இன்று(16.07.2017) வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் விவசாயத்தை கொலை செய்யும் அரசாங்கம் என்ற பதிவு வெளியாகியுள்ளது. அதில் வந்துள்ள கருத்துக்களும், வார்த்தைகளும் நான் என்னுடைய வலைப்பூவில் எழுதியவை. அந்த கட்டுரை 01.02.2016 தேதியிட்ட தினமணி நாளிதழிலும் வெளிவந்தது.
விவசாயிகளுடைய தியாகத்தை வெளிப்படுத்தும் அளவில் அதனை மீண்டும் வெளியிட்டுள்ள நக்கீரனுக்கும் நிருபர் திரு சேகர் அவர்களுக்கும் நன்றி.
01.02.2016 என் வலைப்பூவின் சுட்டியையும் தினமணியில் வெளிவந்துள்ள கட்டுரையையும் இணைத்துள்ளேன்.
நாராயணசாமி நாயுடுவுடன் 1970-80 களில் விவசாயிகள் போராட்டத்தில் களப்பணி ஆற்றியவன். என்னுடைய சொந்த கிராமத்தில் 1980 டிசம்பரில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் 8 விவசாயிகள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
விவசாயிகள் ஜப்தி வேண்டாம் என்று நீதிமன்றம் சென்று போராடியவன் நான்.
நான் எழுதியுள்ள விவசாயிகள் போராட்டம் குறித்தான விரிவான வரலாற்று நூலும் விரைவில் வெளிவர இருக்கிறது.
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/02/blog-post.html
#விவசாயிகள்போராட்டம்
#farmers
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-07-2017
No comments:
Post a Comment