Tuesday, July 25, 2017

போலி PRESS , ADVOCATE ஸ்டிக்கர் மற்றும் பாஸ்கள்......

போலி  PRESS , ADVOCATE ஸ்டிக்கர் மற்றும் பாஸ்கள்......
-------------------------------------
இன்று மயிலை லஸ்ஸுக்கு சென்றபோது  அவர் வழக்கறிஞர் பாஸ் ஸ்டிக்கர் ஒட்டிய விலை உயர்ந்த சொகுசு காரில் வந்திறங்கினார். அவர் வழக்கறிஞரும் இல்லை. 
1982 கால கட்டங்களில் சிமெண்டில் மண் கலந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்படும் நிலையில் நானும், மூத்த வழக்கறிஞரும் எனது சீனியரும் ஆர். காந்தியும் அவருக்கு ஜாமீன் பெற்று தந்தோம். அந்த நேரத்தில் ஐகோர்ட்டில் உள்ள எங்களுடைய 22லா சேம்பரில் பயந்து ஒடுங்கி இருந்தார். இன்றைக்கு சம்மந்தமே இல்லாமல் இப்படி வழக்கறிஞர் பாஸ் ஒட்டிய காரில் வந்தது அதிர்ச்சியாக இருந்தது. அதுமட்டுமின்றி அவ்வப்போது ஒரு சின்ன அரசியல் கட்சியின்தலைவர் என  மேடையில் தோன்றுவார்.  சாதி அடையாளத்தையும் கட்டிக்கொள்ளவர் .ஒருவேளை அது அவரது நண்பர்களின் வாகனமாகவும் இருக்கலாம். எனினும் பத்திரிக்ககையாளர், வழக்கறிஞர் போன்ற முக்கிய பாஸ்களை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க முயல வேண்டும்.

மீடியாவுக்கு  , வக்கீல் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத சுண்டல் விற்பவர் , மளிகை கடை நடத்துபவர் , சாலையோரம் பேப்பர் பிரிப்பவர் , சமூக விரோதிகள் , குற்றவாளிகள் , இரவில் மது அருந்தி விட்டு போகும் போது போலீஸ் மடக்காமல் இருக்கவும் ஸ்டிக்கர்களை ஒட்டி வாகனங்களை ஓட்டுகின்றனர்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...