கம்.
27 ஜனவரி 1938 - 26 அக்டோபர் 1939 விருந்து மண்டபம் (ராஜாஜி மண்டபம்), அரசுத் தோட்டம் (ஓமந்தூரார் வளாகம்), மவுண்ட் ரோடு.
24 மே 1946 - 27 மார்ச் 1952 கவுன்சில் அறைகள், செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
3 மே 1952 - 27 டிசம்பர் 1956 கலைவானர் அரங்கம், அரசு தோட்டம் (ஓமந்தூரார் வீடு).
29 ஏப்ரல் 1957 - 30 மார்ச் 1959 சட்டமன்ற கூடம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
20-30 ஏப்ரல் 1959 அரன்மொர் அரண்மனை, உதகமண்டலம் (ஊட்டி).
31 ஆகஸ்ட் 1959 - 11 ஜனவரி 2010 சட்டமன்ற கூடம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
16 மார்ச் 2010 - 15 மே 2011 புதிய சட்டசபை வளாகம், ஓமந்தூரார் அரசு வளாகம், அண்ணா சாலை.
16 மே 2011 - செயின்ட் ஜார்ஜ் கோட்டை சட்டமன்றக் கூட்டங்கள்.
*#தமிழக_சட்டப்பேரவை*
*#சென்னை_ராஜதானி_சட்டப்பேரவை*
(*#Madras_Presidency*)
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
22.08.2020
#ksrposts

No comments:
Post a Comment