சில அனுபவங்கள்
------------------------------
என்னை சண்டைக்காரன், கோபக்காரன் என்று அழைப்பது உண்டு.
மற்றும் பொறுமையில்லாதவன் என்ற பெயரும் உண்டு.
இந்தப் பெயர்ப்பட்டியல் நீளமானது
எனக்குப் பெயர் வைப்பவர்கள்
தூர நின்று பார்ப்பவர்கள்
நெருங்கி என்னை அறியாதவர்கள்
பெயர் வைப்பது அவர்கள் அறியாமை
அவர்களுக்கு என்னை பற்றிய புரிதல் கிடையாது
ஏனெனில் அரசியலில் 46 ஆண்டுகள் இருந்தாலும் எம்.எல்.ஏ., எம்.பி., ஆகவில்லையே. அதுதானே இன்றைக்கு அடிப்படை மரியாதைக்கு காரணம். களப்பணிகள் ஆற்றிய பெருமைகளை எல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால், இந்த அனுபவங்களை எல்லாம் அனுபவித்தவர்களுக்கு தான் உண்மையான வலி தெரியும். வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டவன், உழைப்பை பற்றிய அங்கீகாரம் மறுக்கப்படும் போது இயற்கையாக கோபம் வருவது வாடிக்கை தான். உரிமையை மீட்பதற்காக போராடுவது சண்டை என்று எடுத்துக்கு கொண்டால் அதுவும் நியாயமான நிகழ்வு தான்.
புறக்கணிக்கப்பட்டவனுக்கு தான் இரணங்கள் தெரியும். பேசுவோர் பேசட்டும். ஏசுவோர் ஏசட்டும்.
"விழுந்தவனுக்கு
தான் வலி தெரியும்,
எழுந்தவனுக்கு
தான் வாழ்க்கை தெரியும்.."
எரியும் நெருப்பாய் இரு,
எரிந்த விறகாய் இராதே..
சாம்பலுக்கு இங்கு முகவரி
கிடையாது..
நீ சாதித்தால்
உன் முகவரி தொலையாது..
நம் அருமை தெரியாதவர்களின் இருப்பாய் இருப்பதை விட, இழப்பாய் இழப்பதே மேல்...
#பொது_வாழ்வு
#சில_சிந்தனைகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-07-2017
No comments:
Post a Comment